• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-02-03 09:30:05    
வெண்ணிலா தேனீர் விடுதி

cri

"இந்த விடுதிக்கு நான் வருகை தருவது இதுவே முதல் முறையாகும். பச்சை தேயிலை எனக்கு மிகவும் பிடிக்கும். லுங்சிங் தேயிலைக் கொண்டு தயாரிக்கப்பட்ட தேனீரையும் சில முறை விரும்பி குடித்திருக்கிறேன். இந்த விடுதியின் அலங்காரம் எனக்கு மிகவும் பிடிக்கும். தேனீர் விடுதியின் சூழ்நிலை மிக சிறப்பாக இருக்கின்றது" என்று இந்தச் செல்வி கூறினார். சிகு எனும் ஏரியின் ஓரத்தில் உள்ள சிங்தெங் தேனீர் விடுதியினஅ அமைப்பு, அதன் மரபுமுறை தேனீர் விருந்தும் சிறப்புமிக்கவை. 2000ஆம் ஆண்டில் இந்த விடுதி ஹாங்சோ நகரின், அன்பும் சுகமும் படைத்த, பத்து தேனீர் விடுதிகளில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டது. ஒரு கூட்டு நிறுவனத்தில் பணிபுரியும் யாங் வெய் என்பவர் இந்த விடுதிக்கு, அடிக்கடி வருகை தருகிறார். அவர் கூறியதாவது—

"நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்த விடுதிக்கு வருவது வழக்கம். இந்த விடுதிக்கு வெளியே, இயற்கை காட்சி மிகவும் அழகானது, தேனீர் கலைச் செல்வியர், மரபுமுறை தேனீர் விருந்தை நடத்துவதை பார்ப்பது, ஒரு வகை அனுபவமாகும். சில வேளையில் பகலில் தேனீர் அருந்துவதோடு வியாபார பேச்சுவார்த்தை நடத்துகிறேன். சில வேளையில் இரவில் இங்கு வந்து நண்பர்களுடன் உரையாடுகிறேன். எதைப் பற்றியும் உரையாடலாம்" என்றார் அவர்.

தேனீர் அருந்துவது என்பது, ஹாங்சோ மக்களின் வாழ்க்கையில் இன்றியமையாதது. பண்டைக் காலம் முதல் இன்று வரை, இந்த வழக்கம் நீடித்து வருகிறது.

ஒரு குடுவை தேனீரைத் தயாரித்து, சற்று நேரம் உரையாடுவதன் மூலம் உடல் சோர்வை நீக்கிக் கொள்ள முடியும். இந்த அனுபவம் மிகவும் சிறப்பானது. நீங்கள் சீனாவின் ஹாங்சோ நகருக்கு வர வாய்ப்பு கிடைத்தால், அங்குள்ள அழகான இயற்கை காட்சியை கண்டு மகிழ்வதுடன், தேனீர் விடுதியில் தேனீர் அருந்தும் அனுபவத்தையும் பெறலாம்.


1  2  3