• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-02-05 22:01:12    
தமிழ் மூலம் சீனம் பாடம் 5

cri

வணக்கம் நேயர்களே. கடந்த முறை ஓர் உரையாடலைப் படித்தறிந்தோம். அதன் மூலம் சீன மொழியில் நலம் விசாரிப்பது எப்படி என்பதை அறிந்திருப்பீர்கள் என்று நம்புகின்றேன். உரையாடலில் இடம்பெற்ற 吗? 很, 也 ஆகிய மூன்று சொற்களும் உங்கள் மனதில் பதிந்திருக்கும் என்று நம்புகின்றேன்.

முதலில் கடந்த முறை படித்த உரையாடலைக் கேளுங்கள்.

A. 你好吗?NI HAO MA?

B. 我很好,你好吗?WO HENHAO, NI HAO MA?

A. 我也很好!WO YE HEN HAO

B. இப்பொழுது, ஒரு வாக்கியம் படிக்க இருக்கின்றோம்.

你身体好吗? (NI SHEN TI HAO MA)உங்கள் உடல் நலம் எப்படி என்பது இந்த வாக்கியத்தின் பொருளாகும். இதில், 身体(SHEN TI)என்றால், உடல் என்பது பொருள். 吗?(MA)என்பது ஒரு வினாக் குறியாகும். இது ஏற்கனவே உங்களுக்குத் தெரிந்தது தான். இப்போது என்னுடன் சேர்ந்து படியுங்கள்.

你身体好吗?

அடுத்து ஓர் உரையாடலைக் கேளுங்கள்.

你身体好吗?(NI SHEN TI HAO MA) உங்கள் உடல் நலம் எப்படி?

我身体很好,谢谢你!(WO SHEN TI HEN HAO, XIE XIE NI) நலம், நன்றி!

இருவர் சந்திக்கும் போது, பரஸ்பரம் நலம் விசாரிக்கும் போது, இந்த உரையாடல் பயன்படலாம்.

இங்கு, 谢谢(XIE XIE)என்றால், நன்றி என்று பொருள். உங்களுக்கு உதவி செய்தவருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் அல்லவா? சீன மொழியில் 谢谢(XIE XIE)என்று சொல்ல வேண்டும்.

இப்பொழுது இந்த உரையாடலை மீண்டும் படிப்போம்.

 你身体好吗? 我身体很好, 谢谢!

நாம் ஏற்கனவே படித்தறிந்த இரண்டு உரையாடல்களையும் மீண்டும் ஒருமுறை கேளுங்கள்.

1. 你好吗?

我很好,你好吗。

我也很好。

2. 你身体好吗?

我身体很好,谢谢!

இந்த இரண்டு உரையாடல்களும் உங்கள் மனதில் பதிந்திக்கும் என்று நம்புகின்றேன். பாடத்துக்குப் பின், நன்கு பயிற்சி செய்யுங்கள் அடுத்த நிகழ்ச்சியில் சந்திப்போம். இத்துடன், தமிழ்ச்செல்வம் வழங்கிய தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சி நிறைவடைகின்றது.