• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-02-21 11:22:44    
வளர்ந்து வரும் பேங் நிங் மஞ்சு இன தன்னாட்சி மாவட்டம்

cri

பெய்ஜிங் மாநகரிலிருந்து சுமார் 400 கிலோமீட்டர் தொலைவில், ஹோபெய் மாநிலத்தின் பேங் நிங் மஞ்சு இன தன்னாட்சி மாவட்டம் அமைந்துள்ளது. அதன் நிலப்பரப்பு 8765 சதுர கிலோமீட்டராகும். மக்கள் தொகை 3 லட்சத்து 80 ஆயிரமாகும். மஞ்சு இனத்தவரின் எண்ணிக்கை, மோத்த மக்கள் தொகையில் 67 விழுக்காடு வகிக்கிறது. மஞ்சு இனத்தைத் தவிர, ஹுய், மங்கோலிய, பூ யி உள்ளிட்ட 14 சிறுபான்மை தேசிய இனங்கள் இங்கு வாழ்கின்றன. மலைப் பிரதேசமும் புல் வெளியும் ஒன்றிணையும் இடத்தில் அமைந்துள்ளதால், இம்மாவட்டத்தின் இயற்கை சூழ்நிலை சிறப்பாக இல்லை. 1990ஆம் ஆண்டுகளுக்கு முன், எந்த தொழில் துறையும் இங்கு இல்லை. பொருளாதாரம் மிக மந்தமாக வளர்ச்சியுற்று வந்தது. கடந்த 5 ஆண்டுகளில், உள்ளூர் தனிச்சிறப்புகளை முழுமையாகப் பயன்படுத்த, இம்மாட்டம் வழியைப் பார்த்து வருகிறது. இப்போது, பாதகமான நிலையை அது மாற்றி, பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்தியுள்ளது.

பெய்ஜிங்கிலிருந்து புறப்பட்டு, மலைப் பாதை வழியாக, 4 மணிகளுக்குப் பின், பேங் நின் மாவட்டம் நாங்கள் வந்தடைந்தோம். வழி நெடுகிலும், கம்பீரமான மலையும் தெளிந்த ஆற்று நீரும் காணப்படுகின்றன. பேங் நிங் மாவட்டத்துக்குச் செல்லும் சாலையில், பேருந்துகளும் கார்களும் போய் வருகின்றன. காய்கறிகளை ஏற்றிச்செல்லும் லாரிகளும், இம்மாவட்டத்திலிருந்து வெளியே வந்த வண்ணம் உள்ளன. இதிலிருந்து, இம்மாவட்டத்தின் வளர்ச்சியை நீங்கள் உணர முடியும்.

1  2  3  4