• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-04-04 12:39:25    
சீனாவில் சில்லறை விற்பனை துறை

cri

சீனாவின் பல பெரிய நகரங்களில், வேறுபட்ட பாணியுடைய சில்லறை விற்பனை கடைகளை நீங்கள் காணலாம். சீன வணிகர் நடத்தும் பல சரக்கு கடைகள் மட்டுமல்ல, Wal-mart, Carrefour, Metro முதலிய பன்னாட்டு சில்லறை விற்பனை தொழில் நிறுவனங்கள் நடத்தும் பேரங்காடிகளும் காணப்படுகின்றன. சில்லறை விற்பனை கடைகள் தனிச்சிறப்பு வாய்ந்த வியாபார நுட்பத்துடன், குறைவான விலையில் தரமிக்க வணிகப் பொருட்களையும், சிறப்பான சேவைகளையும் நுகர்வோருக்கு வழங்குகின்றன. பெய்ஜிங்கில் பணி புரியும் சு ஆ தைய் அம்மையார், ஓய்வு நேரத்தில் சந்தைக்குப் போக விரும்புகின்றார். பெய்ஜிங்கில் பல கடைகள் உள்ளன. அந்நிய முதலீட்டு அங்காடிகளுக்கும் சீன கடைகளுக்கும் இடையே போட்டி தீவிரமாக இருக்கிறது. தன்னை போன்ற சாதாரண மக்களுக்கு இது நன்மை பயக்கும் என்று அவர் கூறினார்.

"அந்நிய முதலீடு சீன சில்லறை விற்பனை சந்தையில் நுழைந்ததால், எங்களுக்குத் தான் உண்மையான நன்மை என்று நுகர்வோர் என்ற முறையில், நான் கருதுகிறேன். அந்நிய முதலீட்டு அங்காடிகளும் உள் நாட்டு கடைகளும் எங்களுக்கு மேலும் சிறப்பான பொருட்களை வழங்குகின்றன. பொருட்களைப் பார்த்து தெரிவு செய்து வாங்க நுகர்வோருக்கு வாய்ப்புக்கள் அதிகம். அதிலும், அந்நிய முதலீட்டு அங்காடிகள் உள் நாட்டு கடைகளுடன் போட்டியிடுவதால், வணிகப் பொருட்களின் விலை சரிப்படுத்தப்படுகிறது. விலை குறைவான தரமிக்க பொருட்கள் கூடுதலாகும்" என்றார் அவர்.

உலக வர்த்தக அமைப்பில் சேர்ந்த போது சீனா அளித்த வாக்குறுதிக்கிணங்க, 2004ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 11ஆம் நாள் முதல், சீனாவின் சில்லறை விற்பனை துறை அந்நிய முதலீட்டுக்கு முழுமையாகத் திறந்து வைக்கப்படுகிறது. அந்நிய முதலீட்டு குழுமம் சீனாவில் அங்காடியை நடத்துவதற்கு இடம் மற்றும் எண்ணிக்கை வரையறை இல்லை.

சீனாவின் சில்லறை விற்பனை துறையில் 1992ஆம் ஆண்டு முதல் அந்நிய முதலீடு அனுமதிக்கப்பட்டது. இது வரை, உலகின் மிகப் பெரிய 50 சில்லறை விற்பனை குழுமங்களில் 40க்கு அதிகமான குழுமங்கள் சீனாவில் வியாபாரத்தைத் தொடங்கியுள்ளன. அந்நிய முதலீட்டு வணிக தொழில் நிறுவனங்கள் சீனாவில் நிறுவிய கிளைகளின் எண்ணிக்கை ஈராயிரத்தைத் தாண்டியுள்ளது.

1  2  3