• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-04-04 15:42:06    
நேயர் நேரம்82

cri
ஜனவரி திங்கள் முதலாம் நாள் இடம் பெற்ற செய்திகளில் நிலநடுக்கம் மற்றும் கடல்கொந்தளிப்பாள் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு சீனா பெரிதும் உதவும் என்பதை அறிந்து மன நிறைவு கொண்டேன். ஆபத்தின் போது உதவுபவனே உண்மையான நண்பன். ஒரு உண்மையான நன்பன் என்பதை நட்பு நாடுகளுக்கு சீனா புரிய வைத்திருக்கிறது என்று கூறி நேயர் செல்வம் பாராட்டியுள்ளார் அறிவியல் உலகம் நிகழ்ச்சியில் 12 வயதிற்கு குறைவான குழந்தைகள் நன்கு தூங்க வேண்டும் சிறுவயதில் சிறுவர்களுக்கு ஆழ்ந்த தூக்கம் இருந்தால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்ற செய்தியை சீன வானொலி மூலம் அறிந்தேன். புகை பிடிப்பதைப் பற்றி புகையினால் ஏற்படும் பாதிப்பைப் பற்றியும், அறிந்தேன். இன்றைய அறிவியல் நிகழ்ச்சி சிறப்பாக அமைந்தது. பயனுள்ள பல தகவல்களை தந்தது. மீன் கோழி இவைகளையும் பால் தயிரையும் குறைவாக உண்ணலாம் என்று கூறி மனித சமுதாயத்திற்கு எதாண்டுபுரிந்த முனைவர் திரு கடிகாசலம் அவர்களுக்கு சீன அரசு விருது வழங்கி உள்ளது என்பது நல்ல செய்தி ஒரு தமிழருக்கு இந்த விருது கிடைத்தது பற்றி நினைக்கையில் மனம் பூரிப்பு அடைகிறது. என்று சேந்தமங்கலம் நேயர் எஸ் ஆர் ராஜமாணிக்கம் தமது கடந்த டிசம்பர் திங்களில் எழுதிய கடிதங்களில் தெரிவித்துள்ளார் சீன பண்பாடுகள் பற்றிய நிகழ்ச்சியின் மூலம் சீனாவில் நடைபெறும் விழாக்கள் பற்றியும் அவர்களின் பண்பாட்டையும் அறிந்து கொண்டேன். வசந்த விழாவின் போது ஒரு வருக் கொருவர் அன்புடன் வாழ்த்துக் கூறி மகிழ்கின்றனர், மேலும் பெரியவர்களை வணங்கி அவர்களின் ஆசீர்வாதங்களையும் வாழ்த்துகளையும் பெறுகின்றனர் என்பது போன்ற பல செய்திகளை அறிய முடிகிறது என்று சேந்தமங்கலம் எம் அ அபுதாஹிர் தமது கடந்த செப்தம்பர் திங்களில் எழுதிய கடிதங்களில் தெரிவித்தார். சீன கதை நிகழ்ச்சி இன்று மீனவன் என்னும் கதை வழங்கியவர் ந கடிகாசலம். மன்னர் இனிமையான புல்லாங் குழல் இசையை கேட்டு தன் மகனுக்கு கற்று தருமாறு கூறினார். மீனவன் அதற்கு ஒப்பு கொண்டு கற்று தந்தான் இளவரசனுக்கு. மன்னர் உனக்கு என்ன வேண்டுமே கசானவில் இருந்து எடுத்து செல் என்றார். போர்வையும் கூடையும் எடுத்தான் எனக்கு இது மீன் பிடித்து கொள்ள உதவும். தங்கம், வெள்ளி பணம் என்னை சோம்பேறியாக்கலாம் உழைப்பு எனக்கு வேண்டும் என்று உழைப்பின் பெருமையை உணர்த்தினான். இக்கதை மனித வாழ்க்கைக்கு மிகவும் பொருமை சேர்க்கும் ஒரு பாடம் ஆக இருக்கும். மிகவும் அருமையான கதை இது என்று சேந்தமங்கலம் எஸ் ராஜநாசிம்மன் தமது கடிதங்களில் கருத்து தெரிவித்துள்ளார். எரி ஆற்றலின் தொடர்ச்சியான பயன்பாடு செய்தி தொகுப்பு கேட்டேன். எரி ஆற்றலின் தொடர்ச்சியான சீரான விநியோகத்திற்கு உத்தரவாதம் தருவதள்காக புதுப்பிக்கவல்ல எரி ஆற்றலின் சட்டத்தின் மூலம் சீர்குளைவை மாற்றியமைக்க இருப்பது பாராட்டுக் குரியது. சீன நிரந்தர கமிட்டியின் கூட்டத் தொடரில் புதுபிக்க வல்ல எரி ஆற்றல் பற்றிய வரைவு சட்டம் பரிசிலைனைக்காக சீனாவின் சட்டம் இயற்றல் கமிட்டிக்கு முதன் முறையாக வழங்கப் பட்டுள்ளது பற்றி அறிந்தேன். நல்ல வளர்ச்சிக்கு இந்த சட்டம் வழிவகுக்கும் என்று முனுகப்பட்டு பி கண்ணன் சேகர் தமது கடந்த டிசம்பர் திங்களின் கடிதங்களில் குறிப்பிட்டுள்ளார். சீனப் பண்பாடு நிகழ்ச்சியில் சமையலறை தெய்வம் பற்றி அறிவிப்பாளர் கடிகாசலம் அவர்கள் கூறியது. பழைய சீனாவில் சமையலறை செய்வம் என்பது தீயைக் கண்டு பிடித்த தெய்வம் என்பதால் மக்களால் வணங்கப்பட்ட தெய்வமாக இருந்தது. ஒவ்வொரு வீட்டின் சமையலறையே சமையல் செய்வத்தின் வழிபாட்டுத் தலமாக விளங்கியது. இந்த தெய்வத்தின் வாகனமாக கரப்பான் பூச்சி உள்ளதாக நம்பப்படுகிறது. இரண்டு ஆயிரம் ஆண்டு வரலாறு கொண்ட இந்த சமையல் அரை தெய்வத்தை வழிபடும் சமயத்தில் ஒரு குவளை தண்ணீர் மூன்று ஊதுபத்திகள் வைத்து வணங்கப்படுகிறது. வசதி உள்ள காலத்தில் சர்க்கரையை வைத்து வனங்குகிறோம் என்று எழுதி மன்னிப்பு வின்ணப்பம் வைக்கப்படுகிறது. கதை ஒன்றும் நிகழ்ச்சியில் சொல்லப்பட்டது. நிகழ்ச்சியை வழங்கிய கடிகாசலம் அவர்களுக்கும் என் இனிய சீன வானொலிக்கும் என் நன்றிகள்