• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-06-07 08:39:27    
சில யோசனைகள்

cri
ரா--------தர்மபுரி மாவட்டம் ராமியம் பட்டி நேயர் எஸ் நவீன் சீன வானொலியின் இளைய நேயர்களுக்காக தினமும் ஒரு தமிழ்ப்பாடலை ஒலிபரப்பலாமே என்று எழுதியுள்ளார். வி--------நன்றி. யோசனைகளையக் கவநிக்கிறோம். ரா-------திருநெய்வேலி மாவட்டம் கடையாவருட்டி நேயர் மு பிச்சைமணி ஏப்ரல் 7ம் நாள் எழுதிய கடிதத்தில் நமது பல நிகழ்ச்சிகளைப் பாராட்டியுள்ளார். குறிப்பாக காதுபராமரிப்பு குறித்து அறிவியல் உலகம் நிகழ்ச்சியில் கூறியது நன்று என்று குறிப்பிட்டுள்ளார். திருச்சி மாவட்டம் மணக்கால் நேயர் ரா அன்பழகம், நாம் பிப்ரவரி திங்களில் ஒலிபரப்பிய சீன வணக்கச் சந்தை பற்றி நிகழ்ச்சிகல் பயனுள்ல தகவல்களைத் தந்ததாகக் கூறுகிறார். கோவை மாவட்டம் மோப்பிரிபாளையும் நேயர் பி தங்கரரிக், ஏப்ரல் திங்களில் நாம் ஒலிபரப்பிய பல நிகழ்ச்சிகளைப் பாராட்டிவிட்டு, சில நிகழ்சிசகள் பற்றிக் கருத்துக்களையும் தெரிவித்துள்ளார். குறிப்பாக, ஏப்ரல் 8 அன்று நட்புப் பாலம் நிகழ்ச்சியில் சீனாவில் பணிபுரியும் சமையல் கலைஞர் புதுக்கோட்டை ராமநாதனின் கலந்துரையாடல் அருமை. அதே போல உங்கள் குரல் நிகவ்ச்சியில் புதுவை நேயர் மன்றம் தயாரித்து வழங்கிய நிகழ்ச்சி மிக நன்றாக இருந்தது. பல பகுதிகளுக்குச் சென்று சீன வானொலி தமிழ் நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்துவதோடு, நேயர்களை இனங்கண்டு ஊக்கம்படுத்துகின்றனர். இது வரவேற்கத்தக்கது. புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகளில் நேயர் மன்றங்களை பற்றிப் பேசியே நேரத்தைக் கடத்தி விட்டார்கள் என்று எழுதியுள்ளார். வி------பாராட்டுகலுக்கும், கருத்துக்களுக்கும் நன்றி நேயர்களே. நட்பு பாலம் நிகழ்ச்சி பற்றி நீலகிரி மாவட்டம் கீழ்குந்தா நேயர் கே கே போஜன் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதைப் படிக்கினீர்கள ராஜா ரா-------சரி. இதுவரை பொறியாளர் எழுத்தாளர். டாக்டர் என பலவகை அறிஞர்களைத் தான் பேட்டி எடுத்து ஒலிபரப்பினீர்கள். இப்போது உணவு விடுதியில் புரோட்பா போடும் சாதாரண தொழிவானியை பேட்டியை ஒலிபரப்பினீர்கள் கேட்கச் சுவையாக இருந்தது என்று போஜன் பாராட்டியுள்ளார். மேலும் சர்வதேச நூல் காட்சி பற்றிய தொகுப்பு நிகழ்ச்சி நன்றாக இருந்தது. இன்பப் பயணம் நிகழ்ச்சியில் யேப் இன மக்கள் பற்றிய தகவல் அருமை அவர்கல் வெள்ளை நிறக்கால் சட்டை அணிவார்கள் என்று கூறினீர்கள். நீலகிரிப் பகுதியிலும் படுக இன மக்கள் குடும்பக் கொண்டாட்ட நாட்களில் வெள்ளை நிறைவேட்டி அணிவர். மகளிர் வெள்ளை வேட்டியை தலையில் இருந்து கால்வரை போர்த்திருக்கொல்வார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். வி--------பாராட்டுக்கு நன்றி. நீங்கல் கூறியது போல சீன இந்திய மக்களின் பழக்கவழ்ககங்களில் காணப்படும் ஒற்றுமை வேற்றுமைகலை நீங்கள் தெரிவிக்கலாம்.