• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-11-24 12:00:37    
பெய்ச்சிங் வன மிருகக் காட்சிசாலை

cri

வட பகுதியின் வானிலையில், வெப்ப மண்டலக் காட்டுப் பிரதேசத்தை உருவாக்கும் பொருட்டு, சில வெப்ப மண்டல தாவரங்களைப் பியிரிட்டு, வெப்ப நிலையைச் சரிப்படுத்தும் அதே வேளையில், இந்த வெப்ப மண்டல விலங்குகள் மீது திவலை தூவி, செயற்கை மழையையும் உருவாக்க வேண்டும் என்று வளர்ப்பாளர் தெரிவித்தார். மிருகங்கள் சுதந்திரமாகத் திரியும் பகுதியில் பேரூந்தில் அமர்ந்த வாறு வெளியேயுள்ள விலங்குகளைப் பார்வையிடலாம். இப்பகுதியில், கரடியும் மானும் ஒரே இடத்தில் வாழ்கின்றன. காட்டுப் பன்றியும் ஓநாயும் வேறு இடத்தில் வாழ்கின்றன. கரடி மற்றும் மானின் வீட்டில், குட்டி கரடி, மரத்தின் இலையை விழுங்கித் தின்கிறது. அதற்கு அருகில், தன் அழகான கண்ணைத் திறந்து, குட்டி கரடியை மான் பயத்துடன் காண்கிந்றது. அது முன் வரத் துமியவில்லை. அதிலிருந்து விலகவும் விரும்பவில்லை. அறவே தைரியம் அற்ற கணத்தைக் காட்டுகின்றது.

இந்தக் கண்காட்சி முறை, சீனாவில் முதல் முறையாகும். இது பயணிகளுக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. வாங்வெய் என்னும் அம்மையார் கூறியதாவது, இந்தப் பகுதியில், பயணிகள் பேரூந்திலும் மிருகங்கள் வெளியுயும் இருக்கின்றனர். மனிதன் ஒரு கூண்டில் இருக்கும் அதே வேளையில் மிருகங்கள் வெளியே இருப்பதென்ற உணர்வு எனக்குத் தோன்றியது. இது புதுமை மிக்கது என்று நினைத்தேன். குழந்தைகளுக்கான மிருகப் பகுதியில், அண்மையில் பிறந்த தியன்தியன், காங்காங் என்னும் இரண்டு புலிக் குட்டிகளைக் காணலாம். அவை இரண்டும், ஒரே வயதுடைய சிங்கக் குட்டி மற்றும் குட்டி ஓநாய்களுடன் சேர்ந்து வாழ்கின்றன. குழந்தைகளுக்கான விலங்குப் பகுதியில் இந்த இரண்டு புலிக் குட்டிகளை விட மேலும் சிறிதாக இருக்கும் மிருகங்களும் இருக்கின்றன. குட்டி வளர்ப்பு அறையில், அண்மையில் பிறந்த பால் ஊட்டும் விலங்குகளும் உள்ளன. அவை, நிலையான வெப்பமுடன் கூடிய கண்ணாடி பெட்டியில் வாழ்கின்றன. குழந்தைகள், வளற்ப்பாளர்களின் உதவியுடன், இந்தச் சிறிய மிருகங்களின் வளற்ப்புப் போக்கைப் பார்வையிடலாம்.


1  2