• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-04-04 14:50:53    
ச்சாஞ்சோ நகரின் தைவான் விவகார அலுவலகம்

cri

"ச்சாஞ்சோ நகரில் கதைகள் அதிகம்

இன்பமும் மகிழ்ச்சியும் தருகின்றன

ச்சாஞ்சோ நகருக்கு நீங்கள் வந்தால்

அமோகம் பயன் பெறலாம்"

நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது, 1980ஆம் ஆண்டுகளில் சீனர்களுக்கு நன்கு தெரிந்த பாடலாகும். "சிறு நகரின் கதை" என்பது, இப்பாடலின் தலைப்பு. பல ஆண்டுகளுக்கு பின், இப்பாடலை உருவாக்கிய ஆசிரியர் Zhuang Nu தனது மூதாதையர் பிறந்த ஊரான Fu Jian மாநிலத்தின் ச்சாஞ்சோ நகருக்கு திரும்பிய போது, இந்த பாடலை ச்சாஞ்சோவுக்கு வழங்கினார். மூதாதையர் பிறந்த ஊர் மீது இம்முதியவர் கொண்டுள்ள ஆழந்த அன்பை இப்பாடல் வெளிப்படுத்துகின்றது.

Fu Jian மாநிலத்தின் தென் முனையில் அமைந்துள்ள ச்சாஞ்சோ நகருக்கும், தைவான் தீவுக்குமிடையில் நீரிணை மட்டும் அமைந்துள்ளது. ச்சாஞ்சோ தைவான் உடன்பிறப்புகளின் மூதாதையர் பிறந்த ஊராகும். பல தைவான் வணிகர்கள் இங்கு வந்து முதலீடு செய்கின்றனர். ச்சாஞ்சோ நகரில் கதைகள் அதிகம் என்றால், உண்மையில் பல கதைகள், தைவான் வணிகர்களுடன் தொடர்புடையவை. தைவான் வணிகர்களின் வாழ்க்கையுடனும், அவர்களின் வணிக நடவடிக்கைகளுடனும் நெருங்கிய தொடர்புடையது, ச்சாஞ்சோ நகரின் தைவான் விவகார அலுவலகமாகும். இன்றைய நிகழ்ச்சியில், இந்த அலுவலகம் பற்றி அறிமுகப்படுத்துகின்றோம்.

இரு கரைக்கிடையிலான பரிமாற்றம் 

ச்சாஞ்சோ நகர், சுமார் 1400 ஆண்டுகால வரலாறு உடையது. பண்டைக்காலத்தில், ச்சாஞ்சோ நகருக்கும், தைவான் தீவுக்கும் இடையே படகு மூலமான பரிமாற்றம் அதிகம். கடலின் மறுபுறத்தில் உள்ள தைவான் தீவுக்கு ச்சாஞ்சோ வாசிகள் குடிபெயர்ந்தனர். அப்போது, ச்சாஞ்சோ நகரின் முன்னேறிய வேளாண் மற்றும் மீன்பிடி நாகரீகத்தை தைவானுக்கு அவர்கள் கொண்டு சென்றனர். ஆகவே, இப்போது, தைவானில், மூன்றில் ஒரு பகுதியினரின் மூதாதையர் பிறந்த ஊர், ச்சாஞ்சோ நகராகும். தற்போது, தைவான் தீவில் வாழும் மக்கள், ச்சாஞ்சோ நகருக்குத் திரும்பி, முதலீடு செய்து, தொழில் நடத்த துவங்கியுள்ளனர்.

1980ஆம் ஆண்டில் முதலாவது தைவான் முதலீட்டுத் தொழில் நிறுவனம் ச்சாஞ்சோ நகரில் நிறுவப்பட்டது முதல், 2005ஆம் ஆண்டின் இறுதி வரை, 2106 தைவான் முதலீட்டுத் திட்டப்பணிகள் இந்நகருக்கு உட்புகுத்தப்பட்டுள்ளது. உடன்படிக்கையின் மதிப்பு, 780 கோடி அமெரிக்க டாலரை தாண்டியது. உண்மையில் பயன்படுத்தப்படும் நிதித்தொகை, 460 கோடி அமெரிக்க டாலராகும். தைவான் வணிகர்களின் விருப்பத்தை ச்சாஞ்சோ நகர் பெறுவது, சொந்த ஊருடன் தொடர்புடைய உணர்வு காரணியைத் தவிர, இந்நகரின் சிறந்த முதலீட்டுச் சூழலும் முக்கிய காரணமாகும். ச்சாஞ்சோ நகரின் தைவான் விவகார அலுவலகத்தின் சிறந்த சேவையும் குறிப்பிடத்தக்க காரணியும் ஆகும் என்று இவ்வலுவலகத்தின் தலைவர் Zhou Yue Hong கூறினார். அவர் கூறியதாவது:

"தைவான் வணிகர்கள் முதலீடு செய்வதற்கு முன், நாங்கள் செவ்வனே திட்டமிடுகின்றோம். செவ்வனே ஆயத்தம் செய்கின்றோம். இந்நகருக்கு வந்தப் பின், அவர்களுக்கு முழுமையானச் சேவைகளை வழங்குகின்றோம்" என்றார், அவர். ச்சாஞ்சோ நகரின் நிலப்பரப்பு பெரியதல்ல. ஆனால், நகரில் தைவான் வணிகர்கள் அதிகமாக வாழ்கின்றனர்.

                   ச்சாஞ்சோ நகரின் தைவான் தொழில்நிறுவனம்

தைவானில் புகழ் பெற்ற Tai Su குழுமம், Tong Yi குழுமம் மற்றும் Tsann Kuen குழுமம், ச்சாஞ்சோ நகரை பெருநிலப்பகுதியில் வளர்ந்து வரும் தமது தலைமையகமாக கருதுகின்றன. ச்சாஞ்சோ நகரின் சாலைகளில், Tsann Kuen குழுமத்தின் விளம்பரங்கள் பல இடங்களில் காணப்படுகின்றன. இந்த சிறு ரக வீட்டு பயன்பாட்டு மின்சாரக் கருவித் தயாரிப்புக் குழுமம் உலகில் புகழ் பெற்றது. இக்குழுமம் ச்சாஞ்சோ நகரில் முதலீடு செய்து, தொழில் நடத்திய பின், பெருநிலப் பகுதியின் சந்தை, கொள்கை, உழைப்பாற்றல் உள்ளிட்ட மேம்பாடுகளை சார்ந்திருந்து, படிப்படியாக வளர்ந்து வருகின்றது.