• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-06-06 09:31:15    
தமிழ் மூலம் சீனம் பாடம் 83

cri

கலை.....வழக்கம் போல இன்று புதிய வகுப்பு துவங்குவதற்கு முன் நாம் கடந்த வகுப்பில் கற்றுக் கொண்ட சொற்களை மீளாய்வு செய்யலாமா?

கிளிடஸ்........செய்யலாம். நான் முதலில் பயிற்சி செய்வேன். நீங்கள் கேளுங்கள். ஒரு சிறிய தேர்வு சோதனையாக இதைக் கருதலாம்.

கலை.......சரி உங்களை பொறுத்தவரை கடந்த வகுப்பு முதலாவது வகுப்புதானே.

கிளிடஸ்........ஆமாம். வகுப்புக்குப் பின் நான் முயற்சி செய்தேன். உச்சரிப்பு எப்படி சரியாக இருக்குமா என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. நீங்கள் பாருங்கள்.

கலை.......சரி நீங்கள் பயிற்சியைத் தொடங்குங்கள்.

கிளிடஸ்.............தமிழிலே இன்று என்பது சீன மொழியில் 今天 ச்சின் தியென், தமிழிலே என்பது நாளை சீன மொழியில் 明天மிங் தியன், தமிழிலே நாளை மறுநாள் என்பது சீன மொழியில்后天ஹொ தியன்,தமிழிலே நேற்று என்பது சீன மொழியில் 昨天ச்சோ தியன், தமிழிலே நேற்று முன்தினம் என்பது சீன மொழியில் 前天ச்சியன் தியன். நான் சொன்னது சரிதானே கலை?

கலை........நீங்கள் சொன்ன சீன சொர்கள் சரிதான். வாக்கியத்தில் இவற்றை சேர்த்து பயன்படுத்துவதில் நீங்கள் எப்படி என்று எனக்கு தெரியாது. எனவே வாக்கியம் அமைத்து பயிற்சி செய்யுங்கள், பார்க்கலாம்.

கிளிடஸ்............ நான் முயற்சி செய்வேன்.

கிளிடஸ்........ 今     天               是   星       期   日 
                        ச்சின் தியென் ஷ் சிங் ச்சி ழ்

கலை...............இன்று ஞாயிற்று கிழமை.

கிளிடஸ்.........明       天        是       星          期 一 
                           மிங் தியன் ஷ் ச்சின் ச்சி யி.

கலை.............நாளை திங்கள் கிழமை.

கிளிடஸ்.......后          天         是      星      期 五
                       ஹொ கியன் ஷ் சிங் ச்சி வூ.

கலை............நாளை மறுநாள் வெள்ளிக் கிழமை.

கிளிடஸ்..........昨          天        是      星      期       三 
                           ச்சோ தியன் ஷ் சிங் ச்சி சான்

கலை............ நேற்று புதன் கிழமை.

கிளிடஸ்.......前           天        是      星      期   四
                    ச்சியன் தியன் ஷ் சிங் ச்சி ஸ்

கலை..........நேற்று முன்தினம் வியாழக் கிழமை.

கிளிடஸ் உங்கள் உச்சரிப்பை பார்த்தால் வகுப்புக்குப் பின் நீங்கள் பயிற்சி செய்தீர்கள். அப்படிதானே.

கிளிடஸ்........ஆமாம். நான் பல முறை பயிற்சி செய்தேன். பயிற்சியிலிருந்து பார்த்தால் சீன மொழி கற்றுக் கொள்வதில் கடும் இன்னல் இருக்காது என்றே தோன்றுகின்றது. நன்றாக படித்து அன்றாட வாழ்க்கையில் இவற்றை பயன்படுத்தி பேசினால் சீக்கிரமாக கற்றுக் கொள்ளலாம் என்று நான் நினைக்கின்றேன்.

கலை.........நீங்கள் சொன்ன கருத்தை ஒப்புக் கொள்கின்றேன். எதை கற்றுக் கொண்டாலும் கற்றுக் கொள்ளும் போது பிரச்சினை இல்லை. ஆனால் சில நிமிடம் கழிந்த பின் பயிற்சி இல்லையானால் படித்து அனைத்தும் சில நிமிடம் கழிந்ததும் மறுந்து விடும். சரிதானே.

கிளிடஸ்........ஆமாம். ஆகவே பயிற்சி செய்து கல்வி பெறுவதில் முக்கிய வழி முறையாகும்.

கலை.......சரி இன்றைய வகுப்பின் இரண்டாவது பகுதியில் ஒரேயொரு சொல் படிக்கலாம்.

கிளிடஸ்.......அப்படியா. அது என்ன சொல்.

கலை.........நியன்.

கிளிடஸ்....... சீன மொழியிலே நியன் என்பது தமிழில் என்ன அர்த்தம்.

கலை......நீங்கள் யோகித்து சொல்லுங்கள்.

கிளிடஸ்........தியன், வாரம், யூயே போன்ற நேரம் கழிக்கும் சொற்களை கற்றுக் கொண்டோம். எனக்கு புரிந்தது இது கண்டிப்பாக ஆண்டு என்பதை குறிக்கின்றது. அப்படிதானே.

கலை......புத்திசாலி. சீன மொழியில் நியன் என்றால் தமிழில் ஆண்டு என்பதை குறிக்கின்றது.

கிளிடஸ்.......அப்படியிருந்தால் முன்பு நாம் கற்றுக் கொண்ட மிங் தியன், ஹொ தியன், ச்சியன் தியன் போன்ற நாள் குறித்த சொற்களில் தியனுக்குப் பதிலாக நியன் சேர்த்தால் பல சொற்களை உருவாக்கலாமே.

கலை........ஆமாம். அது தான் சரியான படிப்பு வழி முறை. இந்த சூழ்நிலையில் நீங்கள் முதலில் இன்றைய வகுப்பின் இரண்டாவது பகுதியில் கற்றுக் கொள்ள வேண்டிய வாக்கியங்களை குறிப்பிடுங்கள்.

கிளிடஸ்........மகிழ்ச்சி. நான் முயற்சிக்கின்றேன்.

கலை......நான் தமிழில் சொல்வேன். நீங்கள் சீன மொழியில் மொழியாக்குங்கள்.

கிளிடஸ்........ சரி உங்களை பின்பற்றி சீன மொழியில் சொல்லேன்.

கலை.........அடுத்த ஆண்டு.

கிளிடஸ்........明年மிங் நியன்.

கலை........கடந்த ஆண்டுக்கு முந்திய ஆண்டு.

கிளிடஸ்...........前年 ச்சியன் நியன்.

கலை...........கடந்த ஆண்டு.

கிளிடஸ்.........去年 ச்சியூ நியன்.

கலை.........அடுத்த ஆண்டுக்கு அடுத்த ஆண்டு.

கிளிடஸ்........后年 ஹொ நியன்.

கலை..... மீண்டும் சொல்லுங்கள். அடுத்த ஆண்டு.

கிளிடஸ்........明年மிங் நியன்.

கலை........கடந்த ஆண்டுக்கு முந்திய ஆண்டு.

கிளிடஸ்...........前年 ச்சியன் நியன்.

கலை...........கடந்த ஆண்டு.

கிளிடஸ்.........去年 ச்சியூ நியன்.

கலை......... அடுத்த ஆண்டுக்கு அடுத்த ஆண்டு.

கிளிடஸ்........后年 ஹொ நியன்.

கலை......இப்போது நாம் குறிப்பிட்ட வாக்கியங்கள் குறுகியவை. கொஞ்சம் நீளமாசொல்லமா?

கிளிடஸ்.......சொல்லட்டுமே.

1 2