• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-08-08 15:35:13    
தமிழ் மூலம் சீனம் பாடம் 92

cri

வாணி.........க்ளீட்டஸ். கடந்த வகுப்பில் கற்றுக்கொண்டது உங்கள் நினைவில் இருக்கிறதா?

க்ளீட்டஸ் – வீட்டில் தொடர்ந்து பயிற்சி செய்கிறேன். கேளுங்கள். கடந்த வாரம் நான் 3 புதிய சொற்களைக் கற்றுக்கொண்டேன். முதலாவது dian, 点。இதன் பொருள் மணி. அடுத்து, 开始, kai shi., இதன் பொருள் துவக்கம், துவங்குவது. மேலும், 时候, shi hou, இதன் பொருள் நேரம்.

வாணி..... நன்றாக உச்சரிக்கிறீர்கள். பாராட்டுக்கள். வாக்கியங்களுடன் சேர்ந்து இவற்றை மீளாய்வு செய்வோம்.

க்ளீட்டஸ். ... சரி.

வாணி--- 我 们 下 星 期 一 
                 Wo men xia xing qi yi
八 点 在 门 口 集 合。
Ba dian zai men kou ji he

கிளிட்டஸ்--- 我 们 下 星 期 一
                          Wo men xia xing qi yi
八 点 在 门 口 集 合。
Ba dian zai men kou ji he
நாம், அடுத்த திங்கள்கிழமை காலை எட்டு மணிக்கு வாசலில் சந்திப்போ.
வாணி— 好,下 星 期 一 见。
                  Hao, xia xing qi yi jian

கிளிட்டஸ்-- 好,下 星 期 一 见。
                        Hao, xia xing qi yi jian
சரி, அடுத்த திங்கள் கிழமை சந்திப்போம்.

வாணி -- 几 点?
                  Ji dian

கிளிட்டஸ் -- 几 点?
                           Ji dian? எப்பொழுது?

வாணி –- இங்கே வேறு ஒரு வாக்கியத்தைப் பயன்படுத்தலாம்.
什 么 时 候?
Shen me shi hou
கிளிட்டஸ் --什 么 时 候? 
                         Shen me shi hou
என்ன நேரம்?

வாணி—மேலும், நாங்கள் கற்றுக்கொண்ட 3 இறுதி ஒலிகளை மீளாய்வு செய்வோம். என்னைப் பின்பற்றி வாசியுங்கள்.
a,

கிளிட்டஸ்-- a,

வாணி—இப்போது 4 தொனி உச்சரிப்புகளுடன்,
a, a, a, a,

கிளிட்டஸ்-- a, a, a, a,

வாணி—இரண்டாவது, o

கிளிட்டஸ்-- o

வாணி—இப்போது 4 தொனி உச்சரிப்புகளுடன்,
o ,o ,o ,o

கிளிட்டஸ்-- o ,o ,o ,o

வாணி—மூன்றாவது, e

கிளிட்டஸ்—e.

வாணி—இப்போது 4 தொனி உச்சரிப்புகளுடன் வாசியுங்கள்.
e e e e

கிளிட்டஸ்-- e e e e

வாணி—மீண்டும் ஒரு முறை. e e e e

கிளிட்டஸ் -- e e e e

வாணி — நல்லது. வகுப்புக்குப் பின் நீங்கள் நன்றாகப் பயிற்சி செய்துள்ளது உறுதி.

வாணி—சரி. புதிய வகுப்பைத் துவங்கலாமா?

க்ளீட்டஸ்—கண்டிப்பாக.

வாணி—முன்பு. எண்ணிக்கை பற்றி கற்றுக் கொண்டுள்ளோம். க்ளீட்டஸ் ஒன்று முதல் 10 வரை சீன மொழியில் சொல்லுங்கள்.

க்ளீட்டஸ்—yi, er, san, si, wu, liu, qi, ba, jiu, shi.

வாணி—பரவாயில்லை. இன்று நேரம் பற்றி கற்றுக்கொள்வோம். என்னுடன் வாசியுங்கள் 分钟,fen zhong, இதன் பொருள் நிமிடம்.

க்ளீட்டஸ்—fen zhong

வாணி—அடுத்து, 小时,xiao shi, இதன் பொருள் மணி.

க்ளீட்டஸ்--小时,xiao shi

வாணி—அடுத்து, 一刻钟,yi ke zhong. இதன் பொருள் 15 நிமிடம். இங்கே ke என்பது ஆங்கிலத்தில் quarter தமிழில் கால் பகுதி போலவை.

க்ளீட்டஸ்--一刻钟,yi ke zhong. இப்படி என்றால்三刻钟,san ke zhong. என்பது 45 நிமிடம், அல்லவா?

வாணி – நல்லது. பாராட்டுக்கள். நேயர்களே, எங்களுடன் சேரந்து மேலும் அதிகமான பயிற்சி செய்யுங்கள். 一分钟

க்ளீட்டஸ் – yi fen zhong. ஒரு நிமிடம்.

வாணி – 两分钟。இங்கே, பொது வாக 两 என்பதைப் பயன்படுத்துகின்றோம். 二 என்பதைச் சொல்லவில்லை.

1 2