• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-12-12 09:35:47    
ஷாங்காயில் விவசாயத் தொழிலாளர்களின் இன்பமான வாழ்க்கை

cri

YONG SHENG அடுக்கு மாடி குடியிருப்பு

சீனாவின் நகரமயமாக்கமும் தொழில்மயமாக்கமும் முன்னேறி வருவதுடன், கிராமப்புறங்களில் எஞ்சிய உழைப்பாளர்கள் பலர் வளர்ச்சியடைந்த இடங்களுக்குச் சென்று வேலை பார்த்து வருகின்றனர். தற்போது சீனாவில் 12 கோடி விவசாயத் தொழிலாளர்கள் உள்ளனர். கட்டிடத் தொழில், துப்புரவு பணி, தயாரிப்புத் தொழில், வீட்டு வேலை உள்ளிட்ட பல பணிகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். சீனாவின் கிழக்கு பகுதியிலுள்ள முக்கிய வணிக நகரான ஷாங்காயில் மட்டும், 40 இலட்சத்துக்கு மேலான விவசாயத் தொழிலாளர்கள் உள்ளனர். இம்மாநகரின் வளர்ச்சிக்கு அவர்கள் மாபெரும் பங்கு ஆற்றியுள்ளனர். இதனிடையில், அவர்களின் வாழ்க்கை மற்றும் பணியிட வசதிகளை மேம்படுத்த ஷாங்காய் மாநகராட்சி பாடுபட்டு வருகிறது.

3 ஆண்டுகளுக்கு முன் கட்டிமுடிக்கப்பட்ட YONG SHENG அடுக்கு மாடி குடியிருப்பு, ஷாங்காயில் மிக முன்னதாக விவசாயத் தொழிலாளருக்கென கட்டப்பட்ட, மிகப் பெரிய உறைவிட மையங்களில் ஒன்றாகும். விவசாயத் தொழிலாளர் இங்கே வசிப்பதற்கான கட்டணம் திங்களுக்கு 80 யுவானை விட குறைவு. சான் துங் மாநிலத்தி்லிருந்து வந்த விவசாயத் தொழிலாளர் HUANG FA LEI கூறியதாவது—
"இந்தக் குடியிருப்புப் பகுதியில் வசிப்பது, இதர பகுதிகளில் வசிப்பதை விட வசதியாக இருக்கிறது. இங்கே பொது இடர்காப்பு நிலைமை நன்றாக உள்ளது. இதர இடங்கள் வசிப்பதற்கு வசதியாக இல்லை. எடுத்துக்காட்டாக குளிக்க நீர் வசதியில்லை. மற்ற இடங்களில் வசிப்பதற்கு எமது ஊதியம் அதிகமாக செலவிடப்படும்" என்றார் அவர்.

இக்குடியிருப்பிலுள்ள மருத்துவ நிலையம்

YONG SHENG அடுக்கு மாடி குடியிருப்பில், 6 மாடியுள்ள 10 கட்டிடங்கள் உள்ளன. இக்கட்டிடங்களின் வெளித் தோற்றம் தூய்மையாகவும் அழகாகவும் இருக்கிறது. உணவு விடுதி, சிறு அங்காடி, மருத்துவ நிலையம், சுய உதவி வங்கி உள்ளிட்ட அடிப்படை வாழ்க்கைக்கான வசதிகள் அனைத்தும் காணப்படுகின்றன. இவற்றைத் தவிர, நூலகம், பன்னோக்கு பொழுது போக்கு மையம், இணையதள மையம், உடற்பயிற்சி வசதிகள் முதலியவையும் இருக்கின்றன. இளம் தொழிலாளர்களின் தேவைகளை இவை நிறைவு செய்யலாம். அத்துடன், விவசாயத் தொழிலாளருக்கு தொழில் பயிற்சியையும் சட்ட உதவியையும் வழங்கும் பொருட்டு, பல்கலைக்கழக ஆசிரியர், சட்ட ஆலோசகர் ஆகியோருக்கு குடியிருப்புப் பகுதியின் நிர்வாக மையம் அழைப்பு விடுக்கிறது.

நூலகம்

விவசாயத் தொழிலாளர் அடுக்கு மாடி குடியிருப்பு தவிர, மலிவான வாடகை வீடுகளையும் ஷாங்காய் மாநகராட்சி கட்டியமைத்துள்ளது. விவசாயத் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்த, மாநகரில் மூடப்பட்ட ஆலைகளை வசிப்பிட நிலைக்கு ஏற்ற கூட்டு வசிப்பிட விடுதியாக திருத்தி அமைக்க ஷாங்காய் முயல்கிறது.

விவசாயத் தொழிலாளர்களின் அடிப்படை வாழ்க்கை வசதிகளை உத்தரவாதம் செய்யும் அதே வேளை, அவர்களுக்கு மேலும் முழுமையான சமூகக் காப்புறுதிச் சேவைகளையும் வழங்க ஷாங்காய் பாடுபட்டு வருகிறது. ஷாங்காய் மாநகர உழைப்பு மற்றும் சமூக காப்புறுதி ஆணையத்தின் புதிய புள்ளிவிபரங்களின்படி, இவ்வாண்டு செப்டெம்பர் இறுதி வரை, 31 இலட்சத்து 90 ஆயிரம் விவசாயத் தொழிலாளர்கள் ஷாங்காய் மாநகரின் பன்னோக்கு காப்பீட்டில் சேர்ந்துள்ளனர். விவசாயத் தொழிலாளர்களின் மொத்த எண்ணிக்கையில் இது 80 விழுக்காடு வகிக்கிறது. 2010ஆம் ஆண்டுக்குள் இவ்விகிதம் 90 விழுக்காட்டை எட்ட ஷாங்காய் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

விவசாயத் தொழிலாளரின் குழந்தைகளின் பள்ளி

நகரங்களில் வேலை செய்யும் விவசாயிகளின் கவனத்திலுள்ள குழந்தைகளுக்கான கல்வி பிரச்சினை இப்போது தீர்க்கப்பட்டுள்ளது. ஷாங்காயில், உள்ளூர் மாணவருக்கு சமமான அணுகுமுறையை விவசாயத் தொழிலாளர்களின் குழந்தைகள் அடிப்படையில் அனுபவிக்கின்றனர். ஷாங்காயிலுள்ள அரசுப் பள்ளிகள் அனைத்தும் விவசாயத் தொழிலாளரின் குழந்தைகளுக்கு முழுமையாக திறந்து விடப்படுகின்றன. தவிரவும், இந்தக் குழந்தைகள் தங்களது பெற்றோர் வேலை செய்யும் இடத்துக்கு அருகில் அவர்களுக்காக துவங்கிய சிறப்புப் பள்ளியில் சேரலாம்.

விவசாயத் தொழிலாளரின் குழந்தைகளின் பள்ளி

 

ஷாங்காயில் வேலை செய்யும் விவசாயிகள் இம்மாநகரைச் சேர்ந்தவராக படிப்படியாக மாறி வருகின்றனர். ஷாங்காய் மாநகர விவசாயத் தொழிலாளர் பணி ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் தலைவர் ZHAO JIAN DE பேசுகையில், விவசாயத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, அவர்கள் நவீன மாநகரான ஷாங்காயில் பங்கேற்கச் செய்யும் வகையில், ஷாங்காய் மாநகராட்சி மேலதிக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது—
"விவசாயத் தொழிலாளர்கள் ஷாங்காய் மாநகருக்கு பங்காற்றி வருகின்றனர். இம்மாநகரில் வாழும் அவர்கள், உண்மையில் ஷாங்காய் மாநகரவாசியாக மாறியுள்ளனர்" என்றார் அவர்.