• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-12-19 11:22:06    
மிதி வண்டி மீதான சீன மக்களின் பாசம்

cri

மிதி வண்டியானது, சீன மக்கள் அனைவருக்கும் பரிச்சயமானது. சீனாவில் நீண்ட நெடுங்காலமாக, மிதி வண்டி முக்கிய போக்குவரத்து கருவியாக விளங்கியது. பொது மக்களின் வாழ்க்கை நிலை உயர்ந்து வருவதுடன், அதற்குப் பதிலாக, வேகமான, வசதியான கார் தற்போது அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. நகரங்களில் போக்குவரத்து நெரிசல், சுற்றுச்சூழல் மாசுபாடு உள்ளிட்ட பிரச்சினைகள் இதனால் கொண்டு வரப்பட்டுள்ளன. எனவே, மாசற்ற பயணம் என்பது, சீன நகரவாசிகள் சிலரின் புதிய வாழ்க்கை முறையாக மாறி வருகிறது.

கடந்த நூற்றாண்டின் 70ஆம், 80ஆம் ஆண்டுகளில், சீன நகரவாசிகளை பொறுத்த வரை, மிதி வண்டி மூலம் வேலைக்கு செல்வது வழக்கம். "சீன மக்கள் புத்திக்கூர்மை மிக்கவர்கள். மிதி வண்டியில் வேலைக்கு செல்வது என்பது, உடற்பயிற்சியாக அமைவதோடு சுற்றுச்சூழலைப் பாதுக்காக்கவும் உதவுகிறது." பெய்ஜிங் மாநகருக்கு வந்த வெளிநாட்டுப் பயணிகள், சாங் ஆன் வீதியில் பிரமாண்டமான மிதி வண்டி ஓட்டத்தைக் கண்ட போது வியப்புடன் இவ்வாறு பாராட்டுகின்றனர்.

சீனா, மிதி வண்டி நாடாக திகழ்கிறது. புதிய புள்ளிவிபரங்களின் படி, தற்போது உலகளவில் மிதி வண்டிகளின் ஆண்டு உற்பத்தி சுமார் 13 கோடியாகும். சீனாவின் மிதி வண்டி உற்பத்தி, உலகின் மொத்த உற்பத்தியில் 60 விழுக்காட்டுக்கு மேலாகும். உள்நாட்டு நுகர்வு உலகில் முதலிடம் வகிக்கிறது. மிதி வண்டி மீது சீன மக்கள் பேரார்வம் கொள்கின்றனர் என்று கூறுவது மிகையாகாது.

1970ஆம் ஆண்டுகளில் பிறந்த ஹு மின் அம்மையார் தற்போது பெய்ஜிங்கில் பணிபுரிகிறார். மிதி வண்டி மீது அவர் ஆழ்ந்த உணர்வு கொண்டிருக்கிறார்.

"குழந்தை பருவத்தில் மிதி வண்டி சவாரி செய்தேன். துவக்கப் பள்ளி மாணவியாக இருந்த போது, தபால்காரர் வேலை செய்வது எனது கனவு. ஏனென்றால் ஒவ்வொரு நாளும் மிதி வண்டி சவாரி செய்யலாம்" என்றார் அவர்.

பல்கலைக்கழக மாணவாரான ஹு மின், சொந்த ஊரிலிருந்து பெய்ஜிங் வந்தடைந்தார். அவரது போக்குவரத்து கருவி, இன்னமும் மிதி வண்டி.
1997ஆம் ஆண்டில் பணியில் ஈடுபட்ட அவர் மிதி வண்டியில் வேலைக்குச் சென்றார்.

"வருமானப் பிரச்சினையை முக்கியமாக கருத்தில் கொண்டததால், மிதி வண்டியைப் பயன்படுத்தினேன். பணி செய்யத் தொடங்கிய காலத்தில் வருமானம் அதிகமில்லை. மிதி வண்டியே வசதியாக இருந்தது" என்றார் அவர்.

1980ஆம் ஆண்டுகளிலும் 1990ஆம் ஆண்டுகளின் முற்பாதியிலும், சீனாவில் மிகப் பெரும்பாலான நகரவாசிகள் ஹு மின் அம்மையாரைப் போன்று, மிதி வண்டியை முக்கிய போக்குவரத்து கருவியாக பயன்படுத்தினர். பொருளாதார வளர்ச்சியுடன், மக்களின் வாழ்க்கை நிலை உயர்ந்து வருகிறது. பயணத்துக்கான அவர்களின் கோரிக்கையும் உயர்ந்து வருகிறது. சொந்த காரை ஓட்டும் மக்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. பெய்ஜிங் மாநகரத்தில், சொந்த கார்களின் எண்ணிக்கை நாளுக்கு ஆயிரம் என்ற வேகத்தில் அதிகரித்து வருகிறது. இன்று வரை, பெய்ஜிங்கில் மக்கள் சொந்தமாக உரிமை கொண்ட கார்களின் எண்ணிக்கை 31 இலட்சத்தை எட்டியுள்ளது. கடந்த சில ஆண்டுகளில், போக்குவரத்து வசதிகளுக்கான முதலீட்டை பெய்ஜிங் மாநகராட்சி முழுமூச்சுடன் அதிகரித்த போதிலும், காரின் அதிகரிப்பு வேகத்தை விட அது குறைவே. போக்குவரத்து நெரிசல், இதன் இறுதி விளைவாகும்.

2004ஆம் ஆண்டில், ஹு மின் அம்மையார் கணவருடன் இணைந்து கார் ஒன்றை வாங்கினார். அவரது கணவர் காரில் வேலைக்குச் செல்கிறார். அவர் வாடகைக் காரில் வேலைக்கு செல்கிறார். போக்குவரத்து நிலைமை மோசமாகி வருவதுடன், வாடகைக் கார் வசதியாக இல்லை.

"சாலையில் போக்குவரத்து நெரிசல் நிலைமையை சகித்துக் கொள்ள முடியவில்லை. வீட்டிலிருந்து எனது நிறுவனத்துக்கு 7 கிலோமீட்டர் தொலைவு மட்டுமே. ஆனால், இதற்கு ஒரு மணி நேரம் செலவிட வேண்டியுள்ளது" என்றார் ஹு மின் அம்மையார்.

போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு, தீர்வு காண வேண்டிய நேரம் வந்து விட்டது. இதற்கான தீர்வுமுறையை சீன அரசும் சமூகத் துறைகளும் ஆக்கப்பூர்வமாக தேடி வருகின்றன. சொந்த கார் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது, பொதுப் போக்குவரத்து முறையை வளர்ப்பது முதலிய வழிமுறைகள் அடுத்தடுத்து வெளியிடப்பட்டுள்ளன. சீன மிதி வண்டி சங்கத்தின் தலைமைச் செயலாளர் GUO HAI YAN பேசுகையில், மிதி வண்டி மூலம் வெளியே போகுமாறு பொது மக்களுக்கு அரசு முன்மொழிய வேண்டும் என்று குறிப்பிட்டார். அவர் கூறியதாவது—

மடக்கி வைக்க க்கூடிய மிதி வண்டி ஒன்று

"நடுத்தர மற்றும் குறுகிய தொலைவு செல்ல மிதி வண்டியைப் பயன்படுத்த வேண்டும் என்று முன்மொழிகின்றோம். இவ்வாறு செய்தால், எரியாற்றலைச் சிக்கனப்படுத்தும் அதே வேளை, காற்று மாசுப்பாட்டையும் குறைக்கலாம். காற்று தரம் மேலும் நன்றாக இருக்கும்." என்றார் அவர்.

போக்குவரத்து நெரிசல் ஏற்படும் போது மிதி வண்டிக்கு மேலும் பெரும் மேம்பாடு உள்ளது என்பதை உண்மைகள் காட்டுகின்றன. எடுத்துக்காட்டாக, பெய்ஜிங் நகரப் பகுதியில் மக்கள் மற்றும் வாகனத் தொகை மிக அதிகமாக இருக்கும் நேரத்தில், வாகனத்தின் சராசரி வேகம் ஒரு மணிநேரத்துக்கு 8 முதல் 12 கிலோமீட்டராகும். ஆனால், மிதி வண்டியின் வேகம் ஒரு மணிநேரத்துக்கு 15 கிலோமீட்டரை எட்டலாம்.

தற்போது, வெளியே செல்வதற்கு ஹு மின் அம்மையார் பெரும்பாலும் மிதி வண்டியையே தெரிவு செய்கிறார். மடக்கி வைக்க க்கூடிய மிதி வண்டி ஒன்றை அவர் வாங்கினார். இத்தகைய மிதி வண்டி சிறியதாகவும் வசதியாகவும் உள்ளது. பயன்பாட்டுக்கு தேவை இல்லா பொழுது, காரின் பின் பெட்டிக்குள் இதை மடக்கி வைக்கலாம். மிதி வண்டியின் வசதி பற்றி குறிப்பிடுகையில் ஹு மின் அம்மையார் கூறியதாவது—

"மிதி வண்டி சவாரி செய்வது மிக நல்ல முறையாகும் என்று கருதுகின்றேன். போக்குவரத்து நெரிசல் பற்றி கவலைப்பட வேண்டாம். பேருந்துக்காக காத்திருக்க வேண்டாம். மிதி வண்டி சவாரி செய்யும் போது வழியில் நிற்க முடியும். காலை உணவு சாப்பிடா விட்டால், சாலை பக்கத்தில் சாப்பிடலாம். மேலும், மிதி வண்டி சவாரி செய்வது, உடற்பயிற்சி செய்யும் நல்ல முறையாகவும் இருக்கிறது" என்றார் அவர்.

தற்போது சீனாவின் பெரிய நகரங்கள் பலவற்றில், போக்குவரத்து வசதியாக மட்டுமல்ல, நலமான வாழ்க்கையின் ஒரு அடையாளமாகவும் மிதி வண்டி திகழ்கிறது. மிதி வண்டி விரும்பும் நண்பர்கள் பலர் சுயவிருப்பத்துடன் ஒன்று திரண்டு, வார இறுதியில் மிதி வண்டி மூலம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இயற்கைக்குத் திரும்புகின்றனர்.

2008ஆம் ஆண்டு கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நெருங்கி வருகிறது. பெய்ஜிங்கின் வானம் மேலும் நீலமாக இருக்கச் செய்யும் வகையில், கார் கொண்டிருக்கும் பெய்ஜிங் நகரவாசிகள் காருக்குப் பதிலாக மிதி வண்டியில் வெளியே செல்கின்றனர்.

வெளியே செல்ல, தூய்மையான, உடல் நலத்துக்கு நேயமான மிதி வண்டியை பலர் தெரிவு செய்வதை மிதி வண்டியின் தெளிவான மணியோசை காட்டுகிறது.