• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-05 14:26:47    
சீன Shenyang நகரிலான Michelin டயர் தொழில் நிறுவனத்தின் மேலாளர் Michel Perrin

cri
Michelin என்பதை குறிப்பிடும் போது, ஓட்டுநர்களில் பெரும்பாலோர் தெரிந்து வைத்திருப்பர். அது, உலகில் மிக புகழ் பெற்ற டயர் தொழில் நிறுவனங்களில் ஒன்றாகும். இன்றைய நிகழ்ச்சியில், இத்தொழில் நிறுவனத்தின் பொது மேலாளர் Michel Perrin பற்றி அறிந்து கொள்வோமா.

61 வயதாகும் Perrin , Michelin குழுமத்தில் 35 ஆண்டுகளாக பணி புரிந்து வருகிறார். 1995ம் ஆண்டு சீன shenyang நகரில் Michelin டயர் தொழில் நிறுவனம் நிறுவப்பட்ட போது, அவர் பொது மேலாளராகப் பதவியேற்றார். சீனப் பண்பாட்டை உணர்ந்து கொண்டு, சீனாவின் பொளுளாதாரக் கட்டுமானத்தில் கலந்து கொள்வது என்பது, ஐரோப்பாவை சேர்ந்த ஒருவரைப் பொறுத்தவரை, முயற்சி செய்யத்தக்க அனுப்பவமாகும் என்று அவர் கருதுகிறார். குறிப்பாக, வரும் சில ஆண்டுகளில், shenyang Michelin டயர் தொழில் நிறுவனம், இந்தக் குழுமத்தின் உலகளவில் மிக பெரிய உற்பத்தி தளமாகக் கட்டியமைக்கப்படும். அதனால், அவர் மேலும் மகிழ்ச்சி கொள்கிறார்.

தற்போது பெய்ஜிங் பேருந்து தொழில் நிறுவனத்தின் பேருந்துகளில் பொருத்தப்படுகின்ற டயர்கள், நாங்கள் வினியோகித்தவை. அதனால், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் போது, பெய்ஜிங்கின் பேருந்துகளில் பொருத்தப்படும் டயர்கள், Michelin டயர் தான். அது குறித்து மிகவும் பெருமைபடுகிறேன்.

பெய்ஜிங்கை தவிர, சீனாவின் tianjin, zhengzhou, xiamen, hangzhou முதலிய மாநகர்களின் பேருந்துகள், Michelin டயர்களையே பயன்படுத்துகின்றன. Perrin, பொது மேலாளராக பதவி ஏற்கின்ற போது, இத்தொழில் நிறுவனம், shenyang நகரின் வரி செலுத்தும் 10 சிறந்த வெளிநாட்டு முதலீட்டுத் தொழில் நிறுவனங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுத்தப்பட்டது. அதற்காக சமூகப் பொறுப்பு பங்களிக்கும் விருதும் வழங்கப்பட்டது. 2006ம் ஆண்டு, Perrin, shenyang நகரின் மாதிரி உழைப்பாளராகத் தேந்தெடுக்கப்பட்டார்.

இந்தப் புகழ், அவருக்கு மிகவும் பொருந்துகிறது என்று அவரின் துணையாளர் gao ni செய்தியாளருக்கு கூறினார். ஏறக்குறைய ஒவ்வொருநாளும் Perrin முதலாவதாக வேலையக் களரிக்குச் சென்று கடைசியாக தான் அதனை விட்டு செல்கிறார். நாள்தோறும் சுமார் 12 மணி நேரம், அவர் பணி புரிகிறார்.

காலை 7 மணிக்கு முன்பே, அவர் அலுவலகத்துக்கு வந்து விடுகிறார். வேலைக் களரிகளுக்குச் சென்று, தொடக்க செயல்முறை முதல், ஒவ்வொரு மூலைமுடுக்கிலும் பார்வையிடுகிறார்.

shenyang பணியாளர்கள் குறித்து, அவர் மிகவும் பெருமை கொள்கிறார். தொழில்துறையில், மிக முக்கியமானது, உற்பத்தி வசதிகள் அல்ல. பணியாளர்கள் தான் என்று அவர் கருதுகிறார். பாடுபட்டு வேலை செய்து முன்னேற்றம் நாடுவது என்பது, shenyang மக்களின் மிக முக்கிய குணமாகும். சீன பணியாளர்களின் முயற்சி, கடந்த சில ஆண்டுகளில் Michelin பெற்ற சாதனைகளுக்கு மிக முக்கிய காரணமாகும் என்று அவர் கூறினார்.

எங்கள் தொழில் நிறுவனத்தில், சில திட்டப்பணிகள் விரிவாக்கப்பட்டு வருகின்றன. சில வெளிநாட்டு நிபுணர்களின் உதவியை பயன்படுத்திய போதிலும், சீன பணியாளர்கள் மிகவும் முக்கியமான சக்தி தான். அதனால் நாங்கள் தொடர்ந்து முன்னேறுவோம்.

Michelin டயர் தொழில் நிறுவனம், உள்ளூர் பல்கலைக்கழகங்களிலும் நலவாழ்விடங்களிலும், அடிக்கடி தானம் செய்கின்ற நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது. சில சமயம், பொது மேலாளரான Perrin, தாமாக shenyang நகர் சமூக குழந்தைகள் நலவாழ்விடத்துக்குச் சென்று குழந்தைகளோடு அளவளாவுகின்றார். அவர் கூறியதாவது,

வணிகம் செய்வது மட்டும், Michelin நிறுவனம் ஒரு நகரில் நுழைவதன் நோக்கம் அல்ல. உதவி வேண்டிய நபர்களுக்கு இயன்றவரை உதவி செய்யவும் முயல்கிறோம். ஏழை மாணவர்களுக்கு உதவி செய்யும் வகையில், இங்குள்ள வடகிழக்கு பல்கலைக்கழகத்தில், நாங்கள் நிதி உதவி தொகை வழங்குகிறோம். தவிர, shenyang நகரின் சமூக குழந்தை நலவாழ்விடத்துக்கு நீண்டகாலமாக நிதி உதவி அளிக்கிறோம். shenyang நகரில் மட்டும் இப்படி செய்வது அல்ல. இது, Michelin குழுமத்தின் பொது கருத்து ஆகும்.

விடுமுறையின் போது, சீனவில் சுற்றுலா செல்வதை Perrin விரும்புகிறார். shenyang நகரிலான புகழ் பெற்ற வரலாற்று காட்சி தளங்களுக்கும் அவர் குறைந்தது ஒரு முறை சென்றார். அரண்மனை காட்சியகத்துக்கு குறைந்தது 3 முறை சென்றார்.

அவர் கூறியதாவது,

எனது நண்பர்கள் பிரன்ஸிலிருந்து வந்த போது, நான் அவர்களை, காட்சி தளங்களுக்குக் கூட்டிச் சென்றேன். நான் வழிகாட்டியாக மாறி, அவர்களுக்கு அனைத்தையும் விளக்கி கூறினேன்.

இதுவரை, Perrin, shenyangயில் பணி புரிந்து வாழ்ந்து, மூன்று ஆண்டுகளாகி விட்டது. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இந்நகர் வளர்ந்து வருகிறது என்று அவர் கருதுகிறார்.

இங்குள்ள வீதிகள், பல்வகை கட்டிடங்கள், தற்போது கட்டியமைக்கப்படும் சுரங்க இருப்புப் பாதை ஆகியவை, 3 ஆண்டுகளில் நிகழ்ந்த மாற்றங்களை வெளிப்படுத்துகின்றன. இக்காலக்கட்டத்தில் shenyang யின் பொருளாதாரம் பெரிய பாய்ச்சல் முன்னேற்றம் அடைந்துள்ளது.