• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-06-06 10:27:01    
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலுள்ள தற்காலிக வீடு

cri
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களை வெகுவிரைவில் முழுமையான வசதிகளைக் கொண்ட தற்காலிக வீடுகளில் குடியமர்த்துவதற்காக, தற்போது, சீனாவின் பல்வேறு இடங்களிலுள்ள 230 தொழில் நிறுவனங்கள் முழுமூச்சுடன் உற்பத்தியில் ஈடுப்பட்டு வருகின்றன. நாள்தோறும், 15 ஆயிரம் நடமாடும் மர வீடுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன என்று சீன உறைவிட மற்றும் நகர் கிராமப்புறக் கட்டுமானத் துறை துணை அமைச்சர் ச்சி சி நேற்று தெரிவித்தார்.

நிலநடுக்க தாங்கும் ஆற்றல், தீ அணைப்பு ஆற்றல், கட்டமைப்புத் தன்மை முதலிய முன்னேறிய தொழில் நுட்பவரையறைகள், இந்தத் தற்காலிக வீடுகளில் அடங்குகின்றன. 3 திங்கள் காலத்துக்குள், பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு 10 இலட்சம் தற்காலிக வீடுகளைக் கட்டியமைப்பது என்பது, உறைவிட மற்றும் நகர் கிராமப்புறக் கட்டுமான அமைச்சகத்தின் பணிக் குறிக்கோளாகும் என்று சீன அரசவைச் செய்தி பணியகம் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் ச்சி சி கூறினார்.