• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-07 18:40:26    
மாற்று ஆற்றல் தேடி

cri

பெட்ரோல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ள இத்தருணத்தில், அதனால் ஏற்படும் தொடர் விளைவாக இதர அத்தியாவசிய பொருட்களும் விலையேறுமே என்ற கரிசனை நம்மைப்போல பலருக்கும் எழுவது இயல்பே. தொடர்ந்து மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் தானி, கார், பேருந்து, முதலிய போக்குவரத்துக்கான செலவீனங்களும், நுகர்வுப்பொருட்கள் மற்றும் வீட்டு வாடகை கட்டணங்கள் உயர்வதை பார்க்கும்போது நடைபயணமும், ஓலைக்குடிசையும், கம்பங்கூழுமாக வாழ்ந்த நாகரீகம் நுழையாத பழங்கால முறைகளே பரவாயில்லை என்று எண்ண தோன்றுகிறதல்லவா!.

உலகளவிலான எண்ணெய் விலை உயர்வு பல நாடுகளின் பொருளாதாரத்தை புரட்டிப்போட்டுள்ளது. எரிபொருள் விலை உயர்வை கட்டுபடுத்துவதற்கான முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எண்ணெய் உற்பத்தி மற்றும் நுகர்வு நாடுகளின் கூட்டம் நடத்தப்படுவது பற்றிய சௌதி அரேபியாவின் முன்மொழிவுக்கு அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. பொருளாதார வளர்ச்சிக்கு எரிபொருள் இன்றியமையாத அடிப்படையாக கருதப்படும் மிக முக்கிய காலக்கட்டம் இது. பெட்ரோலிய பொருட்களுக்கு பதிலாக மின்னாற்றல், கலப்பு எரியாற்றல், சூரிய ஆற்றல், உயிர்வள எரியாற்றல் என்று மாற்று எரியாற்றல் முயற்சிகள் தொடர்கின்றன. மாசற்ற எரிபொருளின் பயன்பாடு பெருமளவு ஆதரிக்கப்படுகிறது. பசுங்கூட வாயுக்களின் வெளியேற்றத்தை குறைத்து, புதுப்பிக்கவல்ல ஆற்றலை தொடர்ந்து பயன்படுத்தக்கூடிய முறைமைகள் ஆராயப்பட்டு வருகின்றன. இருப்பினும் எரியாற்றல் இன்று பல நாடுகளின் பொருளாதாரத்தை அச்சுறுத்துகின்ற நிலையில் இருப்பதே உண்மை நிலை.

சூரிய ஆற்றலை அதிகமாக பயன்படுத்துவதற்கு தேவையான சாதனங்களின் செலவு அதிகம். அதனை பயன்படுத்தும்போது அதிக மாசுபாடு ஏற்படாவிட்டாலும் உற்பத்தி செய்யும் போக்கில் மாசுபாடு அதிகரிக்கிறது என்ற எண்ணங்கள் பரவலாக உள்ளன. ஆனால் சூரிய ஆற்றலை உற்பத்தி செய்யும்போது வெளியாகும் மாசுபாடுகள் இதர ஆலைகளிலிருந்து வெறியேறும் மாசுபாடுகளோடு ஒப்பிடுகையில் மிகவும் குறைவே. ஏற்கெனவே இதைபற்றி அறிவியல் உலகம் நிகழ்ச்சியில் சில தகவல்கள் அளிக்கப்பட்டது நண்பர்களுக்கு நினைவிருக்கலாம். சூரிய ஆற்றலை பெருமளவு பயன்படுத்தும் வகையில் ஓர் இணையற்ற அரிய வழிமுறையை ஆஸ்திரேலிய மற்றும் சீன ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சூரிய ஆற்றல் மூலமான எரியாற்றல் என்றவுடனே செலவு மிக அதிகமாக இருக்கும் என்ற எண்ணம் கொண்டவர்களுக்கு இக்கண்டுபிடிப்பு வியப்பளித்துள்ளதாம்.

டைட்டேனியம் எனப்படும் வெண்வெள்ளியின் நுண்ணிய படிகக்கற்கள் சூரிய ஆற்றலை தயாரிக்க பயன்படும் சிறந்த பொருட்களாக கண்டறியப்பட்டுள்ளன. கதிரியக்கத் தன்மை கொண்ட பரப்புடைய வெண்வெள்ளி அமில படிகக்கற்களை உருவாக்கிய குயின்ஸ்லாந்திலுள்ள ஆஸ்திரேலிய உயிரின பொறியியல் மற்றும் நுண்பொருள் தொழில்நுட்ப நிறுவன பேராசிரியர் மேக்ஸ் லியு, இத்தகைய பொருளை உருவாக்க முடியாதென்ற நிலைய மாற்றியதாக குறிப்பிட்டுள்ளார். தண்ணீரிலிருந்து ஹைட்ரஜன் தயாரிப்பது மற்றும் சூரிய ஆற்றல் மூலம் மாசுபாடுகளை அகற்றுவது போன்ற அனைத்தையும் குறைந்த செலவில் நிறைவேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதற்கு தேவைப்படும் பொருட்களை மலிவாகவும், எளிதாகவும் பெறுவதையும் ஆய்வுக்குழு உத்தரவாதம் செய்துள்ளது. புதுப்பித்து மீண்டும் பயன்படுத்தப்படக்கூடிய அளவில் இவ்வாற்றல் மிக உயர்ந்த படிக மாதிரியாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, சிறப்பு.

இதனை கொண்டு காற்று மற்றும் நீர் மாசுபாட்டை சுத்தப்படுத்தலாம். இந்த படிகத்தை, சன்னல்கள் அல்லது சுவரில் வண்ணமடிப்பதை போல் பூசினால் அறையிலுள்ள காற்று சுத்தப்படுத்தப்படும். இதனை புதுப்பித்து பயன்படுத்துவதும் எளிதே. தற்போது இந்த கண்டுபிடிப்பு தொடக்கநிலையில்தான் உள்ளது. வியாபார ரீதியில் வளர்ச்சிபெற்று அனைவரையும் சென்றடைய ஐந்து முதல் பத்தாண்டுகள் ஆகலாம். உலக எரிபொருள் வரலாற்றில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவரயிருக்கும் இக்கண்டுபிடிப்பு குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் மற்றும் சீன அறிவியல் கழகத்தின் Huiming Chen குழுவினரிடையிலான நீண்டகால பயனுள்ள ஒத்துழைப்பால் உருவானதாகும்.