• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-07-07 16:17:23    
தாராளமாக சுவாசியுங்கள்

cri

பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி துவங்குவதற்கு ஒரு திங்கள் காலம் தான் உள்ளது. பெய்ஜிங் காற்று தரம் பற்றி அண்மையில் பெய்ஜிங் மாநகரின் சுற்றுச் சூழல் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்ட புள்ளிவிபரங்களின் படி இவ்வாண்டின் முதல் 6 திங்களில் காற்று தரத்திற்கான வரையறையை எட்டியுள்ள நாட்களின் எண்ணிக்கை 123 ஆகும். இந்த சூழ்நிலை கடந்த 9 ஆண்டுகளில் காணப்பட்ட மிக சிறந்த பதிவாகும். பெய்ஜிங் நகரவாசி சேய் ரொங் இது பற்றி கூறியதாவது.


இவ்வாண்டு முதல் பெய்ஜிங்கில் வீசுகின்ற காற்று தரம் முன்பை விட சிறப்பானது என்பது என்னுடைய சுய உணர்வாகும். குறிப்பாக சில வசிப்பிடங்களில் சுற்று சூழல் கட்டுப்பாட்டு நிலைமை மிக சீரானது என்று அவர் கூறினார்.
ஆமாம். பெய்ஜிங் நகர சூழ்நிலை மேம்பாடு அடைந்துள்ளதால் தலைமுறை தலைமுறையாக வாழ்கின்ற பெய்ஜிங் நகரவாசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இங்கே வாழ்ந்து பணிபுரிகின்ற வெளிநாட்டவர்களும் இது பற்றி ஆழமாக உணர்ந்துள்ளனர். பல்கலைகழகத்தில் பணிபுரிகின்ற ஜெர்மனியர் வொல்பாஃங்கன் ஹேபுலெ பெய்ஜிங்கில் 5 ஆண்டுகளாக வசித்து வருகிறார். பெய்ஜிங்கின் சீரடைந்துள்ள சுற்றுச் சூழலையும் அதனை சீராக்குவதற்காக பெய்ஜிங் மாநகர அரசு மேற்கொண்ட முயற்சிகளுக்கு அவர் கண்டு சான்று பகர்கிறார். அவர் கூறியதாவது

உள்ளூர் அரசு சுற்றுச் சூழலை சீர்செய்யும் வகையில் பல முயற்சிகள் மேற்கொண்டுள்ளது. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் போது கார் ஓட்டத்தை கட்டுப்படுத்த தீர்மானித்துள்ளதோடு சூழலையும் காற்றையும் மாசுப்படுத்தும் தொழிற்சாலைகளை மூடியுள்ளது. குறிப்பிட்ட தொழில் நிறுவனங்களிடம் அவற்றின் உற்பத்தியை நிறுத்துமாறு அரசு கட்டளையிட்டது. இவையனைத்தும் பெய்ஜிங்கின் சூழலை மேம்படுத்துவதற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தன என்று அவர் கூறினார்.
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி பெய்ஜிங்கில் நடைபெறும் போது பெய்ஜிங்  மாநகரின் காற்றுத் தரத்தை உத்தரவாதம் செய்யும் வகையில் நகர அரசு பல தற்காலிக போக்குவரத்து நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. எடுத்துக்காட்டாக ஜுலை திங்கள் முதல் நாள் தொடங்கி நகரிலுள்ள வாகனங்களில் 10 விழுக்காட்டு அதிக மாசுபாட்டை ஏற்படுத்தக் கூடிய வாகனங்கள் சாலையில் ஓட தடுக்கப்பட்டுள்ளன. வேறு ஊர்களிலிருந்து பெய்ஜிங்கிற்கு வரும் சரக்குந்துகளும் பெய்ஜிங்கை அடுத்துள்ள புறநகர் பகுதி வழியாகத் தான் செல்ல வேண்டும். ஜுலை திங்கள் 20ம் நாள் தொடங்கி வாகனங்களின் பதிவு எண்களின் ஒற்றை மற்றும் இரட்டை படை எண்களின் படி மாறி மாறி சாலையில் செல்ல வேண்டும். இரட்டை எண் கொண்ட வாகனங்கள் இரட்டை இலக்க தேதிகளை கொண்ட நாட்களில் சாலையில் செல்லலாம். பெய்ஜிங்கின் சுற்றுச் சூழல் பாதுகாப்பு ஆணையத்தின் துணைத் தலைவர் து சை ச்சுங் இது பற்றி கூறியதாவது.

வாகனங்களின் மீதான நிர்வாகத்தை வலுபடுத்தியுள்ளோம். ஒற்றை மற்றும் இரட்டை படை தேதிகளில் வாகனங்கள் சாலையில் செல்ல அனுமதிக்கும் நடவடிக்கை மேற்கொள்வதன் மூலம் குறிப்பிட்ட காலகட்டத்தில் வாகனங்களின் மாசு வெளியேற்றம் 63 விழுக்காடு குறையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
2001 ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்தும் உரிமையை பெய்ஜிங் பெற்றது முதல் இது வரை சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறையில் முதலீடு செய்யப்பட்ட தொகை 9000 கோடி யுவானை தாண்டியுள்ளது. அதிக மாசுப்பாட்டை ஏற்படுத்தக் கூடிய பல தொழில் நிறுவனங்கள் இடமாறியுள்ளன அல்லது உற்பத்தி நிறுத்தப்பட்டு தொழில் நுட்ப சீர்த்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றில் 80 ஆண்டு வரலாறுடைய பெரிய ரக இரும்புருக்கு தொழிற்சாலை பெய்ஜியிலிருந்து இடமாறியது. அதன் விளைவாக பெய்சிங் கனரக தொழிற்துறை காலத்திலிருந்து முழுமையாக வெளியேறியது. கடந்த சில ஆண்டுகளில் பத்தாயிரகணக்கான பழைய வாகனங்கள் மற்றும் பேருந்துகளுக்கு பதிலாக எரியாற்றல் சிக்கனப்படுத்தும் புதிய ரக வாகனங்கள் மாற்றப்பட்டுள்ளன. பத்தாயிரக்கணக்கான நிலக்கரி பயன்படுத்தும் கொதிகலங்கள் செப்பனிடப்பட்டு இயற்கை வாயு அல்லது மின்னாற்றல் பயன்படுத்தும் கொதிகலங்களாக மாற்றப்பட்டுள்ளன. பெய்ஜிங்கில் பூங்காக்களும் மரங்களும் மென்மேலும் அதிகமாகியுள்ளன. சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயிகளின் வீட்டில் தீ அடுப்புக்கு பயன்படுத்தப்படும் எரிப் பொருட்களில் மர விறகுகள் தடுக்கப்பட்டன. கட்டிட கட்டுமானத் தளங்களில் தூசி வீசும் சூழ்நிலை காணாமல் போயிற்று. 2007 ஆம் ஆண்டின் இறுதி வரை பெய்ஜிங் ஒலிம்பிக் விண்ணப்பம் செய்த போது அளித்த வாக்குறுதிகளில் ஒலிம்பிக்கிற்கான பச்சைமயமாக்குதலின் 7 வரையறைகள் முழுவதும் நிறைவேற்றப்பட்டுள்ளவை குறிப்பிடத்தக்கது.