• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-09 02:08:40    
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி துவங்கியது

cri

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் வரலாற்றில் தலைசிறந்த பதிவுகள் உருவாக்கப்பட்ட 29வது கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி பெய்ஜிங் நேரப்படி இன்றிரவு 8 மணிக்கு சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் துவங்கியுள்ளது. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டித் தலைவர் ஜாக்குவிஸ் ரோக் துவக்க விழாவில் உரை நிகழ்ந்தார். சீன அரசுத் தலைவர் ஹுச்சிந்தாவ் நடப்பு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்கத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ஒலிம்பிக் குடும்பத்தின் 205 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிக் குழுக்களும் பெய்ஜிங் வந்தடைந்து நடப்பு துவக்க விழாவில் கலந்து கொண்டன.

அமெரிக்க அரசுத் தலைவர் ஜார்ஜ் W.புஷு, ஜப்பான் தலைமை அமைச்சர் ஃஃபுகுடா யாசோ, பிரான்ஸ் அரசுத் தலைவர் சர்கோசி, இந்தியாவின் ஆளும் கட்சி கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி அம்மையார் உள்ளிட்ட 80க்கும் அகிதமான நாடுகளின் அரசியல் தலைவர்கள் இத்துவக்க விழாவில் கலந்து கொண்டனர். அரசு முறையில் வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்களின் படி 11 ஆயிரத்துக்கும் மேற்பாட்ட விளையாட்டு வீரர்களும் 30 ஆயிரத்துக்கும் அதிகமான செய்தியாளர்களும் நடப்பு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் பங்கெடுப்பர். துவக்க விழாவில் சீனாவில் புகழ் பெற்ற திரைப்பட இயக்குனர் ச்சான் யீ மோ வடிவமைத்து தலைமை தாங்கிய கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்படுகின்றன.

இந்த கலை நிகழ்ச்சி சுமார் ஒரு மணி நேரம் நீடித்திருக்கும். "அருமையான ஒலிம்பிக்"என்பது கலை நிகழ்ச்சியின் பெயராகும். சீனப் பண்பாட்டு அம்சங்களையும் ஒலிம்பிக் எழுச்சியையும் இணைத்து உலகத்திற்கு நட்பு மற்றும் இணக்கம் என்ற கருத்தை பரவல் செய்வது எமது நோக்கமாகும் என்று ச்சான் யீ மோ அறிமுகப்படுத்துகிறார்.

சீனா முந்திய ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் பெற்ற தங்கப் பதக்க எண்ணிக்கை 32. தங்கப் பதக்க வரிசையில் அமெரிக்காவை அடுத்து சீனா இருந்தது. நடப்பு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் அமெரிக்கா, ரஷியா, சீனா முதலிய நாடுகள் முந்தை ஒலிம்பிக் போட்டியில் இருந்ததை விட பெரிய பிரதிநிதிக் குழுக்களை அனுப்பின. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவில் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும்.

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி மூன்றாவது முறையாக ஆசிய நகரில் நடைபெறுவதும் குறிப்பிடத்தக்கது. பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி ஆகஸ்ட் 24ம் நாள் வரை நடைபெறும். பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழா பற்றிய சிறப்பு நிகழ்ச்சி இன்றைய செய்தியறிக்கை செய்தித் தொகுப்பு ஆகியவற்றுக்கு பின் இடம் பெறும். கேட்கத் தவறாதீர்கள்.