• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-08 21:02:33    
பெய்ஜிங் ஒலிம்பிக் துவக்க விழாவுக்கான சிறப்பு நிகழ்ச்சி ஆ

cri
ஓர் உலகம், ஒரு கனவு என்பது பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் முழக்கமாகும். அமைதி,நட்புறவு, முன்னேற்றம் ஆகியவற்றுக்கான மனித குலத்தின் பொது விருப்பத்தை இது வெளிப்படுத்துகின்றது. மேலும், இந்த விருப்பம், fu wa எனப்படும் பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் மங்கலச் சின்னங்களை வடிவமைக்கும் போதும் சிறப்பாக வெளியிடப்பட்டது. Bei Bei, Jing Jing, Huan Huan, Ying Ying, Ni Ni ஆகிய இந்த 5 பொம்மைகளின் பெயர்களின் முதல் எழுத்துக்களை இணைத்தால், அதாவது சீன மொழியில் beijing huan ying ni என்றால் பெய்சிங் உங்களை வரவேற்கிறது என்று பொருள்படுகின்றது. 130 கோடி சீன மக்களை இந்த Fuwa பொம்மைகள் பிரதிநிதித்துவப்படுத்தி, பெய்ஜிங் உங்களை வரவேற்கின்றது என்று அனைத்துலகத்துக்கும் அழைப்பு விடுக்கின்றன.

தற்போது, இந்த 5 பொம்மைகளுடன் பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி மற்றும் இதனுடன் தொடர்புடையவற்றை அறிவோம்.

நாங்கள் பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் மங்கல சின்னங்களாகும். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி பற்றி அறிந்து கொள்ள வேண்டுமானால், எங்களோடு வாருங்கள்.

நீங்கள் கேட்டது, fuwaவின் ஒலிம்பிக் பயணம் எனும் 100 தொடர்களைக் கொண்ட சித்திர வரைபட நிகழ்ச்சியில் huan huan விடுத்த அழைப்பாகும். huan huan புனித தீயைப் பிரதிநிதிப்படுத்தும் பொம்மையாகும். இது விளையாட்டின் மனக் கிளர்ச்சியின் சின்னமாகும். மேலும் விரைவாக, மேலும் உயர்வாக, மேலும் வலிமையாக என்ற ஒலிம்பிக் எழுச்சியை இது உலகிற்கு உணர்த்துகின்றது. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்துவதற்கான உரிமையை வெற்றிகரமாக பெற்ற பின், இதுவரையான 7 ஆண்டு காலத்தில், மக்களுக்கு மகிழ்ச்சியையும் மன கிளர்ச்சியையும் தரும் தருணங்கள் அதிகமானவை.

2001ம் ஆண்டு ஜுலை திங்கள் 13ம் நாள், 2008ம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்தும் உரிமையை பெய்சிங் மாநகரம் பெற்றுள்ளது என்று அப்போதைய சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் சமரான்ச் அறிவித்த போது, முழு சீனாவிலும் மக்கள் பேருவகை அடைந்தனர்.

பிறகு, இந்த 7 ஆண்டு காலத்தைப் பயன்படுத்தி உலகிற்கு அளித்த வாக்குறுதியை எப்படி நிறைவேற்றலாம் என்று சீன மக்கள் அமைதியாக யோசித்தனர். உலகிற்குஅளித்த வாக்குறுதியை கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும் என்ற கருத்து ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஆயத்தப் பணியை மேற்கொண்ட போக்கில் சிறப்பாகக் கடிப்பிடிக்கப்பட்டது.

2002ம் ஆண்டு ஜுலை 13ம் நாள், பெய்ஜிங் ஒலிம்பிக் செயல் விளையாட்டுப் போட்டி பற்றிய திட்டம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. புதிய பெய்ஜிங் புதிய ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி என்ற 2 முழக்கங்களும், மாசற்ற ஒலிம்பிக், அறிவியல் தொழில் நுட்ப ஒலிம்பிக், மானிட வள ஒலிம்பிக் என்ற 3 கருத்துக்களும் இதில் உறுதிப்படுத்தப்பட்டன.

2003ம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 3ம் நாள், 29வது ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான சின்னமான நடனமாடும் பெய்ஜிங் என்பது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

2004ம் ஆண்டு ஜுலை திங்கள் 13ம் நாளிரவு, பெய்ஜிங் 2008 ஊனமுற்றோருக்கான ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் சின்னம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. அதே ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 29ம் நாள், ஏதென்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் நிறைவு விழாவில், பெய்ஜிங் மாநகராட்சித் தலைவர் வாங் ச்சி சான், ஒலிம்பிக் கொடியைப் பெற்றுக்கொண்டார். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி அதிகாரப்பூர்வமாக பெய்ஜிங் ஒலிம்பிக் காலத்துக்குள் இது காட்டுகின்றது.

2005ம் ஆண்டு ஜுன் திங்கள் 26ம் நாள், 29வது ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் ஓர் உலகம், ஒரு கனவு என்ற முழக்கம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. அதே ஆண்டு நவம்பர் 11ம் நாள், இப்போட்டிக்கான மங்கல சின்னமான fu waக்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டன.

2006ம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 29ம் நாள், 29வது ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் நிகழ்ச்சிகள் உறுதிப்படுத்தப்பட்டன. 28 விளையாட்டுக்களில் 302 வகை போட்டிகள் நடைபெறும் என்று தெரிய வருகின்றது.

2007ம் ஆண்டு மார்சு திங்கள் 27ம் நாள், 29வது ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் பதக்கங்களின் வடிவமைப்பு வெளியிடப்பட்டது. அதே ஆண்டு ஏப்ரல் திங்கள் 15ம் நாள், உலக மக்களுக்கான இப்போட்டியின் நுழைவுச் சீட்டு விற்பனை துவங்கியது என்று பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்புக் குழு அறிவித்தது. இதற்கு பின் 27ம் நாள், ஒலிம்பிக் தீபத் தொடரோட்டத்தின் நெறி மற்றும் தீபத்தின் வடிவம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டன.

2008ம் ஆண்டில், மக்களுக்கு மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சி அதிகமாகி வருகின்றது

கிரேக்க நேரப் படி மார்சு திங்கள் 24ம் நாள் காலை 11:45 மணி அளவில், பெய்ஜிங் ஒலிம்பிக் புனிதத் தீயை மூட்டும் விழா, பண்டைய ஒலிம்பிக்கின் பாரம்பரிய இடமான ஹாலா கோயிலுக்கு முன் நடைபெற்றது.

பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்புக் குழுவின் தலைவர் லியு ச்சி வி்ழாவில் கூறியதாவது

B-9

ஒலிம்பிக் புனிதத் தீபம் என்றுமே மக்களின் மனதில் ஏற்றப்பட்டு, அமைதி, நட்புறவு, முன்னேற்றம் ஆகியவற்றின் நனவாக்கத்தை நாடும் நாடும் மனித குலத்தின் முன்னேற்றப் பாதையை ஒளியூட்ட வேண்டும் என்று வாழ்த்துகின்றோம் என்றார் அவர்.

மார்சு திங்கள் 31ம் நாள், ஒலிம்பிக் புனிதத் தீபத்தை வரவேற்கும் விழா பெய்ஜிங்கின் தியேன் ஆன் மன் சதுக்கத்தில் நடைபெற்றது.

சீன அரசுத் தலைவர் ஹு சிந்தாவ், முதலாவது தீபத்தை சீனாவின் புகழ்பெற்ற தடகள விளையாட்டு வீரர் லியு சியாங்கிடம் ஒப்படைத்தார். அவர் கூறியதாவது

பெய்ஜிங் ஒலிம்பிக் தீபத் தொடரோட்டம் துவங்குவதாக அரசுத் தலைவர் ஹு சிந்தாவ் அறிவித்தார்.

பிறகு, பெய்ஜிங் ஒலிம்பிக் தீபத் தொடரோட்டம் உலகின் 5 கண்டங்களைச் சேர்ந்த 19 நாடுகளின் 19 நகரங்களில் நடைபெற்றது. ஏப்ரல் திங்கள் 30ம் நாள், அதாவது பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி துவங்குவதற்கு முந்தைய 100வது நாளில், ஒலிம்பிக் தீபம் சீனாவுக்குத் திரும்பியது.

சீனாவிலான தீபத் தொடரோட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. குறிப்பாக, மே திங்கள் 8ம் நாள், ஒலிம்பிக் தீபம் முதன்முதலாக உலகில் மிக உயரமான ஜோமோலுங்மா சிகரத்தை எட்டியது. தீபம் ஏந்தியவர்களும் மலை ஏற்ற வீரர்களும் கூட்டாக சிகரத்தின் உச்சியில் பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

ஆகஸ்ட் திங்கள் 5ம் நாள், ஒலிம்பிக் தீபம் பெய்ஜிங் வந்தடைந்தது. 8ம் நாளிரவு, பறவைக் கூடு என்னும் சீனத் தேசிய விளையாட்டு அரங்கிலுள்ள தீபக் கலசம் அற்புதமாக ஏற்றப்பட்டது. ஒலிம்பிக் வரலாற்றில் மிக அதிக தீபம் ஏந்துபவர்கள் மிக நீண்ட காலமாக, மிகப் பரந்த அளவிலான இந்தத் தீபத் தொடரோட்டத்தை இனிமையாக நிறைவேற்றினர்.