• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-08 17:52:02    
துவங்கியுள்ள ஒலிம்பிக் செய்தி மையம்

cri
ஜுலை திங்கள் 8ம் நாள் பெய்ஜிங் ஒலிம்பிக் துவங்குவதற்கு முந்திய இறுதி திங்களின் முதல் நாளாகும். விளையாட்டு செய்திகள் அறிவிப்பு கூடாரமான பெய்ஜிங் ஒலிம்பிக் செய்தி மையம், சர்வதேச வானொலி ஒலிபரப்பு மையம் ஆகியவை அதிகாரப்பூர்வமாக செயல்பாட்டிற்கு வந்துள்ளன. பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை அறிவிக்கு செய்தியாளர்களுக்கு செய்தி ஊடக சேவையும் துவங்கியது. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஆயத பணி இறுதி காலத்தில் நுழைந்துள்ளதை இவையனைத்தும் கோடிட்டுக் காட்டியுள்ளன.

பெயர் பதிவு செய்யப்பட்ட செய்தியாளர்களின் தகவலின் படி பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் பற்றி அறிவிப்பதில் 26000 பேர் பங்கு எடுப்பர். அவர்களுக்கு வசதி வழங்குவது பற்றி செய்தி மையம் மற்றும் சர்வதேச வானொலி ஒலிபரப்பு மையத்தின் அரங்குகளின் நிர்வாகத்துக்குப் பொறுப்பான குழுத் தலைவர் ஷா வான் சியேன் கூறியதாவது.

முக்கிய செய்தி மையத்திலுள்ள 110 அலுவலகங்களை 144 செய்தி ஊடகங்கள் வாடகைக்கு எடுத்து பயன்படுத்துகின்றன. செய்தி ஊடகங்களின் எண்ணிக்கையும் செய்தி மையத்தின் அலுவலக எண்ணிக்கையும் ஒலிம்பிக் வரலாற்றில் மிக அதிகமான பதிவாக பொறிக்கப்படுகின்றது என்றார் அவர்.

இவ்வளவு அதிகமான செய்தி ஊடகங்களுக்கு தொழில் முறை மிக்க அருமையான சேவை வழங்குவதில் பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்பு குழு உறுப்பினர்கள் "நுணுக்கம்" என்ற அடிப்படையில் ஊன்றி நின்று பேட்டி காண்பது தொழில் நுட்ப ஆதரவு மற்றும் வாழ்க்கை உத்தரவாதத் துறையில் பல்வேறு நாட்டு செய்தியாளர்களுக்கு தொழில்முறை மிக்க சேவை வழங்குவார்கள். செய்தியாளர்கள் அனைவரும் தமது நாட்டில் செய்தியறிவிக்கும் மன நிறைவுடன் பணிபுரிய வசதிகள் பெறுவர்.

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் பெய்ஜிங் ஒலிம்பிக் இணக்க குழுவின் தலைவர் வெர்புருக்கன் முக்கிய செய்தி மையம் சர்வதேச வானொலி ஒலிபரப்பு மையம் ஆகியவற்றின் மூலம் செய்தியாளர்களுக்கு வழங்கப்படும் பணி சூழ்நிலையை உயர்வாக பாராட்டினார். இது பற்றி அவர் கூறியதாவது

முக்கிய செய்தி மையம் செய்தியாளர்கள் பணிபுரியும் இடம் மட்டுமல்ல அவர்களின் இரண்டாவது வீடாகும். அவர்கள் நாள் முழுதும் அங்கே பணி புரிவார்கள் பொது மக்களுக்கு குறிப்பாக விளையாட்டு இரசிகர்களுக்கு அவர்கள் பல்வகை ஒலிம்பிக் விளையாட்டு தகவல்களை வழங்குவார்கள். அவர்களுக்கு தேவைப்படும் அனைத்து வசதிகளையும் அமைப்பாளர்கள் வழங்கியுள்ளனர். இந்த செய்தி மையம் சில வாரங்கள் மட்டும் உலகின் செய்தி ஊடகங்களின் இன்னொரு வீடாக மாறச் செய்தமைக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்றார் அவர்.

ஜுலை 8ம் நாள் முதல் 14ம் நாள் வரை பெய்ஜிங் ஒலிம்பிக் தீபத் தொடரோட்ட நடவடிக்கை சீனாவின் உள்மங்கோலியத் தன்னாட்சி பிரதேசம், ஹெலுங்கியான் மற்றும் ஜிலின் மாநிலங்களில் நடைபெற்ற போது உள்ளூர் மக்கள் தனிச்சிறப்பியல்பு வாய்ந்த வடிவத்தில் அந்நடவடிக்கையில் உற்சாகம் காட்டினர். ஜுலை 12ம் நாள் ஹார்ப்பின் நகரில் உருவப் பனி சறுக்கல் துறையில் புகழ் பெற்ற சீன விளையாட்டு வீரர்களான சன் சியே, ச்சௌ ஹுன் போ இருவரும் ஒலிம்பிக் தீபத்தை ஏந்தினர். இது பற்றி ச்சௌ ஹுன் போ கூறியதாவது.

மிகவும் மகிழ்ந்தோம். 1998ம் ஆண்டு ஜப்பானில் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் பெற்ற உணர்வை இப்போதும் உணர்ந்தோம். அப்போது நான் சீனப் பிரதிநிதிக் குழுவின் சார்பில் கொடி ஏந்தியவர் என்ற முறையில் துவக்க விழாவில் கலந்து கொண்டேன். துவக்க விழாவில் ஒலிம்பிக் தீபத் தொடரோட்டம் நடைபெற்ற முழு நிகழ்வையும் நாங்கள் கண்டு இரசித்தோம். இன்று நாங்கள் தீபம் ஏந்துபவராக இந்நடவடிக்கையில் கலந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம் என்று அவர் கூறினார்.

ஜுலை 8ம் நாள் முதல் பெய்ஜிங் ஒலிம்பிக் சிறப்பு விமானங்கள் மற்றும் சிறப்பு விமானங்களுக்கான விமான சிறப்பு வாயில் அதிகாரப்பூர்வமாக இயங்கியது. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் நாட்களில் விளையாட்டு வீரர்கள் சீனாவில் நுழைந்து வெளியேறவும் சிறப்பு வாயிலை சீனச் சுங்கத் துறை திறந்துவைத்துள்ளது. ஆகவே சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் அதிகாரிகள், பல்வேறு நாடுகளின் விளையாட்டு வீரர்கள் மற்றும் ஒலிம்பிக் குடும்பத்தின் உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் பொதிகள் தடையின்றி சீனாவில் நுழைவதற்கான சோதனை விரைவாக நிறைவேற்றப்படும். பொதுவாக 95 விழுக்காட்டு வெளிநாட்டு பயணிகள் நுழைவு சோதனைக்காக காத்திருக்க வேண்டி நேரம் 25 நிமிடத்துக்குள் கட்டுப்படுத்தப்படும்.

ஜுலை 11ம் நாள் வரை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி காலத்தில்

சுற்றுலா செய்வதற்காக சுமார் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் வெளிநாட்டவர்கள் பெய்ஜிங்கிற்கு வருவர் என்று பெய்ஜிங் சுற்றுலா ஆணையம் வெளியிட்ட புதிய புள்ளிவிபரங்கள் எடுத்துக்காட்டுகின்றன. அவர்களுக்கு பெய்ஜிங் சுற்றுலாத் துறை பல்வகை மொழிபெயர்ப்பு சேவை வழங்கும் என்று பெய்ஜிங் சுற்றுலா ஆணையத்தின் துணைத் தலைவர் சியுன் யூ மேய் தெரிவித்தார். உபசரிப்பு ஆயத்தப் பணியும் அடிப்படையில் தயாராகிவிட்டது.

பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான 292 வெளிநாட்டு செய்தி ஊடகத் தொண்டர்களும் பெய்ஜிங் வந்தடைந்தனர். விளையாட்டுப் போட்டி நடைபெறும் நாட்களில் 8 விளையாட்டு அரங்குகளில் விளையாட்டு வீரர்களை நேர் காணல் மேற்கொண்டு அதன் அம்சங்களை முன்னுரையாக எழுதி பெய்ஜிங் ஒலிம்பிக் செய்தி மையத்திற்கு அனுப்புவது அவர்களின் முக்கிய கடமையாகும் என்று தெரியவருகின்றது.

பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் பங்கு கொள்ள 40 இந்திய விளையாட்டு வீரர்கள் தயாராகியுள்ளனர். வில்வித்தை போட்டி, தடகளப் போட்டி, பூ பந்துப் போட்டி, எடைப் பிரிவு ஜுடோ, துப்பாக்கி சுடுதல், படகு ஓட்டம், நீச்சல், டென்னிஸ் மற்றும் மற்போர் முதலிய போட்டிகளில் இந்திய விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்வர். அவர்கள் பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் பெறும் வாய்ப்பு முன்பை விட அதிகம். இப்போது இந்தியாவில் தனியார் போட்டியிலான விளையாட்டு தொழில் நுட்பம் முழுமையாகவும் ஆழமாகவும் சீர்திருத்தப்படுத்தப்பட்ட பின் பெரும் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டி வரலாற்றில் கசகஸ்தான், தாய்லாந்து ஆகிய நாடுகளை தாண்டி, சீனா ஜப்பான் தென்கொரியா ஆகிய நாடுகளை அடுத்து இந்தியா ஆசியாவின் 4வது விளையாட்டு வல்லரசாக மாற வேண்டும் என்று இந்திய ஒலிம்பிக் குழுவின் தலைமைச் செயலாளர் லாண்ட் சிங்க கூறினார். ஒலிம்பிக் விளையாட்டில் 2012இல் அல்லது 2016இல் பதக்க வரிசையில் இந்தியா முதல் 20வது இடங்களில் பதிவு செய்ய வேண்டும் என்று லாண்ட் சிங்க நபிக்கையுடன் தெரிவித்தார்.