• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-08 18:01:58    
பெய்ஜிங் ஒலிம்பிக் துவக்க விழாவுக்கான சிறப்பு நிகழ்ச்சி அ

cri
நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது பெய்ஜிங் ஒலிம்பிக் துவக்க விழாவுக்கான சிறப்பு நிகழ்ச்சி. இனிமையான இப்பாடல் ஒலிம்பிக் பண்ணாகும். இவ்விசையுடன் 29வது ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் அதிகாரப்பூர்வமாக துவங்கியுள்ளது.

பெய்ஜிங் நகரவாசிகளை பொறுத்தவரை இன்றிரவு தூக்கமில்லா இரவாகும். இன்று சீனா முழுவதும் ஒலிம்பிக்கிற்காக மகிழ்ச்சியடைகின்ற இரவு. 204 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 11ஆயிரம் ஒலிம்பிக் வீரர்கள் 5 வளையங்கள் கொண்ட ஒலிம்பிக் கொடியின் கீழ் அணிதிரண்டுள்ளனர். பெய்ஜிங் ஒலிம்பிக் துவக்க விழாவில் ஒலிம்பிக் குடும்பத்தின் ஒற்றுமை நிறைவேறியுள்ளது.

இந்த ஒற்றுமை சீன மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்க்கின்ற ஒற்றுமையாகும். பல்வேறு நாடுகள் கூட்டாக கவனம் செலுத்தும் தருணத்தில் 130 கோடி சீன மக்கள் விருந்தோம்பலுடன் கைகளை நீட்டி பெய்ஜிங் உங்களை வரவேற்கின்றது என்று உலகத்திற்கு அழைப்பு விடுக்கிறார்கள்.

சீன அரசுத் தலைவர் ஹுச்சிந்தாவ் 130 கோடி சீன மக்களின் சார்பில் உலகத்திற்கு உற்சாகமான அழைப்பு விடுத்தார். அவர் கூறியதாவது.

பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி சீன மக்களுக்கு மட்டுமல்ல உலகின் பன்னாட்டு மக்களுக்கும் உரித்தானது. சீன அரசு மற்றும் சீன மக்களின் சார்பில் பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டுள்ள பல்வேறு நாடுகளின் விளையாட்டு வீரர்களுக்கும் இதை கண்டு இரசிக்க பெய்ஜிங் மாநகருக்கு வந்துள்ள நண்பர்களுக்கும் வரவேற்பு தெரிவிக்கின்றேன். இந்த விளையாட்டுப் போட்டிகளை அறிவிக்க வருகை தந்துள்ள பல்வேறு நாட்டு செய்தியாளர்களுக்கும் வரவேற்பு தெரிவிக்கின்றோம் என்றார் ஹுச்சிந்தாவ்.

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டித் தலைவர் ரோக் ஆகஸ்ட் 2ம் நாள் ஒலிம்பிக் ஆயத்தப் பணி பற்றிய இறுதி விளக்கத்தை கேட்ட பின் தனது மதிப்பீட்டை அளித்தார். அவர் கூறியதாவது.

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்தும் உரிமையை பெய்ஜிங்கிடம் வழங்கியதில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு வருத்தம் இல்லை. ஒலிம்பிக்கின் மாபெரும் செல்வாக்கின் முன்பும் அருமையான அமைப்புப் பணியின் முன்பும் சர்ச்சைகள் அனைத்தும் மறைந்து போகும் என்று அவர் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

இப்போது நடைபெற்று கொண்டிருக்கும் பெய்ஜிங் ஒலிம்பிக் துவக்க விழாவில் மக்களின் கவனத்தை ஈர்க்கும் தனிச்சிறப்பியல்பு என்ன?பெய்ஜிங் நேரப்படி இன்றிரவு 8 மணியளவில் ஆரம்பித்த துவக்க விழா மூன்றரை மணி நேரம் நீடித்திருக்கும். இதில் துவக்க விழா, கலை நிகழ்ச்சி அரங்கேற்றம், விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பு விழா, ஒலிம்பிக் தீபம் ஏற்றப்படுவது ஆகிய நிகழ்ச்சி நிரல்கள் இருக்கின்றன. துவக்க மற்றும் நிறைவு விழாக்களை ஒருங்கிணைக்கும் தலைமை இயக்குனர் ச்சான் யீ மோ நடப்பு ஒலிம்பிக்கின் துவக்க விழா பற்றி கூறியதாவது

ஐயாயிரம் ஆண்டுகால வரலாறு கொண்ட சீனா பிரம்மாண்டமான நாடாகும். உலக மக்களிடம் சீனாவை கண்காட்சி போல எடுத்துக்காட்டுவது போதாது. மக்களின் மனதில் சீனா ஆழப் பதிவதையும் அவர்களை மனமுருகச் செய்வதையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றார் அவர். ஐயாயிரம் ஆண்டுகால செழுமையான பண்பாடு, நவீன சமூகத் தோற்றம், சீன இசை நாடகம், சீன இசைக் கருவிகள், சீன குங்பூஃ, சீன மொழி, அறிவியல் தொழில் நுட்பம் ஆகியவை நிறைந்த சீனாவை துவக்க விழா மூலம் உலக மக்களுக்கு காண்பிப்பதை சான் யி மோ வருணித்தார்.

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான துவக்க விழாவில் அரங்கேற்ற நிகழ்ச்சியின் ஆயத்தத்தை கண்டுசித்த பின் மெசிக்கோ தொலைகாட்சி செய்தியாளர் பெர்னார் தனது மதிப்பீட்டை தெரிவித்தார். இந்த துவக்க விழாவுக்கான கலை நிகழ்ச்சி உண்மையில் சீனப் பண்பாட்டின் தலைசிறந்த பகுதியை வெளிகாட்டியுள்ளது என்று அவர் பாராட்டினார்.

1 2