• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-08 10:20:20    
போட்டிகளில் பங்கெடுக்கும் தகுதியை பெற்றுள்ள பத்தாயிரக்கணக்கான வீரர்கள்

cri

8ம் நாள் துவங்க உள்ள பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான அனைத்து ஆயத்தப் பணிகளும் நிறைவேறியுள்ளன. போட்டியில் கலந்து கொள்ளும் தகுதியை 11 ஆயிரத்து 28 விளையாட்டு வீரர்கள் பெற்றுள்ளனர். ஆகஸ்ட் 6ம் நாள் முதல் 24ம் நாள் வரை நடைபெறும் 2173 போட்டிகளில் 302 தங்கப் பதக்கங்கள் வழங்கப்படும். இது பற்றி பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்புக் குழுவின் விளையாட்டு பகுதி தலைவர் ச்சான் ஜியெ லுங் கூறியதாவது.

பதிவு செய்த வீரர்களின் பெயர் பட்டியல் தொடர்ந்து ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. பல்வகை விளையாட்டுகளின் ஆயத்தப் போட்டி வரிசையும் உறுதிப்படுத்தப்படுகின்றது என்றார் அவர்.
போட்டிகளுக்கு சேவை புரியும் தொண்டர் அணியும் அனைவரும் விளையாட்டு கருவிகள் அனைத்தும் நடைமுறை செயல்பாட்டுக்கு வந்துள்ளன. 80க்கும் மேற்பட்ட வெளிநாட்டு அரசியல் தலைவர்கள் பெய்ஜிங் ஒலிம்பிக் துவக்க விழாவில் கலந்து கொள்வர்.
ஒலிம்பிக் போட்டியின் போது பெய்ஜிங் மாநகரின் காற்றுத் தர உத்தரவாதத்தில் வெளிநாடுகள் பொதுவாக கவனம் செலுத்தியுள்ளன. இதுவும் அடிப்படையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது பற்றி சீனச் சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரி வென் யுவான் சன் கூறியதாவது

கடந்த ஏப்ரல் மற்றும் ஜுலை திங்களில் இரண்டு முறை ஒலிம்பிக் காற்றுத் தரத்துக்கான உத்தரவாத நடவடிக்கைகளை செயல்படுத்துவது பற்றி சோதனை செய்யப்பட்டது. பல்வேறு இடங்களில் மாசுபாட்டை ஏற்படுத்தும் தொழில் நிறுவனங்களின் செயல்பாடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. சீர்கேட்டை

உண்டாக்கும் வாகனங்கள் சாலையில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளன. பயன் தரும் நடவடிக்கைகளை மேற்கொண்டதால் மாபெரும் பயன் காணப்பட்டுள்ளது. உத்தரவாத நடவடிக்கைகளில் விதிக்கப்பட்ட பல்வேறு கடமைகளும் அடிப்படையில் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.

சீன அரசுத் தலைவர் ஹுச்சிந்தாவ் பெய்ஜிங் ஒலிம்பிக் பற்றி சீனாவிலுள்ள வெளிநாட்டு செய்தி ஊடகங்களுக்கு பேட்டியளிக்கையில் நட்பு, ஒற்றுமை, அமைதி என்ற ஒலிம்பிக் எழுச்சியை பெரிதும் வெளிக்கொணர்வது வெற்றிகரமாக ஒலிம்பிக் நடத்துவதன் முக்கிய காரணியாகும் என்று தெரிவித்தார். பல்வேறு நாட்டு வீரர்களுக்கு நியாயமாக போட்டியிடும் வாய்ப்பை வழங்க வேண்டும். போட்டி மணம், தரம் ஆகியவற்றை வீரர்களை போட்டிகளின் மூலம் வெளிக்காட்டச் செய்ய வேண்டும். ஐந்து கண்டங்களின் நண்பர்களை ஒலிம்பிக் மூலம் புரிந்துணர்வை வலுப்படுத்தி நட்பை ஆழமாக்கச் செய்ய வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டித் தலைவர் ரோக் ஆகஸ்ட் முதல் நாள் பெய்ஜிங் ஒலிம்பிக்கின் அமைதியான மற்றும் நட்பார்ந்த சுவரின் திறப்பு விழாவில் கலந்து கொண்ட போது பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஆயத்தப் பணியை மீண்டும் பாராட்டினார். இந்த போட்டி இனிதே வெற்றி பெறுவது மீது அவர் நம்பிக்கை தெரிவித்தார். அவர் கூறியதாவது. 
 


போட்டிகளுக்கு தேவைப்படும் திடல்களும் அரங்குகளும் மிகவும் சீரானவை. பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்புக் குழு மேற்கொண்ட ஆயத்தப் பணிகளும் சிறப்பானவை. ஆகவே போட்டி வெற்றி பெறுவது மீது எனக்கு நம்பிக்கை உண்டு என்றார் ரோக்.
.......................................................
தவிரவும் பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள பெய்ஜிங்கு வந்தடைந்துள்ள பல்வேறு நாட்டு பிரதிநிதிக் குழுக்களும் பெய்ஜிங் ஒலிம்பிக்கின் அமைப்புப் பணியின் அருமையான ஏற்பாட்டை கண்டு மிகவும் மனநிறைவு அடைந்து பாராட்டின. இத்தாலி ஒலிம்பிக் குழுத் தலைவர் பிட்லுஜி பெய்ஜிங் ஒலிம்பிக் ஆயத்தப் பணிகள் மிகவும் சிறப்பானவை என்று பாராட்டினார். இத்தாலி விளையாட்டு வீரர்களும் பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்புக் குழுவின் ஆயத்தப் பணி மீது மனநிறைவு தெரிவித்துள்ளனர். சீனத் தைபேய் பிரதநிதிக் குழுத் தலைவர் சைஸுஜியெ கருத்து தெரிவிக்கையில் பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு அரங்குகளிலுள்ள சாதனங்கள் முந்தைய ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் காணாத வகையில் மிகவும் சிறந்தவை. இது ஒலிம்பிக் விளையாட்டுக்கான செழுமையான சொத்தாகும் என்று தெரிவித்தார்.

ஹெரால்ட் என்னும் தென் கொரிய செய்தியேடு அண்மையில் கட்டுரை ஒன்றை வெளியிட்டு கருத்து தெரிவித்துள்ளது. சர்வதேசச் சமூகத்தில் வழிகாட்டும் பங்கை வெளிக்கொணர சீன மக்கள் விரும்புகின்றனர் என்பதை சாட்சியளிக்கும் வாய்ப்பாக 29வது ஒலிம்பிக் திகழ்கின்றது என்று கட்டுரை கூறுகின்றது. பெய்ஜிங் மாநகரின் மேலான காற்றுத் தரம் போட்டிகளுக்கு தேவையான காற்று வரையறைக்கு ஏற்றது. பெய்ஜிங்கில் போட்டிகள் நடைபெறுவதற்கு பிரச்சினை எதுவும் இல்லை என்று பிபிசி வானொலி பாராட்டி அறிவித்தது. Global and Mail என்னும் கனேடிய செய்தியேடு வெளியிட்ட கட்டுரையில் பெய்ஜிங் ஒலிம்பிக் கிராமத்தில் வழங்கப்படும் உணவுப் பொருட்கள் பற்றி கவலைப்படுவது வேடிக்கையாக இருக்கும் என்று சுட்டிக்காட்டியது. alAkhbar என்னும் எகிப்து செய்தியேடு பெய்ஜிங் ஒலிம்பிக் கிராமத்தை மதிப்பிடும் போது முந்தைய ஒலிம்பிக் கிராமங்களை விட மிகவும் மனித அன்பு கொண்ட கிராமம் பெய்ஜிங் ஒலிம்பிக் கிராமமாகும் என்று பாராட்டியுள்ளது.

300க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் மற்றும் 200 அதிகாரிகள் அடங்கிய மிக பெரிய பிரதிநிதிக் குழுவை பிரிட்டன் பெய்ஜிங் ஒலிம்பிக்கிற்கு அனுப்பியுள்ளது. பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் பங்கெடுப்பது 2012ம் ஆண்டு பிரிட்டனில் லண்டன் ஒலிம்பிக்கிற்கான பயிற்சியாகும் என்று பிரிட்டன் பிரதிநிதி குழுத் தலைவர் சீ மன் கிலேக் கூறினார்.

நாங்கள் தங்கப் பதக்கம் பெறும் எண்ணிக்கை பற்றிய எதிர்பார்ப்பை உங்களுக்கு அறிவிக்க மாட்டேன். வெற்றிகரமாக ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்வது எங்கள் குறிக்கோளாகும். லண்டன் ஒலிம்பிக்கிற்கான குறிக்கோளை நோக்கி முன்னேறுவோம் என்றார் அவர்.
பெய்ஜிங் லண்டன் இரு நகரங்களுக்கிடையில் பல ஒத்த அம்சங்கள் உள்ளன. இரண்டும் விறுவிறுப்பான சர்வதேச மாநகரங்களாகும். நாட்டின் தலைநகராகவும் திகழ்கின்றன. ஆகவே பெய்ஜிங்கின் அனுபவங்கள் லண்டன் கற்றுக் கொள்ளக் கூடிய அனுபவங்களாகும். பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்பு குழுவின் அனுபவங்களை மேலும் செவ்வனே கற்றுக் கொள்ளும் வகையில் நூற்றுக்கணக்கான பணியாளர்களை பிரிட்டன் அனுப்பியது. அவர்கள் பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்புக் குழுவின் பணியாளர்களுடன் இணைந்து பல்வேறு பகுதிகளில் கூட்டாக பணிபுரிவார்கள். பெரும்பான்மையாக ஒலிம்பிக் அமைப்புக் குழுவுக்கு 2000 முதல் 2500 பணியாளர்கள் உண்டு. அவர்களில் பெரும்பாலானோருக்கு ஒலிம்பிக் நடத்தும் அனுபவம் இல்லை. ஆகவே இந்த வாய்ப்பை இறுகப்பற்றி கூடுதலான அனுபவங்களை கற்றுக் கொள்ள அவர்களை பெய்ஜிங்கிற்கு அனுப்பியுள்ளோம். இதன் மூலம் லண்டன் ஒலிம்பிக் அமைப்புகக் குழுவும் பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்புக் குழுவும் நெருக்கமாக ஒத்துழைப்பது வெளிக்காட்டப்படும் என்று நான் கருதுகிறேன் என்று அவர் கூறினார்.