• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-08 21:06:56    
பெய்ஜிங் ஒலிம்பிக் துவக்க விழாவுக்கான சிறப்பு நிகழ்ச்சி ஈ

cri
ஒலிம்பிக் பூவாக்களில் ஒன்று தான் ஜிங் ஜிங் ஃபுவா. இதனை குறிப்பிடும் இசை தான். இது ஃபுவா ஜிங் ஜிங், ஒரு அழகான ராட்சத பாண்டா வடிவில் உள்ளது. அனைத்து இடங்களிலும் உள்ள, மக்களுக்கு மகிழ்ச்சியை வழங்குவதன் சின்னம் தான் இது. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை வரவேற்கும் போக்கில் சீன மக்கள் பேருற்சாகத்தை வெளிக்காட்டியுள்ளனர். சீன மக்கள், நடவடிக்கைகளின் மூலம், மானிட வள ஒலிம்பிக் கருத்தை வெளிக்காட்டினர்.

ஜூலை 27ம் நாள், பெய்ஜிங் ஒலிம்பிக் கிராமம், அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது. அன்று நடைபெற்ற திறப்பு விழாவில், ஒலிம்பிக் கிராமத்தின் தலைவர் சேன் ச்சி லி அம்மையார், சீன அரசின் சார்பில், பல்வேறு நாடுகளின் வீரர்களையும் அதிகாரிகளையும் வரவேற்றார்.
ஒலிம்பிக் கிராம வடிவமைப்பினன் முக்கிய கருத்து, மனித முதன்மையாகும். நுணுக்கங்களில், மாறுபட்ட பண்பாட்டு மற்றும் மத பின்னணியைக் கொண்ட மக்களுக்கான கவனிப்புகளை வெளிக்காட்ட நாங்கள் பாடுபட்டோம். நீங்கள், ஒலிம்பிக் கிராமத்தின் வசதிகளையும் சேவைகளையும் விரும்புவீர்கள் என்று நான் நம்புகிறேன் என்றார் அவர்.

பெய்ஜிங் ஒலிம்பிக் கிராமம், ஒலிம்பிக் பூங்காவில் அமைந்துள்ளது. இது நல்ல சுற்றுச்சூழல் மிகுந்து அழகானது. போக்குவரத்துக்கு வசதியானது. இதிலிருந்து, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் முக்கிய விளையாட்டரங்குகளுக்கு உள்ள தூரம், 3 கிலோமீட்டரை தாண்ட வில்லை. ஒலிம்பிக் கிராமத்தில் சர்வதேசப்பகுதி குடியிருப்பு பகுதி, நிர்வாகப்பகுதி ஆகியவை அடங்குகிறன. இதில், சீனாவின் சிறப்புகளை வெளிக்காட்டுகின்ற பல வடிவமைப்புகள் உள்ளன. பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்புக் குழுவின் ஒலிம்பிக் கிராமப் பிரிவின் துணை தலைவர் தங் யா பிங் கூறியதாவது—


வெளிநாட்டு விளையாட்டு வீரர்களை, சீன பண்பாட்டை அறிய செய்யும் வகையில், ஒலிம்பிக் கிராமத்தில் சீன தேநீரகங்கள், உள்ளன. இவற்றில், பாரம்பரிய தேநீர் தயாரிப்பு கலை வெளிக்காட்டப்படுகிறது என்றார் அவர்.
தவிரவும், ஒலிம்பிக் கிராம சர்வதேசப் பகுதியிலான அதிகமான வசதிகளின் மூலம், வெளிநாட்டு விளையாட்டு வீரர்கள் சர்வதேச சேவைகளை உணர்ந்து கொள்ள செய்ய முடியும்.
பல்வேறு நாடுகளின் செய்தி ஊடகங்களுக்கு வசதி அளிக்கும் வகையில், தொழில் நுட்ப ஆதரவு, வாழ்க்கை உத்தரவாதம் ஆகிய துறைகளில், பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்பு குழு, பல ஆயத்தப் பணிகளை மேற்கொண்டுள்ளது.

தவிரவும், பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்பு குழு, பதிவு செய்துள்ள செய்தியாளர்களுக்கு கம்பியில்லா இணைய சேவையை அளிக்கின்றது. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் எல்லா இடங்களிலும் கம்பியில்லா இணைய வசதி பயன்படுத்தப்படலாம் இச்சேவைகள் முதன்முதலாக பயன்படுத்தப்படுகின்றன. செய்தி ஊடகங்களுக்கு சேவை அளிக்கின்ற துறையில் பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்பு குழு செய்த முயற்சியை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் வேர்புருகன் பாராட்டினார்.

முக்கிய செய்தி மையம், செய்தியாளர்கள் பணிபுரியும் இடம் மட்டுமல்ல, அவர்களின் இன்னொரு வீடாகும். அவர்கள், முழு நாளிலும், அங்கே பணிபுரிந்து, விளையாட்டு இரசிகர்களுக்கு பல்வேறு ஒலிம்பிக் செய்திகளை அளிப்பர். நாங்கள், இவை அனைத்தையும் ஏற்பாடு செய்துள்ள பணியாளருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். செய்தியாளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் பொருட்களையும் வழங்குகின்றனர் என்றார் அவர்.

பெய்ஜிங், விளையாட்டு வீரர்களுக்கும் செய்தியாளர்களுக்கும் வசதியான வீடுகளை அளித்தது மட்டுமல்ல. பெய்ஜிங்கில் வந்துள்ள வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கும் தங்க வீடுகள் அளிக்கும். இது தான் ஒலிம்பிக் குடும்பம். ஒலிம்பிக் விளையாட்டுப்

போட்டி காலத்தில், சுற்றுலா பயணிகளுக்கும் இரசிகர்களுக்கும் தங்குமிட வசதி சேவைகளை அளிக்கும் பெய்ஜிங் குடும்பங்கள், ஒலிம்பிக் குடும்பம் என்றழைக்கப்படுகின்றன. போட்டிக் காலத்தில், பெய்ஜிங்கில் 600 ஒலிம்பிக் குடும்பங்கள் செயல்பட உள்ளன.
சீன குடும்பத்தில் வாழ வேண்டுமென்ற சீன மக்களின் பேருற்சாகம் குறித்து நைஜீரிய சுதந்திர எழுத்தாளர் எபோ ஓலாதுங் விருப்பம் தெரிவித்தார். அவர் கூறியதாவது—

சீன உணவில் நான் ஆர்வம் காட்டுகிறேன். ஒரு சீன குடும்பத்தில் வாழ்ந்து, சீன மக்கள் உணவு சமைப்பதை பார்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். சீன பண்பாட்டை விரும்புகிறேன். அதை உணர்ந்து கொள்ளவும் விரும்புகிறேன் என்றார் அவர்.

வெளிநாட்டு நண்பர்கள், சீன பண்பாட்டின் மீது ஆர்வம் காட்டுகின்றனர். ஒலிம்பிக் ஃபுவாக்களை வடிவமைத்த கருத்து, சீனாவின் மானிட வளச் சிறப்புகளை வெளிக்காட்டியுள்ளது. சீனாவின் புகழ்பெற்ற நுண்கலை விமர்சகர் ஷுய் தியன் சுங் கூறியதாவது—
நாங்கள் வெளியிட்ட ஒலிம்பிக் ஃபுவாக்கள், நட்புறவு கொண்டவை. சீன தேசிய பண்பாட்டுக்கு புதிய பொருளை ஒலிம்பிக் ஃபுவாக்கள் வழங்குவர் என்றார் அவர்.
சீன மானிட வளச் சிறப்புகளை வெளிக்காட்டும் வடிவமைப்பு, ஒலிம்பிக் ஃபுவாக்கள் மட்டுமல்ல. பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் சின்னம் மற்றும் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்ட வடிவமைப்பிலும் சீன பண்பாட்டு சிறப்புகள் சேர்க்கப்பட்டன.


அழகான ஒலிம்பிக் ஃபுவாவான ஜிங் ஜிங், ஆற்றல் உணர்த்துகின்றது. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை ஆயத்தம் செய்த போக்கில் சீன மக்களின் துணிவையும், ஆற்றலையும், நம்பிக்கையார்வத்தையும் வெளிக்காட்டுகின்றது.
ஏப்ரல் 2ம் நாள், அமைதி, நட்புறவு, விருப்பம் ஆகியவற்றைக் குறிக்கும் பெய்ஜிங் ஒலிம்பிக் தீபம், உலகின் 19 நகரங்களில் வலம் வர துவங்கியது
ஒலிம்பிக் புனித தீபம், மஸ்கெட் நகரில் வந்ததற்கு, நான் மிக மகிழ்ச்சியடைகிறேன்.
ஒலிம்பிக் புனித தீபம் வந்ததற்கு சியோ நகரில் வாழ்கின்ற நான், பெருமையடைகிறேன்.
ஆனால், தீபத் தொடரோட போக்கு, திபெத் சுதந்திரத்துக்கு ஆதரவு அளித்தவர் சிலர், அந்தரங்க நோக்கமுடையோர் ஆகியோரால் தலையீடு செய்யப்பட்டது.
பெய்ஜிங் ஒலிம்பிக் தீபத் தொடரோட்டம் தலையீடு செய்யப்படுவதற்கு, சர்வதேச சமூகம் கண்டனம் தெரிவித்தது. ஐ.நா. தலைமை செயலர் பான் கி மூன் கூறியதாவது—

 


விளையாட்டு, விளையாட்டு தான். சர்வதேச சமூகம், சமத்துவ முறையில் போட்டி நடத்துகின்ற, இணக்கமான, ஒற்றுமையான, பரஸ்பர புரிந்துணர்வு கொண்ட இடமாக ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி மாற வேண்டும் என்றார் அவர்.
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை ஆயத்தம் செய்த 7 ஆண்டுகளில், சீனா சார்ஸ் நோய், பனி பேரழிவு, நிலநடுக்கம் ஆகிய பேரழிவுகளால் பாதிக்கப்பட்டது. இன்னல்களை எதிர்நோக்கி, சீன அரசு மற்றும் மக்கள் ஒன்று திரண்டு பாடுபட்டனர். சர்வதேச சமூகம், சீனாவுக்கு அளித்த ஆதரவினால் இந்த இன்னல்களை சமாளித்து, அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் சீனா தான் நனவாக்கியுள்ளது.