• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-09 02:03:32    
பெய்ஜிங் ஒலிம்பிக் துவக்க விழாவுக்கான சிறப்பு நிகழ்ச்சி எ 

cri

FU WA எனப்படும் பெய்ஜிங் ஒலிம்பிக் மங்கல சின்னங்களில் ஒன்றான பெய் பெய், கெண்டை மீன் வடிவத்தில் உள்ளது. சீனாவின் பாரம்பரிய பண்பாட்டுக் கலைக்கிணங்க, மீன் மற்றும் நீரின் படங்கள், செழுமை மற்றும் அமோக அறுவடையைக் காட்டுகின்றன. பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஆயத்தப் பணி தொடங்கியது முதல் இன்று வரையான 7 ஆண்டுகாலம், கனவை நிறைவேற்றி நல்ல அறுவடை செய்யும் காலமாகும்.
2001ஆம் ஆண்டு ஜனவரி திங்கள், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்த பெய்ஜிங் மாநகரம் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு விண்ணப்ப அறிக்கையை வழங்கி,

                                       

2008ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்தக் கூடிய திறனையும் மன உறுதியையும் வெளிப்படுத்தியது. 7 ஆண்டுகள் ஆகிவிட்டன. உலகத்துக்கான பெய்ஜிங்கின் வாக்குறுதி சீன மக்களுக்கு பெருமை தரக் கூடிய உண்மையாகியுள்ளது.
அமெரிக்காவிலிருந்து வந்த செல்வி catherine, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் போது, பெய்ஜிங் தலைநகர் விளையாட்டு உள் அரங்கில், பல்வேறு நாடுகளின் செய்தி ஊடகங்களுக்கு தன்னார்வத் தொண்டராக சேவை புரிகிறார். பெய்ஜிங்கின் காற்று தரம் பற்றி அவர் மனநிறைவு அடைகிறார்.

"நான் நன்றாக மூச்சுக் காற்றை சுவாசிகின்றேன் அல்லவா? இங்குள்ள சூழல் மோசமானது என சிலர் கருதுகின்றனர். ஆனால், உள்ளூர் அரசு மேற்கொண்ட முயற்சிகளைக் கண்டு நான் மகிழ்ச்சி அடைகின்றேன். சீரான சுற்றுச்சூழலை உருவாக்க, சரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன" என்றார் அவர்.                              

1998ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிநடத்த விண்ணப்பம் செய்ததிலிருந்து, சுற்றுச்சூழல் மேம்பாட்டில் பெய்ஜிங் மாநகராட்சி மொத்தம் 10 ஆயிரம் கோடி யுவான் ஒதுக்கீடு செய்துள்ளது. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெறும் நாள் நெருங்கி வருவதோடு, வாகனங்களின் மாசுப்பாட்டைக் கட்டுப்படுத்த பெய்ஜிங்

மாநகராட்சி பல்வகை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அத்துடன், காரை ஓட்டும் நாட்களைக் குறைப்பது என்ற அரசு சாரா நடவடிக்கையும், கார் கொண்ட இலட்சக்கணக்கான மக்களிடையில் பரவலாக்கப்பட்டுள்ளது.
பசுமை ஒலிம்பிக்கின் மூலம், பெய்ஜிங்கின் வானம்மேலும் நீலமாகவும் நீர் மேலும் தெளிவாகவும் மாறியதுடன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய கருத்தும் மக்களின் மனதில் ஆழப்பதிந்துள்ளது. பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி கொண்டு வரும் ஒரு பெரும் பயன் இதுவாகும்.
                  

மற்றொரு பெரிய பயன், பெய்ஜிங்கில் புதிதாகக் கட்டப்பட்ட பல விளையாட்டு அரங்குகளாகும். தற்போது இவ்வரங்குகள் அனைத்தும் முழுமையாக கட்டிமுடிக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கான சோதனையும் தடையின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் 29வது ஒலிம்பிக் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் Verbruggen மதிப்பிட்டுக் கூறியதாவது—
"பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஏற்பாட்டுப் பணிகள் நேர்த்தியாக மேற்கொள்ளப்பட்டு, பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்புக் குழுவின் முயற்சியால்,

விளையாட்டு அரங்குகளின் கட்டுமானம் விரைவாக நடைபெற்றுள்ளது. கட்டிடங்கள் கம்பீரமாக காணப்படுகின்றன" என்றார் அவர்.
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான வசதிகளின் தொடர்ச்சியான பயன்பாடு, பல்வேறு துறைகளின் கவனத்தை ஈர்க்கும் அம்சமாகும். பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்குப் பின் இவ்வரங்குகளின் பயன்பாடு மற்றும் வளர்ச்சி பற்றி, வடிவமைப்பின் தொடக்கத்திலேயே கருத்தில் கொள்ளப்பட்டது. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் சந்தை வளர்ச்சிக் குழுத் தலைவர் Herberg கூறியதாவது—                     

"ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்குப் பின், அதிகமான சுற்றுப்பயணிகளை சீனா ஈர்க்கும். அதன் பொருளாதாரமும் தொழிற்துறையும் வளம் மற்றும் வளர்ச்சி அடையும். நீண்டகாலத்தில் பெய்ஜிங் மட்டுமல்ல, சீனா முழுவதும் பயன் பெறும்" என்றார் அவர்.
தொலைதூரத்திலிருந்து வந்த வெளிநாட்டு நண்பர்களைப் பொறுத்த வரை, பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை வாய்ப்பாகக் கொண்டு, சீனா பற்றிய கதைகளுக்கு செவிமடுப்பதோடு, சீனாவையும் நேரில் பார்த்து உணரலாம். சீனாவுக்கும் உலகிற்கும் இடையிலான தொடர்பு இதன் மூலம் மேலும் நெருக்கமாகி விடும். உலக மக்களுக்கு பெய்ஜிங் ஒலிம்பிக் கொண்டு வரும் மாபெரும் பயன்களில் இதுவும் ஒன்றாகும். 
                    

Ni Ni, விண்ணில் பறக்கும் ஒரு பறவை. வெளிநாடுகளுக்கான திறப்பு, பொறுமை என்ற எழுச்சியை இது வெளிப்படுத்துகின்றது. பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்காக ஆயத்தம் செய்யும் போக்கில், "வெளிநாடுகளுக்கு திறந்து வைக்கும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்துவது"என்ற கோட்பாடு   செயல்படுத்தப்பட்டுள்ளது.                     

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்காக ஆயத்தம் செய்யும் போக்கு, சீனா வெளிநாடுகளுக்கு மேலும் திறந்து வைக்கும் போக்கும் ஆகும். கடந்த ஏழு ஆண்டுகளில், சீனா, உலக வர்த்தக அமைப்பில் சேர்ந்தது. வெளிநாட்டுச் செய்தி ஊடகங்கள் மீதான நிர்வாக விதிகளைத் திருத்தியது. அரசுத் தகவல்கள் மேலும் வெளிப்படையாயின. "ஓர் உலகம், ஒரு கனவு" என்ற ஒலிம்பிக் முழக்கம், ஒலிம்பிக் எழுச்சி பற்றிய சீனர்களின் புரிந்துணர்வை முழுமையாக வெளிப்படுத்துகின்றது.

பறவைக்கூடு என்ற தேசிய விளையாட்டு அரங்கு, நீர் கன சதுரம் என்ற தேசிய நீச்சல் மையம் முதலியவை, சீன மற்றும் வெளிநாட்டு வடிவமைப்பாளர்கள் கூட்டு  வடிவமைப்பில் உருவான சிறப்பான படைப்புகளாகும்.  

பெய்சிங் ஒலிம்பிக் சின்னம், மங்கலப் பொருட்கள், தீபம் முதலியவற்றின் வடிவமைப்பில் மிகப் பல சீன மற்றும் வெளிநாட்டு கலைஞர்களின் முயற்சிகள் ஒன்றிணைந்துள்ளன.

1 2