• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-10-10 09:22:47    
பறக்கும் பாடல்

cri
மியோ இன நாட்டுப்புறப்பாடலான பறக்கும் பாடல் எனும் பாடலைக் கேட்டு இரசியுங்கள். மியோ இனம் என்றால், சீனாவில் நீண்ட வரலாறு கொண்ட சிறுப்பாண்மை தேசிய இனமாகும் அவ்வின மக்கள் சீனாவின் தென்மேற்கு பகுதியில் வாழ்கின்றனர். மியோ இன நாட்டுப்புறப்பாடல்கள், பறக்கும் பாடல், பயணப் பாடல், பழக்கவழக்க பாடல், கதைப்பாடல், அர்ப்பணப்பாடல் எனபல வகைகளாகப் பிரிக்க்ப்படுகின்றன. பறக்கும் பாடல் என்றால், குவெய்சோ மாநிலத்தின் தெற்கிழக்கு பகுதியில் பரவியுள்ள ஒரு வகை பாடல் வடிவமாகும். அது, மலைகளுக்கிடையிலும், வயிலிலும் பாடப்படும் பாடல்களைக் குறிக்கிறது. அதற்கு மிக உச்சமான உயரமான இராகம் உண்டு. நீங்கள் கேட்க இருக்கும் இப்பாடலில், மியோ இனத்தின் பழக்கவழக்கமும், எழில் மிக்க அருமையான இயற்கைக் காட்சியும் சிறந்த முறையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

உயர் மலையில் ஏறி, தொலையிலுள்ள தினையின் மஞ்சள் நிறத்தைப் பார்க்கின்றேன்.

கிழக்கு திசை நோக்கி ஆற்று நீர் ஓடுகின்றது

சமையல் புகை மிதந்து செல்கின்றது

அழகான என் பிறந்த ஊருக்காகப் பாடுவேன்

வசந்தச் சூரியன் வெப்பமானது

மியோ இன ஊர் பசுமையானது

நூறு மலர்கள் மலர்க்கின்றன

பாடல் உரக்க ஒலிக்கின்றது என்று இப்பாடல் வரிகள் உள்ளன.