• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-11-11 09:51:30    
நேயர்களின் கருத்துக்கள்

cri

கலை: வணக்கம் நேயர்களே. மீண்டும் உங்கள் அனைவரையும் நேயர் நேரம் நிகழ்ச்சியில் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். நிகழ்ச்சிகளை தவறாமல் கேட்டு நீங்கள் எங்களுக்கு எழுதியனுப்பும் கடிதங்களும், மின்னஞ்சல்களும்தான் இந்த நிகழ்ச்சிக்கும், எமது பணிக்கும் ஆதாரமாய் அமைகின்றன. அந்த வகையில் நேயர் என்ற முறையில் இந்த முயற்சியில் சளையாது ஈடுபட்டு எம்மை ஊக்கமூட்டி வரும் உங்கள் அனைவருக்கும் எமது நன்றிகள்.
க்ளீட்டஸ்: புதிய ஒரு சுற்றுலா பொது அறிவுப்போட்டி அறிவிக்கப்பட்டுள்ளதால் நேயர்கள் தங்களால் இயன்ற அளவு அதிகமான விடைத்தாட்களை அனுப்பும் முயற்சியில் ஈடுபடுவார்கள். அனைவருக்கும் பரிசுகளை வெல்ல வாழ்த்துக்கள் தெரிவிக்கிறோம்.
கலை: ஆமாம், பொது அறிவுப்போட்டிக்கான பங்களிப்பை போன்றே, தவறாமல் நிகழ்ச்சிகளை கேட்டு, அவை பற்றிய கருத்துக்களையும், ஆலோசனைகளையும் எழுதும் முக்கிய நேயர் கடமையையும் மறக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

கடிதப்பகுதி
கலை: 30 பள்ளிப்பட்டி என். கார்த்திகேயன் எழுதிய கடிதம். சீனாவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளை கண்டுகளித்தோம். குறிப்பாக துவக்க விழா கலைநிகழ்ச்சிகளும், நிறைவு விழா கலைநிகழ்ச்சிகளும் மிகவும் அருமை. சீனா இந்த போட்டியில் பதக்கப்படியலில் முதலிடம் பெற்றது மேலும் மகிழ்ச்சிக்குரிய விடயம்.
க்ளீட்டஸ்: தென்பொன்முடி தெ.நா.மணிகண்டன் எழுதிய கடிதம். பெய்ஜிங்கின் இருப்புப்பாதை பற்றிய இன்பப்பயணம் நிகழ்ச்சியை செவிமடுத்தேன். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சீனா ஏற்படுத்தி தந்துள்ள சுரங்க இருப்புப்பாதை பெய்ஜிங் மாநகரை மிக விரைவாக சுற்றி வர உதவுகிறது. 5 நெறிகளில் 140 கிமீ தொலைவை கொண்ட இந்த இருப்புப்பாதை வலைபின்னல் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வசதியாகும்.


கலை: இலங்கை கினிகத்தேனை எம். பி. மூர்த்தி எழுதிய கடிதம். கடந்த ஆகஸ்ட் திங்களில் உலகையே வியக்க வைத்த ஒலிம்பிக் போட்டி சிறப்பாக சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் நடந்தேறியது. முன்னெப்போதும் இடம்பெறாத வகையில், உலக நாடுகள் மூக்கின் மீது விரல் வைக்கக்கூடியதாக மிகச் சிறப்பாக துவக்க விழா நிகழ்ச்சியை பெய்ஜிங் நடத்திக் காட்டியதை இலங்கை செய்தியேடுகள் நிழற்படங்களோடு வெளியிட்டு பாராட்டின. இது பெய்ஜிங் மாநகரின் ஒலிம்பிக் ஏற்பாட்டாளர்களுக்கு கிடைத்த வெற்றியாகும்.
க்ளீட்டஸ்: பெரிய காலாப்பட்டு பெ. சந்திரசேகரன் எழுதிய கடிதம். வியாழந்தோறும் ஒலிபரப்பாகும் இசை நிகழ்ச்சி, இனிய சீன பாடல்களை எமக்கு வழங்குகிறது. மனதை மயக்கும் ரம்மியமான பாடல்களை ஒலிபரப்பி எங்களை சொக்க வைக்கும் அறிவிப்பாளர் திலகவதிக்கு நன்றிகள்.
கலை: கீழ்குந்தா நேயர் கே. கே. போஜன் எழுதிய கடிதம். பெய்ஜிங்கில் நடைபெற்ற 29வது ஒலிம்பிக் போட்டியில் ஆகஸ்ட் 11ம் நாள், 108 ஆண்டுகால வரலாற்றில் இந்தியாவின் முதல் தனிநபர் தங்கப்பதக்கம் வெல்லப்பட்டது. அபினவ் பிந்த்ரா 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றார். 2008ம் ஆண்டு பெய்ஜிங்கில் நடந்த ஒலிம்பிக்கில்தான் இந்தியாவின் முதல் தனிநபர் ஒலிம்பிக் தங்கப்பதக்கம் கிடைத்தது என்பதால் இந்தியர்கள் எவரும் சீன ஒலிம்பிக்கை மறக்கமாட்டார்கள்.
க்ளீட்டஸ்: காத்தான்குடி முஹம்மது மன்சூர் பாத்திமா நுஹா எழுதிய கடிதம். சீன வரலாற்றுச் சுவடுகள் நிகழ்ச்சியின் மூலம் சீனாவின் வரலாற்றை அறியத் தருவது நன்று. அவ்வண்ணமே சீனப் பண்பாடு, மக்கள் சீனம், இனப்பயணம் போன்ற நிகழ்ச்சிகள் சீனாவை அறிந்துகொள்ள உதவுகின்றன. மொத்தத்தில் 18 அறிவிப்பாளர்கள் நேர்ந்து சீன வானொலியை உலகெங்கும் ஒலிக்கச் செய்துவருவதற்கு நன்றியும் வாழ்த்துக்களும்.


கலை: அடுத்து திருச்சி மணக்கால் இரா. அன்பழகன் எழுதிய கடிதம். அன்றாட சீன மொழி நிகழ்ச்சியை தொடர்ந்து கேட்டு வருகிறேன். தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சியை போன்றே, அன்றாட சீன மொழி நிகழ்ச்சியும், தமிழிலேயே சீன மொழியை கற்றுக்கொள்ள உதவுகிறது. அன்றாட சீன மொழியை நிகழ்ச்சியை வரவேற்கிறோம்.
மின்னஞ்சல் பகுதி
......வளவனூர் புதுப்பாளையம் எஸ்.செல்வம்......
அக்டோபர் திங்கள் 28 ஆம் நாள் இடம்பெற்ற நிகழ்ச்சிகளைக் கேட்டேன். இன்று ஒலிபரப்பான •சீனாவில் இன்பப் பயணம்• நிகழ்ச்சியில் •பெய்ஜிங்கில் இளைஞர் விடுதிகள்• என்ற கட்டுரையைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன். சுற்றுலா மேற்கொள்ளும் இளைஞர்களுக்கு, நிம்மதியாக தங்கியிருக்க நல்ல சூழலுடன் கூடிய விடுதிகள் தேவைப்படுகின்றன. அவர்களுக்கு, வாடகைக் குறைவாக, பெய்ஜிங் மாநகரில் பல்வேறு இடங்கில் சுற்றுலா விடுதிகள் அமைக்கப்பட்டு, சுற்றுலாப் பயணிகளின் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன என்பதை அறியும் போது மனநிறைவாக இருக்கின்றது. பெய்ஜிங்கின் சிறிய ஹுதுங் வீதியில் உள்ள ஓர் இளைஞர் விடுதியில், சில திங்கள் காலம் தொடர்ந்து இளைஞர்கள் தங்குவதிலிருந்து, அவ்விடுதியின் சிறப்பை உணர முடிகிறது. சிறப்பான கட்டுரை ஒன்றை வழங்கியதற்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.


சிறுநாயக்கன்பட்டி, கே.வேலுச்சாமி
அக்டோபர் திங்கள் 17 ம் நாள் அன்று இடம் பெற்ற செய்தியின் மூலமாக சீனாவில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு வறுமைக் கோட்டிற்கு கீழ் இருந்த மக்கள் சுமார் 25 கோடி பேர் என்ற எண்ணிக்கையிலிருந்து தற்போது சுமார் 1 கோடி யே 50 லட்சம் பேராக குறைந்து இருக்கின்றது என்பதை அறிந்தேன். இதை உற்று நோக்கும் போது சீன மைய அரசு வறுமையை ஒழிக்க எடுத்து வரும் நடவடிக்கையினை தெரிந்து கொள்ளமுடிகிறது. " சீனாவில் எவரும் வறுமையில் இல்லை" என்று உலகம் போற்றும் காலம் வெகு தொலைவில் இல்லை.
மதுரை 20, அண்ணாநகர், N. இராமசாமி
அக்டோபர் 13ம் நாள் ஒலிப்பரப்பான அறிவியல் உலகம் நிகழ்ச்சியில் மூளை பொய் சொல்லுமா? என்ற செய்தியை கேட்டேன். நாட்கள் செல்லச் செல்ல மூளையில் நினைவு இழப்பது மிகவும் அதிகரிக்கிறது என்ற ஆய்வு உண்மையை தெளிவாக நேயர்களுக்கு எடுத்து கூறிய சீன வானொலி தமிழ்ப்பிரிவை எத்தனை முறை பாராட்டினாலும் தகும்.
……பாண்டிச்சேரி ஜி ராஜகோபால்……
சீன மகளிர் நிகழ்ச்சியில் பொதுச்சேவையையும் செய்து கொண்டு, ஒய்வு நேரங்களில் குழந்தைகளுக்கு ஆங்கில மொழியை கற்றுக் கொடுத்தும் வரும் லுயி அம்மையார் அவர்களின் தன்னலம் கருதாத உன்னதமான பணி பற்றி கேட்டு ரசித்தேன். சீன மகளிர் நிகழ்ச்சியில் பல சாதனைகளை படைத்துவரும் சீனப் பெண்மணிகள் பற்றிய கட்டுரைகளை அதிகமாக எதிர்பார்க்கின்றேன். லுயி அம்மையாரை போல் பலர் எல்லாகிராமங்களிலும் இருந்தால் கிராமங்களில் வறுமையும், கல்வி அறிவும் வளர்ச்சி அடையும். வளமையான கிராமங்கள் உருவானால், வலிமையான நாடு உருவாகும். வாழ்த்துக்கள்!


.......காளியப்பம்பாளையம் க.ராகம் பழனியப்பன்.......
கடந்த வாரத்தில் பெய்ஜிங்கில் முடிவடைந்த 7வது ஆசிய-ஐரோப்பிய உச்சி மாநாட்டில் நிதி நெருக்கடியை சமாளிப்பது முக்கிய பிரச்சினையாக விவாதிக்கப்பட்டது. நிதி நெருக்கடி வளரும் நாடுகளுக்கு ஏற்படுத்தும் பாதிப்பு மிகக் கடுமையானது. அதனை சமாளிக்கும் போது அந்த் நாடுகளின் நலன்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று வளரும் நாடுகளின் தலைவர்கள் பலர் கருத்துக்கள் தெரிவித்தனர். இது உண்மையில் கவனிக்கப்படவேண்டிய விடயம் நிதி நெருக்கடி முதலீட்டு வாய்ப்பை குறைத்து விடும் ஆபத்து நிலவுகிறது.
புதுக்கோட்டை ஜி. வரதராஜன் (056196)……
ஏழாவது ஆசிய-ஐரோப்பிய உச்சி மாநாடு பெய்ஜிங்கில் துவங்கியது பற்றிய செய்தித் தொகுப்பைக் கேட்டு ரசித்தேன். சீனாவில் முதல் முறையாக நடைபெற்ற ஆசிய-ஐரோப்பிய உச்சி மாநாட்டின்போது, ஆசியாவும் ஐரோப்பாவும் தத்தமது சமூக அமைப்பு முறையை மதித்து, ஒன்று மற்றதின் வளர்ச்சிக் கொள்கை திசையை அறிந்து, பொருளாதாரத்தில் ஒன்றில் இல்லாதவற்றை மற்றது நிறைவு செய்யும் மேம்பாட்டை போதியளவில் பயன்படுத்த வேண்டும் என்று ஹூசிந்தாவ் கூறியுள்ளார். மேலும், சமத்துவப் பேச்சுவார்த்தை கலந்தாய்வு ஆகியவற்றின் மூலம் பொருளாதார வர்த்தக சர்ச்சையை தீர்த்து உலகளவிலான அறைகூவலை சமாளிக்க வேண்டும் என்று அவர் கூறிய கருத்தை வரவேற்கின்றேன்.
….மதுரை-20 ஆர்.அமுதாராணி…..
பெய்ஜிக்கில் நடைபெற்ற 7வது ஆசியா ஜரோப்பா உச்சி மாநாட்டில்
கலந்து கொண்ட இந்தியா தலைமை அமைச்சர் மன்மோகன்சிக்கை சீன அரசுத் தலைவர் ஹுசிந்தாவ் சந்தித்துரையாடினார். இருவரது சந்திப்பு உலக அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மிகுந்த மக்கள்தொகை கொண்ட சீனாவும் இந்தியாவும் முக்கிய பிரச்சினைகளில் ஒருங்கிணைந்து ஒத்துழைக்கும் வகையில் சேர்ந்து பாடுபாட வேண்டும்.


......முனுகப்பட்டு.பி.கண்ணன்சேகர்......
சீனாவில் சீர்திருத்த மற்றும் வெளிநாட்டு திறப்பு பணி மேற்கொள்ள‌ப்பட்டு 30 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி நமது தமிழ்ப்பிரிவின் இணையதளத்தில் புதிய தலைப்பு மாறியிருந்ததை கண்டு மகிழ்ந்தேன். இந்த கால கட்டத்தில் சீனா அடைந்த வளர்ச்சியை எண்ணி மகிழ்வும் வியப்பும் அடைகிறேன். வாழ்த்துக்கள் பல.
......ஊட்டி; எஸ்.கே.சுரேந்திரன்......
செய்தியில் 2000ஆம் ஆண்டின் இறுதிவரை சீன கிராமப் புற‌ங்களில் வாழ்ந்த 37.9 கோடி மக்களின் குடிநீர் பற்றாக்குறை மற்றும் பாதுகாப்பான குடிநீரின்மை போன்ற பிரச்சனைகளை எதிர் நோக்கியிருந்ததை கேட்டேன். ஆனால் கிராமப்புற வளர்ச்சியை விரிவுபடுத்த சீன அரசு எடுத்த மிகச் சிறந்த முயற்சிகளால் கடந்த 9 ஆண்டுகளில் 6160 கோடி யுவானை ஒதுக்கீட்டில் கிராமப் புறங்களிலான பாதுகாப்பான குடிநீர் திட்டப்பணி சீனாவில் பண்முகங்களிலும் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளதை அறிந்து மகிந்தேன். தற்போது 16 கோடி மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைப்பது மிகவும் சிறப்பான செய்தி.