• சீன வானொலி நிலையம்• தமிழ் ஒலிபரப்பு
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-11-12 16:00:21    
சீன இளைஞர் பிரதிநிதிக் குழுவின் இந்திய பயணம்

cri

நீங்கள் இப்போது கேட்டுக் கொண்டிருப்பது, சமகால இந்திய சமூக மற்றும் இளைஞர் வளர்ச்சி நிலைமை பற்றிய ஒளி ஓசையாகும். சீனாவின் பல்வேறு இடங்களைச் சேர்ந்த 100 இளைஞர் பிரதிநிதிகள் இநவ்வொளிப்பதிவை பார்த்தனர். கடந்த சில ஆண்டுகளில் சீன மற்றும் இந்திய அரசுகளின் தலைவர்கள் உருவாக்கிய உடன்படிக்கைகளின் படி, 11ம் நாள் புது தில்லியை அடைந்த இந்த சீன இளைஞர் பிரதிநிதிக் குழு, இந்தியாவில் பயணம் மேற்கொண்ட மூன்றாவது தொகுதி நூறு கொண்ட சீன இளைஞர் பிரதிநிதிக் குழுவாகும்.

அனைத்துச் சீன இளைஞர் சம்மேளனத்தின் துணைத் தலைவர் Wang Hongyan தலைமையிலான இந்த பிரதிநிதிக் குழு இந்தியாவில் 10 நாட்கள் நீடிக்கும் பயணத்தை மேற்கொள்கிறது. புது தில்லியை சென்றடைந்த பின், Humayun கல்லறை, Qutb Minar ஆகிய உலகின் பண்பாட்டு மரபுச் செல்வங்களை அவர்கள் பார்வையிட்டு, Nehru இளைஞர் சம்மேளனத்தின் இந்திய நண்பர்களுடன் பரிமாற்றத்தை மேற்கொண்டனர்
இப்பயணத்தை ஏற்பாடு செய்த இந்திய இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சின் நேரு இளைஞர் சம்மேளனத்தின் இயக்குனர் சார்தா அலிகான் அம்மையார் தலைமையிலான, இளைஞர் பிரதிநிதிக்குழு, இவ்வாண்டின் ஜுன், ஜுலை திங்களில் சீனாவில் பயணம் மேற்கொண்டது. இது பற்றி, அவர் கூறியதாவது:

எமது சீனப் பயணம் எங்கள் மனதில் ஆழப்பதிந்துள்ளது. இந்தியாவும் சீனாவும் அண்டை நாடுகள். இரு நாடுகளுக்குமிடையில் பரம்பரை பரம்பரையாக நட்புறவு நிலவி வருகின்றது. இது, முக்கியமானது. நாம் மேலதிக பரிமாற்றங்களை செய்து, பரஸ்பரம் கற்றுக்கொண்டு புரிந்துணர்வை அதிகரிக்க வேண்டும். இந்த நல்ல விருப்பத்துக்கு இணங்க, கடந்த சில ஆண்டுகளில், இரு நாடுகளின் இளைஞர்கள் இவ்வகை பரஸ்பரப் பயணத்தின் மூலம் பலவற்றை கற்றுக்கொண்டு புரிந்துகொண்டனர். தற்போதைய சீன இளைடஞர் பிரதிநிதிக் குழுவினர் இந்தியப் பயணத்திலான முதல் நாள் அனுபவத்திற்கு பின், இந்தியாவை பற்றி மேலும் அறிந்து கொள்வதேடு, இந்த பயணத்தின்அருமையான நினைவுகளை அவர்கள் சீனாவுக்கு தங்களோடு கொண்டு செல்வார்கள் என்று நான் நம்புகின்றேன் என்றார் அவர்.
மர்மணான பல விடயங்கள் நிறைந்த நாடாக இந்தியாவை கருதுகின்றேன்.

இப்பயணத்தின் மூலம், பழம் பெறும் நாகரிகச் சிறப்பு வாய்ந்த இந்தியாவை பற்றி, பல புதிய தகவல்களை கற்றுக்கொள்ள முடியும். மேலும், இந்திய மக்களின் பேரூக்கத்தையும் வளர்ச்சியால் இந்தியாவில் ஏற்பட்ட மாற்றத்தையும் உணர்ந்து கொள்ள முடியும். இப்பயணத்தின் மூலம், உண்மையான இந்தியாவை மேலதிகமான சீன மக்களுக்கு அறியச் செய்ய வேண்டும். சீனாவின் Gui Zhou மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் பிரதிநிதி Zou Jiangping விருப்பம் தெரிவித்தார். தவிர, நாணயம், வேளாண் கடன் ஆகிய தமது பணியுடன் தொடர்புடைய துறைகளை குறித்து மேலும் அறிந்து கொள்ள வேண்டும் என்று அவர் விரும்ப்பம் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:

கிராமப்புறங்களுக்கு இந்திய நிதியமைச்சு சேவை வழங்குவது பற்றி, நான் இயன்ற அளவில் அறிந்து கொள்ள முயல்கின்றேன். தற்போது சீனா இத்துறை பற்றி ஆராய்ந்து வருகின்றது. எனவே, இப்பரிமாற்றம் எமது பணிக்கு துணை புரியும் என்றார் அவர்.
இளைஞர் பிரதிநிதிகளின் ஆக்கப்பூர்வ கேள்விகளையும் ஆய்வு நோக்கிலான அணுகுமுறையையும் ஆராய்ச்சியும், இப்பரிமாற்றத்தை ஏற்பாடு செய்த இந்திய தரப்பு ஆழமாக பதிய வைத்துக்கொள்ளும். ஏற்பாடு செய்த வாரியங்களில் ஒரு தரப்பான Nehru இளைஞர் சம்மேளனத்தின் பொறுப்பாளர் Atul Pandey செய்தியாளரிடம் கூறியதாவது:

முன்வைத்த பிரச்சினைகளுக்க இணங்க, அனைவரும் இந்திய இளைஞர் பணியில் மிகவும் கவனம் செலுத்துகின்றனர். இளைஞர் பணித் துறையில் சீனா இந்தியா ஆகிய நாடுகளுக்கும் பல பொது அம்சங்கள் உண்டு. நாம் பல அனுபவங்களை பகிர்ந்து கொள்ளலாம். அடுத்த நிகழ்ச்சி நிரலில், இரு தரப்பின் அனுபவங்களை ஆராய்ந்து பரிமாறிக்கொள்ளலாம் என்றார் அவர்.

இந்திய தரப்பின் ஏற்பாட்டின் படி, அடுத்த 10 நாட்களில், சீன இளைஞர் பிரதிநிதிக் குழு இந்தியாவின் இளைஞர் பணி பற்றிசோதனை செய்து, தொழில் நிறுவனங்கள், குடியிருப்பப்் பிரதேசங்கள், பல்கலைக்கழக்கங்கள், கிராமப்புறங்கள் ஆகியவற்றில் சுற்றுப்பயணம் செய்யும். இந்திய பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பல்வேறு துறையினருடன் பரிமாற்றங்கள் செய்யும். இந்தியா, சீன இளைஞர்களுக்கு வழங்கும் வாய்ப்புக்கு சீனப் பிரதிநிதிக் குழுவின் தலைவர் Wang Hongyan நன்றி தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:

இந்தியா வந்தடைந்ததும் இந்திய மக்களின் நட்பையும் அன்புணர்வையும் நாங்கள் உணர்ந்து கொண்டுள்ளோம். இளைஞர்களுக்கிடையிலான பரிமாற்றம் பொதுவாக நாடுகளிடை நட்புறவின் அடிப்படையாகும். இந்திய இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சு உள்ளிட்ட பல்வேறு தரப்பின் சிறந்த ஏற்பாடுகளின் மூலம், இரு நாடுகளின் இளைஞர்கள் பரஸ்பரம் கற்றுக்கொண்டு பரிமாற்றத்தை வலுப்படுத்த வேண்டுமென விரும்புகின்றோம் என்றார் அவர்.