• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-02-02 15:16:43    
சீன வாகன சந்தை

cri

நிதி நெருக்கடியினால் ஏற்பட்ட உலகப் பொருளாதாரக் கொந்தளிப்பில், வாகன நுகர்வுச் சந்தை, தப்பிக்க இயலாது. ஐரோப்பா, வட அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா முதலிய வாகன தயாரிப்பு மற்றும் நுகர்வு நாடுகளில், வாகன நுகர்வுத் தேவை பெரிதும் குறைந்துள்ளது. இப்பின்னணியில், சர்வதேச வாகனத் தொழில் நிறுவனங்கள், அவர்களது பார்வையை புதிய சந்தையான சீனாவுக்கு திருப்பின.

2007ம் ஆண்டு சீனாவின் வாகன விற்பனை அளவு 88 இலட்சத்தை எட்டியது. சீனா, அமெரிக்காவை அடுத்து உலகின் இரண்டாவது பெரிய வாகன நுகர்வுச் சந்தையாக மாறியது. 2008ம் ஆண்டில், சர்வதேச நிதி நெருக்கடியின் பாதிப்பினால், வட அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பா ஆகிய பிரதேசங்களின் வாகன நுகர்வுகள் குறைந்துள்ளன. இப்பின்னணியில், சீன வாகனச் சந்தையின் தேவை, மேலும் முக்கியமாக மாறியது. நிதி நெருக்கடியின் பாதிப்பினால், சீன வாகனச் சந்தையின் அதிகரிப்பு மெதுவாகி, ஏற்றுமதி அளவு குறைந்துள்ளது. ஆனால், பன்னாட்டுத் தொழில் நிறுவனங்கள் சீனாவுக்கான முதலீட்டை தொடர்ந்து அதிகரித்தன என்று அமெரிக்க-சீன வாகனப் பரிமாற்றச் சங்கத்தின் தலைவர் wang dazhong கூறினார்.

1 2 3