• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-03 12:03:58    
சீனாவின் வெளியுறவுக் கொள்கை

cri
தற்சார்ப்பு வெளியுறவுக் கொள்கையை சீனா எப்போதும் பின்பற்றி வருகின்றது. உலகத்தின் அமைதிக்கும் நிதானத்துக்கும் ஆக்கப்பூர்வ பங்காற்றி வருகிறது என்று ஆசிய-பசிபிக்-சீனா தொடர்பான பிரேசில் ஆய்வகத்தின் தலைவர் SeverinoCabralFilho கூறினார். சீனத் தேசிய மக்கள் மற்றும் மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் கூட்டத்தொடர்களை நடைபெறுவதற்கு முன், அளித்த சிறப்புப் பேட்டியில் அவர் இதைத் தெரிவித்தார்.
கடந்த பல ஆண்டுகளாக, தற்சார்ப்பு வெளியுறவுக் கொள்கையை சீனா பின்பற்றி வருகின்றது. அதே வேளையில், வளரும் நாடுகளுக்கு உதவி வளர்ச்சியடைந்த நாடுகளுடனான உறவை வளர்க்க சீனா பாடுபட்டு வருகின்றது. உலகின் அமைதிக்கும் நிதானத்துக்கும் வளர்ச்சிக்கும் ஆக்கப்பூர்வ பங்காற்றி வருகிறது. சக்திகளை குவித்து, பொருளாதாரத்தை வளர்க்க, நிதான சர்வதேசச் சூழ்நிலையை உருவாக்குவது, சீன வெளிநாட்டுக் கொள்கையின் அடிப்படையாகும். சீன துணை அரசுத் தலைவர் ஷி ச்சின்பீங், அண்மையில் பிரேசிலில் பயணம் மேற்கொண்டார். பயணத்தில், கனிமம், தாது, எரியாற்றல் முதலிய துறைகளில் பல ஒத்துழைப்பு உடன்படிக்கைகளில் இரு நாடுகள் கையொப்பமிட்டன. இரு நாட்டு அரசுத் தலைவர்களுக்கும் இடையிலான பரஸ்பர பயணம் பற்றிய விபரங்களைச் சீன-பிரேசில் இரு தரப்பினரும் கலந்தாய்வு மூலம் தீர்மானித்தனர்.