• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-04 08:41:06    
நிழற்படக் கலைஞர் Wang Shui Lin அ

cri

யுன்னான் மாநிலத்தின் தலைநகரான Kun Mingஐச் சேர்ந்த Wang Shui Lin என்பவர், இயற்கைக் காட்சிகளை அழகாக நிழற்படம் எடுக்கின்ற தலைசிறந்த கலைஞர் ஆவார். கடந்த ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவில், அவரது ஒரு நிழற்படப் படைப்பு, உலகளவிலான ரசிகர்களின் கண் முன் யுன்னான் மாநிலத்தின் அற்புதமான இயற்கைக் காட்சிகளை நிறுத்தியது. Wang Shui Lin, ஓய்வு நேர நிழற்படக் கலைஞர் ஆவார்.

42 வயதான அவர், Kun Ming நகரின் தேசிய வரி விவகார அலுவலகத்தில் வேலை செய்கிறார். பத்து ஆண்டுகளுக்கு முன், தனது ஒரு நண்பர் சேகரித்த ஓர் இயற்கைக் காட்சி நிழற்படத்தால் அவர் ஈர்க்கப்பட்டார். இந்த நிழற்படம், Ren Qi Rui என்னும் இயற்கைக் காட்சி நிழற்படக் கலைஞரால் எடுக்கப்பட்டது என்று அறிந்த பின், தமக்கு நிழற்படக் கலையை கற்றுக்கொடுக்குமாறு Ren Qi Ruiஇடம் Wang Shui Lin பலமுறை கேட்டுக் கொண்டார். இது Ren Qi Ruiஐ இளகச்செய்தது. Wang Shui Lin, Ren Qi Ruiவி்ன் மாணவர்களில் ஒருவராக மாறினார்.

1 2 3