முதலில் சிறப்பு கட்டுப்பாட்டுப் பின்னணி பற்றி
மார்ச் திங்கள் 3ம் நாள் துவங்கிய சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டில் மாநாட்டின் பிரதிநிதிகள் முக்கியமாக விவாதிக்கும் பிரச்சினைகளில் உணவுப் பாதுகாப்பு பிரச்சினை ஒன்றாகும். கடந்த டிசெம்பர் திங்களில் சீனாவில் நிகழ்ந்த குழந்தைகளுக்கான சாலு பால் மாவு என்னும் முக்கிய பாதுகாப்பு நிகழ்ச்சி மக்களின் கவலையை எழுப்பியது. மெல்லமின் என்னும் உட்சேர்க்கைப் பொருள் இந்த நிகழ்ச்சி ஏற்பட்டதன் முக்கிய காரணியாகும். சட்டம் மீறி அளவுக்கு மீறிய மெல்லமின் உணவுப் பாதுகாப்புக்கு கடும் அச்சுறுத்தல் உருவாக்கியது. குறிப்பாக குழந்தை வளர்ப்புக்கு கடும் ஆபத்து ஏற்படுத்தியது. இந்த நிகழ்ச்சி நிகழ்ந்த பின் சீன அரசவையின் அவசரமான ஏற்பாட்டில் சுகாதார அமைச்சகம், தொழிற்துறை மற்றும் தகவல் மயமாக்க துறை, இடர்காப்பு துறை, கண்காணிப்புத் துறை, வேளாண் துறை, வணிக துறை, தொழில் மற்றும் வணிக தலைமை ஆணையகம், தரம் பரிசோதனை தலைமை ஆணையகம், உணவு மற்றும் மருந்து கண்காணிப்பு ஆணையகம் உள்ளிட்ட 9 அமைச்சகங்கள் இணைந்து நாடு முழுவதிலும் கட்டுப்பாட்டு குழு ஒன்றை நிறுவின. கடந்த டிசெம்பர் திங்கள் தொடங்கி, கட்டுப்பாட்டுக் குழுவின் தலைமையில் உணவுப் பாதுகாப்புத் துறையிலான கட்டுப்பாட்டு நடவடிக்கை மூன்று காலகட்டங்களில் பிரித்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது 4 திங்கள் நீடித்திருந்துள்ளது. இது மட்டுமல்ல பிப்ரவரி 28ம் நாள் நடைபெற்ற 11வது சீன தேசிய மக்கள் பேரவையின் நிரந்தர கமிட்டியின் 7வது கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட "சீன மக்கள் குடியரசின் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில்" உட்சேர்க்கைப் பொருள் பயன்பாடு மற்றும் உற்பத்தி குறித்து தெள்ளதெளிவான விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. தொழில் நுட்பரீதியில் தேவைப்படும் கோரிக்கை தவிர, உணவுப் பொருட்களில் இத்தகைய உட்சேர்க்கைப் பொருள் சேர்க்கக் கூடாது என்று விதிக்கப்பட்டுள்ளது. சட்டத்தில் 43வது முதல் 48வது வரையான 6 விதிகள் உட்சேர்க்கைப் பொருள் பயன்பாடு பற்றி கடுமையான கண்காணிப்பு விளக்கம் கூறுகின்றன. அதாவது மனித உடம்புக்கு தீங்கு விளைவிக்காத பொருளை கூட உட்சேர்க்கைப் பொருளாக பயன்படுத்தக் கூடாது என்பதாகும். ஆபத்து மதிப்பீட்டின் கீழ் பாதுகாப்பாகவும் பயன்படுத்தப்படவும் உறுதிப்படுத்தப்படும் நிலையில் தான் உட்சேர்க்கைப் பொருள் பயன்படுத்தப்படலாம். இல்லாவிட்டில், சட்டத்தை மீறும் நிகழ்ச்சியாக கையாளப்படும் என்று விதிகள் விதிக்கின்றன.
|