• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-05-05 10:19:38    
லெய்பேங் நினைவு மண்டபம்

cri

லெய்பேங், பிறருக்கு உதவி செய்ய விரும்புபவர்களின் முன்மாதிரி ஆவார். 1962ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் நாள், பணியில் இருந்த போதே அவர் உயிரிழந்தார்.

அவரது நினைவாக, அவரது எழுச்சியைப் பரப்புவதற்காக, 1964ம் ஆண்டில், கட்டியமைக்கப்பட்டதுதான் லெய்பேங் நினைவு மண்டபம். அது, லியாவ்நிங் மாநிலத்தின் பூஷூன் நகரின் வான்ஹுவா பிரதேசத்தில் உள்ளது. அதன் மொத்த பரப்பளவு, 56 ஆயிரத்து 700 சதுர மீட்டராகும்.

லெய்பேங் நினைவுத் தூபி, அவரது சிலை, அவரது கல்லறை, அவரது அருஞ்செயல் காட்சியரங்கு முதலியவை, அங்கு முக்கியமாக இடம்பெறுகின்றன. தவிர, மாவ்சேதுங், தெங்சியாவ்பிங், ஜியாங்சேமின் முதலிய சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அரசித் தலைவர்கள், லெய்பேங் பற்றி எழுதிய அர்ப்பண வாசகங்கள், லெய்பேங் பயன்படுத்திய பொருட்கள், நிழற்படங்கள் முதலிய 400க்கு மேலான தொல்பொருட்கள் அங்கு காணப்படலாம்.

இம்மண்டபம், லெய்பேங் எழுச்சியைப் பரப்பி, அவரது அருஞ்செயலை ஆராய்ந்து, அவரை நினைவு கூறும் நடவடிக்கை மையமாகும்.

லெய்பேங் நினைவுத் தூபி, நினைவு மண்டபத்தின் முக்கிய அச்சு கோட்டில் நிற்கிறது. அதன் உயரம், 13.4 மீட்டராகும். அங்கு, மாவ்சேதுங் எழுதிய லெய்பேங் தோழரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்ற வார்த்தைகள், செதுக்கப்பட்டுள்ளன.

லெய்பேங் கல்லறை, தேவதாரு மரங்களால் சூழ்ந்து காணப்படுகிறது. முன்புறத்தில், லெய்பேங் தோழரின் கல்லறை என்ற சில எழுத்துக்கள் காணப்படலாம். பின்புறத்தில், அவரது வாழ்க்கைக் குறிப்பு செதுக்கப்பட்டுள்ளது.

கல்லறைச் சதுக்கத்தில், 5 மீட்டர் உயரமான லெய்பேங்கின் சிலை இருக்கிறது.