• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-05-05 11:19:42    
உலகில் மிகப் பெரிய அறிவியல் பரவல் தளம்

cri

சீனாவின் தென் பகுதியில் அமைந்துள்ள குவாங் துங் மாநிலத்தில், உலகில் மிகப் பெரிய நிலப்பரப்புடைய மிக அதிக வசதிகளைக் கொண்ட அறிவியல் பரவல் தளம் ஒன்று கட்டிமுடிக்கப்பட்டது. குவாங் துங் அறிவியல் மையம் என்று இது அழைக்கப்படுகின்றது. உள்ளூர் அரசு இதில் 190 கோடி யுவானை ஒதுக்கீடு செய்தது. இந்தப் பெரிய சமூகப் பொது நல அறிவியல் பரவல் தளத்தில், மிகப் பல புதிய தொழில் நுட்பங்களும், புதிய உற்பத்தி பொருட்களும், மிக முன்னேறிய அறிவியல் தொழில் நுட்ப கனிகளும் காண்பிக்கப்படுகின்றன.

குவாங் துங் அறிவியல் மையத்தின் நிலப்பரப்பு 4 இலட்சத்து 50 ஆயிரம் சதுர மீட்டராகும். அதன் வெளி தோற்றம் ஒரு பெரிய இலவம் பஞ்சு மலர் போல் இருக்கின்றது. குழந்தைகளின் உலகம், எண்ணியல் உலகம், விண்வெளிப்பயணக் கனவு முதலிய 8 காட்சி பிரிவுகள் இதில் அடங்குகின்றன. 400க்கு மேலான அறிவியல் தொழில் நுட்ப பரவல் நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் குழந்தைகளுக்கானவை.

1 2 3 4 5 6