• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-05-08 09:30:44    
திபெத் கல்வித் துறையின் வளர்ச்சி

cri

கடந்த நூற்றாண்டின் 80ம் ஆண்டுகள் தொடக்கம், சீன நடுவண் அரசும் உள்ளுர் அரசும் திபெத் கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்தன. சலுகைக் கொள்கைகள் பல தொடர்ந்து நடைமுறைக்கு வந்தன. எடுத்துக்காட்டாக, இலவசக் கல்வி. அதாவது, திபெத் இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் துவக்கப்பள்ளில் சேர்ந்து, உயர் கல்விப் பட்டம் பெறும் வரையான கல்விக் கட்டணம் அனைத்தையும் அரசு ஏற்றுக்கொள்ளும். துவக்கப்பள்ளிகள் மற்றும் இடைநிலைப் பள்ளிகளில் திபெத் இன மாணவர்களில் சிலர், உணவு, உடை மற்றும் தங்குமிட வசதி ஆகிய இலவசக் கொள்கையை அனுபவிக்கின்றனர். கிராமப்புறங்களிலும் மேய்ச்சல் பிரதேசங்களிலும் உள்ள பள்ளிகளில் தங்குமிட வசதிகள் வழங்கப்பட்டன. திபெத் கல்வித் துறையை ஆதரிக்கும் வகையில், ஒப்பீட்டளவில் வளர்ச்சி அடைந்த மாநிலங்கள் மற்றும் நகரங்களிலிருந்து சிறந்த ஆசிரியார்கள் திபெத்துக்கு அனுப்பப்பட்டனர். கல்வி வசதிகளை அதிகமாக கொண்ட மாநிலங்கள் மற்றும் நகரங்களில், திபெத் இடைநிலை பள்ளிகளும் திபெத் வகுப்புகளும் நடத்தப்பட்டன். கல்வி மற்றும் வாழ்க்கைத் துறையில், திபெத் இன மாணவர்களுக்கு முன்னுரிமைக் கொள்கை வழங்கப்பட்டது. தவிர, திபெத் மொழி மற்றும் எழுத்து, திபெத் மருத்துவம், திபெத் கலைக்கல்வி, மற்றும் திபெத் இன வரலாறு தொடர்பான திபெத் பண்பாட்டு சிறப்புப்பாடம், பிரிவு, சிறப்புத்துறை, சிறப்புப் பள்ளி ஆகியவை பெருமளவில் அமைக்கப்பட்டன. இதன் மூலம், தொடர்புடைய துறையிலான சிறப்பு திறமைசாலிகள் வளர்க்கப்பட்டனர்.

நீண்டகால மதப் பண்பாட்டுப் பாரம்பரியத்தை திபெத் கொள்கின்றது. இதனால், புத்த மதக் கல்லூரியை நிறுவுவதற்கு, திபெத் தன்னாட்சிப் பிரதேச அரசு ஆதரவு அளித்தது. புகழ்பெற்ற வாழும் புத்தர்களும் புத்த மத அறிவாளர்களும் ஆசிரியராக பொறுப்பேற்று, புத்த மதத்தின் பழைய உள்ளடக்கங்கள் மற்றும் மதத்தின் வரலாற்றைக் கற்பிக்கின்றனர். பல்வேறு முக்கிய துறவியர் மடங்களில் மதமறைக் கல்வி வகுப்புகள் உருவாக்கப்பட்டன. சாதாரண நாட்களில் படிப்பை தவிர, ஆண்டுதோறும் பெருமளவிலான மதமறை பற்றிய விளக்கம் மற்றும் விவாத நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. சில பெரிய துறவியர் மடங்கள் சொந்தமாக மதமறை நூல்களை வெளியிட்டன. பொதுவாகக் கூறின், இன்றைய திபெத் கல்வித் துறை, நவீன நாகரிகத்தின் கனிகளை கூட்டாக அனுபவிப்பதோடு, திபெத் இனத்தின் பாரம்பரிய பண்பாட்டையும் நிலைநிறுத்தி வருகிறது.


1 2