• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-05-06 11:13:17    
புத்தாக்கம் நிறைந்த வாழ்க்கை

cri

பெய்ஜிங்கில் பரபரப்பான Xi Dan வணிகப் பிரதேசத்தில், இளைஞர்கள் செல்ல விரும்பும் ஒரு கடை உள்ளது. அது தான் புத்தாக்கப் பொருட்களை விற்கும் Feng Guo பெட்டி என்ற சிறப்பு கடை. 80 சதுர மீட்டருக்குட்பட்ட பரப்பளவுடைய இவ்விடத்தில், 100க்கு அதிகமான சதுரமான பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றினுள் இளம் வடிவமைப்பாளர்கள் தயாரித்த புத்தாக்கப் பொருட்கள் உள்ளன. பல பொருட்கள் நுகர்வோரிடையே குறிப்பாக இளைஞர்களிடையே பெரிதும் வரவேற்கப்படுகின்றன.

Feng Guo பெட்டி என்ற சிறப்பு கடையில் விற்கப்பட்ட வேறுபட்ட பாணியுடைய வணிகப் பொருட்களில், நவ நாகரீகமுடைய அழகான T-shirt, பை, சங்கிலி, நோட்டு புத்தகம், வில்லைகள், பொம்மை முதலியவை இடம்பெறுகின்றன. அவை அன்றாட வாழ்க்கையின் பல்வேறு துறைகளுடன் தொடர்புடையவை. எடுத்துக்காட்டாக, கோபத்தை நீக்கும் முயல். முயல் வடிவிலான இவ்வகை சிறு பொம்மை, இளம் பணியாளரின் உணர்வுடன் தொடர்புடையது. தவிரவும, பங்கு பத்திரம் வாங்குபவர் செல்வமடைய அதிர்ஷ்டத்துடன் தொடர்புடைய அதிர்ஷ்ட பை, பங்குச் சந்தை சீரடைய வேண்டும் என மக்களின் எதிர்பார்ப்பை வெளிப்படுத்துகிறது.

1 2 3