• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-06-08 10:31:21    
பிரான்ஸ் டென்னிஸ் போட்டி

cri
உள்ளூர் நேரப்படி, முதல் நாளிரவில் பாரிஸில் நடைபெற்ற ரோலன்த் காரோஸ் என்னும் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் கால் இறுதி போட்டியில், சீன இணை சன் ச்சியே, யன் சி, 1-2 என்ற ஆட்டக்கணக்கில், பேலரஸைச் சேர்ந்த அசாரென்கா, ரஷியாவைச் சேர்ந்த வெஸ்னினா இணையிடம் தோல்வியடைந்தனர். இதனால் முதல் 4 இடங்களில் நுழைய முடியவில்லை.
2006ம் ஆண்டு, பிரான்ஸ் ரோலன்த் காரோஸ் டென்னிஸ் மகளிர் இறட்டையர் போட்டியின் முதல் 4 இடங்களில், சன் ச்சியே, யன் சீ, நுழைந்தனர். சீன வீரர்கள், பிரான்ஸ் ரோலன்த் காரோஸ் டென்னிஸ் போட்டியில் பெற்ற மிக சிறந்த சாதனை, இதுவே ஆகும்.
அமெரிக்க நேரப்படி ஜூன் முதல் நாள், சீன ஆடவர் கூடைப்பந்து அணிக்கு தலைமை தாங்கியுள்ள அமெரிக்க பயிற்சியாளர் தெல் ஹாரிஸ், 50 ஆண்டு காலம் நீடித்த பயிற்சியாளர் பணியை முடிக்க தீர்மானித்துள்ளார்.

அடுத்த திங்களில், 72 வயதை அடையும் தெல் ஹாரிஸ், இவ்வாண்டு, CHICAGO BULLS அணியின் உதவி பயிற்சியாளராக பணி புரிகின்றார்.
கடந்த 50 ஆண்டுகளில், தெல் ஹாரிஸின் பயிற்சியாளர் அனுபவம் மிக செழுமையானது. அவர், மேனிலை பள்ளி, பல்கலைகழகம், NBA, வெளிநாடுகள் ஆகியவற்றில் பயிற்சியாளராக பணி புரிந்துள்ளார். NBAயில் மிக சிறந்த பயிற்சியாளர் பரிசை இவர் பெற்றுள்ளார்.
2004ம் ஆண்டு, சீன கூடைப்பந்து சம்மேளனம், தெல் ஹாரிஸூக்கு சீன ஆடவர் கூடைபந்து அணியின் பயிற்சியாளராக அழைப்பு விடுத்தது. அவர், சீன ஆடவர் கூடைப்பந்து வரலாற்றில் முதல் வெளிநாட்டு தலைமை பயிற்சியாளராவார். அவரது தலைமையில் சீன ஆடவர் கூடைபந்து அணி, எதன்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்டது.

பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு பின், புதிய சீன தேசிய ஆடவர் கூடைபந்து அணி, ஜூன் முதல் நாள் பெய்ஜிங்கில் அதிகாரப்பூர்வமாக பயிற்சி மேற்கொள்கின்றது. ஜூன் 28 29 ஆகிய இரு நாட்களில், சீன ஆடவர் கூடைபந்து அணி, சீனாவின் கிழக்குப்பகுதியிலுள்ள நின் போ நகரிலும், வடக்கிழக்குப்பகுதியிலுள்ள லியாவ் நின் மாநிலத்தின் பேன் சீ நகரிலும் ஆஸ்திரேலிய அணியுடன் இரு நட்பு போட்டிகளை விளையாடவுள்ளது.
பெய்ஜிங் நேரப்படி, ஜுன் முதல் நாளிரவில், சீன ஆடவர் கால்பந்து அணி, காவ் லின் அடித்த கோலால், 1-0 என்ற நிலையில், ஈரான் அணியை தோற்கடித்தது. சீன அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் காவ் ஹூங் போ பதவி ஏற்ற பின், சீன அணி பெற்ற முதல் வெற்றி, இதுவாகும்.

4ம் நாள், தியன் ஜின் நகரில், சீன அணி, சௌதி அரேபியா அணியுடன் விளையாடும்.
2009ம் ஆண்டு சர்வதேச நீச்சல் சம்மேளனத்தின் நீர் குதிப்பு சாம்பியன் பட்ட போட்டியின் கடைசி போட்டி, ஜூன் முதல் நாள் மாட்ரிட்டில் முடிவடைந்தது. அனைத்து 8 போட்டிகளிலும், இளைய வீரர்கள் இடம்பெறும் சீன அணி, 7 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் பதக்கங்களை பெற்றது.
சீனாவினஅ நடுப்பகுதியிலுள்ள லோ ஹோ நகரில், சீனாவின் புதிய தலைமை பயிற்சியாளர் சை பின் தலைமை தாங்கி வழிநடத்திய சீன மகளிர் கைப்பந்து அணி, 3-0 என்ற ஆட்டக்கணக்கில் கியூபா அணியை தோற்கடித்தது. 3 வெற்றிகள் என்ற சாதனையை கொண்டு 2009ம் ஆண்டு சீன சர்வதேச மகளிர் கைப்பந்து போட்டியின் சாம்பியன் பட்டம் பெற்றது.