• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-07-07 21:27:21    
குளிர்காலத்தில் ஹுவாங்ஷான் மலையின் பனிக் காட்சி

cri

குளிர்காலத்தில் ஹுவாங்ஷான் மலையில் பனிமூடிய காட்சி, இயற்கையால் வழங்கப்படும் தலைசிறந்த காட்சியாகும். இது, ஹுவாங்ஷான் மலையின் புகழ்பெற்ற காட்சிகளில் ஒன்றாகும்.

இங்குள்ள பனிமூடிய காட்சி, தேவதாரு மரங்கள், பாறைகள், மேகங்கள், வெந்நீர்வரும் வெப்ப ஊற்றுகள் ஆகியவை அனைத்தும் ஒன்றிணைந்து அருமையான இயற்கை எழில் கொஞ்சும் இடமாக உள்ளது.

பனி பெய்தவுடன், இங்குள்ள தியன்தூபேங் மலை, வெள்ளி ஆடை அணிந்த பெண் கடவுளைப் போன்றது. தாமரை மலை, ஒரு உண்மையான தாமரை மலரை போன்று தோற்றமளிக்கிறது. பனியால் மூடப்பட்ட சிங்கக் காடு மற்றும் வெள்ளி யூபீங் மலைகள் காற்று வீசும் போது, அசைவதும் இதர நேரங்களில் அசைவற்ற நிலையையும் இணைத்து தரும் அருமையான காட்சி தலமாக உள்ளது.

பனி படர்ந்த மரங்களிலுள்ள பனி உருகி வடியும் காட்சி, மிகவும் அழகாக இருக்கிறது. இவை எல்லாம், ஹுவாங்ஷான் மலையின் அற்புத காட்சிகளாகும்.