• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-07-07 17:36:44    
பெய்ஜிங் நகரை சுற்றிய வாயில்கள்

cri
பெய்ஜிங் மாநகரை சுற்றி ஒரு காலத்தில் அமைக்கப்பட்ட அரணையும், கோட்டை மாநகரமாக விளங்கிய பெய்ஜிங்கின் அந்நாளைய நுழைவாயில்களையும் பற்றி கடந்த வாரம் அறிமுகப்படுத்தினோம். கோட்டை என்றதும் இந்தி மொழி படிப்பில் ஒரு முறை பொதுத் தேர்வெழுதுகையில் நடந்தது இன்றைக்கு நினைவுக்கு வருகிறது. 12ம் வகுப்பு முடித்த பிறகு பூனேவிலுள்ள திரைப்படக் கல்லூரியில் சேரும் எண்ணத்தில் ஹிந்தி மொழியை கற்றுக்கொடுத்த தட்டச்சு பயிற்சி நிலையமொன்றில் சேர்ந்தது வாழ்க்கையில் ஒரு தனி அனுபவம். பூனேவுக்கு செல்லவில்லை என்பது ஒருபுறம், ஒரு முறை தேர்வெழுதும் போது, பார்த்து எழுதினால்தானே தப்பு எனவே கண்காணிப்புக்காக வந்தவரிடம் கேட்டே எழுதலாம் என்ற எண்ணத்தில், கோட்டை என்பதற்கு இந்தியில் என்ன சார் என்று கேட்க, அவரும் தம்பி, எல்லாமே நம்ம தமிழ் போலத்தான். கோட்டைனு தமிழ்ல சொல்றதை கோட்னு சொன்னா அது இந்தி என்றார். அவர் சொன்னது சரியில்லை என்றபோதும் அதையே எழுதி மதிப்பெண்ணை கோட்டை விட்டதுதான் வேடிக்கை. சரி, கோட்டை நகராயிருந்த பெய்ஜிங் மற்றும் அதன் நுழைவாயில்களை பற்றிய தகவல்கள் இதோ உங்களுக்காக.
1 2 3