• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-09-09 11:24:36    
லிச்சிங்மிங்கின் கல்விப் பாதை

cri
16 வயதான லிச்சிங்மிங், சீனாவின் வடமேற்குப் பகுதியிலுள்ள கான்சூ மாநிலத்தின் பெய்யின் நகரில் இடை நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவர் ஆவார். அவர், மலைப் பிரதேசத்தில் பிறந்தவர். அவரது குடும்பத்தினர் தலைமுறை தலைமுறையாக வேளாண்துறையில் ஈடுபட்டவர்கள். இத்தகைய வறிய குடும்ப சூழ்நிலையால், அவர் பள்ளிக்குச் சென்று கல்வி கற்பது ஆடம்பரமாக மாறியது. தனது அக்கா மற்றும் அண்ணன் கல்வி பெறுவதற்கு ஆதரவளிக்க வேண்டி, அவர் பள்ளிப் படிப்பை பாதியில், நிறுத்தவிருந்தார். 3 ஆண்டுகளுக்கு முன் நிறைவேற்றப்பட்ட சீன அரசின் கொள்கை ஒன்று, அவர் கல்வி கற்கின்ற கனவை நீடித்துள்ளது.
இனி கல்விக் கட்டணத்தை நாங்கள் வழங்கத் தேவையில்லை. அத்துடன், திங்கள்தோறும், பள்ளி எங்களுக்கு 70 யுவான் கல்வி உதவித் தொகை வழங்கி வருகிறது. கிராமப்புறங்களைச் சேர்ந்த மாணவர்களாகிய எங்களுக்கு, இது, மிக முக்கியமானது என்று லிச்சிங்மிங் கூறினார்.

சில ஆண்டுகளுக்கு முன், இந்தக் கொள்கை, சீனாவின் கிராமப்புறங்களில் சோதனை முறையில், நடைமுறையானது. இதன் மூலம், சீனக் கிராமப்புறங்களில் முழுமையாக இலவச கட்டாயக் கல்வி நிறைவேற்றப்பட்டது. இது, 20 ஆண்டுகளுக்கு மேலான கட்டாயக் கல்வித் திட்ட வளர்ச்சி வரலாற்றில், ஓர் அடிப்படை மாற்றமாகும்.
60 ஆண்டுகளுக்கு முன், நவ சீனா நிறுவப்பட்ட போது, சீனாவிலிருந்த 80 விழுக்காட்டுக்கு மேற்பட்டோர் எழுத்தறிவற்றவர். மாணவர்கள் பள்ளியில் சேர்ந்த விகிதம், 20 விழுக்காடு மட்டுமே. இடை நிலை பள்ளியில் சேர்ந்த விகிதம், 6 விழுக்காடு மட்டுமே. அதற்குப் பின், அடிப்படைக் கல்வியை பரவலாக்குவது எல்லா அரசுகளின் பணிகளில் முக்கிய அம்சமாக ஆக்கப்பட்டது.
1986ம் ஆண்டு, கட்டாயக் கல்வி சட்டத்தை, சீனா வெளியிட்டு நிறைவேற்றியது. சட்டமியற்றல் என்ற வடிவத்தில், 9 ஆண்டுக்கால கட்டாயக் கல்வி, முதல் முறையாக விதிக்கப்பட்டது. கட்டாயக் கல்வியில் சேர்ந்த குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் துவக்க மற்றும் இடை நிலைப் பள்ளிகளில் சேரும் உரிமைக்கு, இச்சட்டம் உத்தரவாதம் அளித்துள்ளது. அதற்குப் பின், சீனாவின் அடிப்படைக் கல்வி, விரைவாக வளர்ந்து வருகிறது. 2007ம் ஆண்டின் இறுதியில், சீனாவில் 99.3 விழுக்காட்டினர், கட்டாயக் கல்வியை பெற்றுள்ளனர். 2010ம் ஆண்டு, அனைத்து மக்களிடமும் கட்டாயக் கல்வி பரவலாக்கப்படும் இலக்கு, நனவாக்கப்படக் கூடும்.
ஆனால், அதிகமான மக்கள் தொகையால், சீனாவின் நிதித் தொகை, எல்லைக்குட்பட்டது. பல ஆண்டுகளாக, கட்டாயக் கல்வியின் சில கட்டணங்கள், பொது மக்களால் பொறுப்பேற்கப்பட வேண்டியிருந்தது. பல வறிய குடும்பங்களைப் பொறுத்த வரை, இது சிறிய செலவு அல்ல. லிச்சிங்மிங்கின் குடும்பத்தில், சில விளைநிலங்கள் தவிர, வருமானம் பெறும் வேறு வழியில்லை. முன்பு, கல்விக் கட்டணத்தை வழங்கும் போது, அவரது பெற்றோர் மிகவும் துன்பப்பட்டனர் என்று லிச்சிங்மிங் நினைவு கூர்ந்தார்.

இக்கொள்கை நிறைவேற்றப்படும் முன், ஆண்டுதோறும் நாங்கள் 400 யுவான் கல்விக் கட்டணத்தை செலுத்த வேண்டும். இது வாழ்க்கைச் செலவுடன் இணைந்தால், ஆண்டுதோறும் சுமார் ஆயிரம் யுவான் ரொக்கம் தேவைப்பட்டது. எமது குடும்பம், வறுமையாக இருந்தது. இத்தொகை செலுத்துவது கடினமாக இருந்தது என்று லிச்சிங்மிங் கூறினார்.
2006ம் ஆண்டு, சீன அரசு, திருத்தப்பட்ட கட்டாயக் கல்விச் சட்டத்தை வெளியிட்டது. கட்டாயக் கல்வி, நாட்டு நிதியால் உத்தரவாதம் செய்யப்படும் நிலையில் சேர்க்கப்பட்டது. அவ்வாண்டின் இலையுதிர் கால பாட தவணை துவங்கிய போது, இக்கொள்கை, முழுமையாக செயல்படுத்தப்பட்டது. இதனால் கிராமப்புற துவக்க மற்றும் இடை நிலைப் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள், எந்த கட்டணமும் கொடுக்கத் தேவையில்லை. அது மட்டுமல்ல, திங்கள்தோறும் அவர்கள், வாழ்க்கை உதவித் தொகையும் பெற முடியும்.
இக்கொள்கை செயல்படுத்தப்பட்ட பின், லிச்சிங்மிங்கின் தாய் சாங்சூய், மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.
இக்கொள்கை, எமது குடும்பத்தின் சுமையைக் குறைக்கிறது. நாட்டின் சிறந்த கொள்கை, எங்களை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்து வருகிறது என்று சாங்சூய் கூறினார்.
லிச்சிங்மிங்கின் குடும்பத்தினர் வாழ்கின்ற பிரதேசத்தில், வூச்சுவான் என்ற இடை நிலைப் பள்ளி இருக்கிறது. அங்கு, சுமார் 500 மாணவர்கள், லிச்சிங்மிங்கைப் போன்று, இக்கொள்கையினால் பயன் பெறுகின்றனர். 2007ம் ஆண்டில் மட்டும், கிராமப்புறங்களில் சுமார் 15 கோடி மாணவர்கள் பயன் பெற்றனர் என்று சீனக் கல்வி அமைச்சகத்தின் புள்ளிவிபரம் காட்டியது.

கிராமப்புறங்களில் மட்டுமல்ல, 2008ம் ஆண்டு செப்டம்பர் திங்கள் முதல், சீனாவின் பல்வேறு நகரங்களில் கட்டாயக் கல்விக் கட்டணத்தை அரசு நீக்கத் துவக்கியது.
இன்று, இத்துறையில் சீனாவின் நிதி ஒதுக்கீட்டின் அதிகரிப்புடன், கிராமப்புறங்களில் பல பள்ளிகளின் தோற்றத்தில், அதிகமான மாற்றங்கள் காணப்பட்டுள்ளன. வூச்சுவான் இடைநிலைப் பள்ளியின் அலுவலகத்தின் தலைவர் காவ்பிங்வென் மிகழ்ச்சியாகக் கூறியதாவது,
இக்கொள்கை, கிராமப்புற மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் நிர்ப்பந்தத்தைப் பெரிதும் தளர்த்துள்ளது. கிராமப்புறங்களில் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர், கல்வி பெறுவதற்கான ஊக்கத்தை உயர்த்தியுள்ளது. சீன அரசின் ஆதரவுடன், எமது பள்ளியில், ஆசிரியர்கள், வசதிகள், கற்கும் ச்சூழல் உள்ளிட்ட பல்வேறு துறைகள், பெரிதும் மேம்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.