• 2010两会• 上海世博会
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-11-20 18:41:43    
அமைதிகாப்பு நடவடிக்கையிலான சீனாவின் மாபெரும் பங்கு

cri

ஐ.நா அமைதிக்காப்பு நடவடிக்கைகளுக்கு சீனா ஆக்கப்பூர்வமான மனப்பான்மை காட்டி அதற்கென வழங்கிய நிதித் தொகை உலகளவில் 7வது இடத்தை பிடித்துள்ளது. ஐ.நா அமைதிக்காப்பு நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான துணைத் தலைமைச் செயலாளர் Alain Le Roy 20ம் நாள் பெய்சிங்கில் இவ்வாறு தெரிவித்தார்.
சீனா பங்கு கொண்டுள்ள அமைதிகாப்பு நடவடிக்கைகள் முற்றிலும் ஐ.நாவின் தலைமையின் கீழ் நடைபெறுகின்றன. இந்நடவடிக்கைகளில் கலந்து கொள்ளும் அளவை சீனா விரிவாக்கியதற்கு ஐ.நா வரவேற்பு தெரிவித்ததாக Alain Le Roy கூறினார்.


கடந்த 20 ஆண்டுகளில் சீனா 24 அமைதிக்காப்பு நடவடிக்கைகளில் பங்கு எடுத்துள்ளது. 14 ஆயிரம் படையினர் இதற்கு அனுப்பப்பட்டனர். தற்போது ஈராயிரத்து நூற்றுக்கு மேலான காவற்துறையினர், ராணுவ மற்றும் குடியியல் பிரிவு அதிகாரிகள் ஆகியோர் சூடானின் டார்பூர், கின்ஷாஷா காங்கோ, ஹெய்தி உள்ளிட்ட 10 இடங்களில் கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.