|
கடந்த சில ஆண்டுகளில், சீனாவின் மேற்குப் பகுதி தொழில் நுட்ப ஒதுக்கீட்டுத் தொகை பெரிதும் அதிகரித்தது. 2008ம் ஆண்டில் மேற்குப் பகுதியில் இத்துறைக்கான நிதி ஒதுக்கீட்டுத் தொகை, 12ஆயிரத்து 300கோடி யுவானுக்கு மேலாகும். இது, 2000ம் ஆண்டில் இருந்ததை விட 2.6 மடங்காகும். சீனாவின் மேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளிடையிலான இடைவெளி, மென்மேலும் குறைந்து வருகின்றது.
20ம் நாள் சீனத் தொழில் நுட்ப அமைச்சகத்திலிருந்து கிடைத்த தகவல் இதை கூறுகிறது.
நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்ட போதிலும், சீனாவின் மேற்குப் பகுதியில் இடர்ப்பாட்டு எதிர்ப்பு ஆற்றல் தெளிவாக காணப்பட்டது. இவ்வாண்டின் முதல் 9 திங்களில், மொத்த மேற்குப் பகுதியின் உற்பத்தி மதிப்பின் அதிகரிப்பு விகிதம், 12.5விழுக்காடாகும். இது, மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளை விட அதிகரித்தது. தொழில் நுட்ப ஆற்றலின் அதிகரிப்பு, மேற்குப் பகுதியின் உற்பத்தி மதிப்பின் அதிகரிப்புக்கான முக்கிய பங்காகும் என்பது குறிப்பிடத்தக்கத்து.
|