|
நவம்பர் 20ம் நாள், சர்வதேச குழந்தை நாளாகும். "குழந்தைகளின் உரிமை பற்றிய பொது ஒப்பந்தம்" வெளியிடப்பட்ட 20வது ஆண்டுநிறைவைக் கொண்டாடும் வகையில், "உலக குழந்தைகளின் நிலைமை" பற்றிய சீன மொழியிலான அறிக்கையை, ஐ.நாவின் குழந்தை நிதியமும் சின்குவா செய்தி நிறுவனமும் 20ம் நாள் பெய்சிங்கில் கூட்டாக வெளியிட்டன. பல ஆண்டுகால முயற்சிகளால், சீன குழந்தைகளின் நிலைமை பெருமளவில் மேம்பட்டுள்ளது. இவ்வறிக்கை வெளியீட்டில் கலந்து கொண்ட சீன அரசவையின் மகளிர் மற்றும் குழந்தைப் பணிக்குழுவின் நிரந்தர துணைத் தலைவர் சூ ஃபென்ஜி அம்மையார் இவ்வாறு தெரிவி்த்தார். சீன குழந்தைகளின் உடல் நலம், ஊட்டசத்து, கல்வி உள்ளிட்ட முக்கிய இலக்குகள், ஐ.நாவின் புத்தாயிரம் ஆண்டிற்கான வளர்ச்சி இலக்கை அடைந்துள்ளன என்று அவர் விவரித்தார்.

ஆரம்ப கல்விக்குப் பள்ளிகளில் சேருகின்ற குழந்தைகளின் விகிதம் 99.54ஆகும். குழந்தை வளர்ச்சிக்கு பொருத்தமான சமூகச்சூழ்நிலை மேலும் மேம்பட்டுள்ளது என்று தெரிகின்றது.
|