• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-06-04 10:21:57    
கடந்த 60 ஆண்டுகளில் நவ சீனாவின் தேசிய ஆற்றல் வளர்ச்சி

cri

2008ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் நாள், 29வது ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, சீன தலைநகர் பெய்ஜிங்கில் துவங்கியது. 204 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள், ஒன்றுகூடி மகிழ்ந்தனர். உலகில் கோடிக்கணக்கான மக்கள், விளையாட்டுப் போட்டிகள் ஏற்படுத்திய மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

16 நாட்களுக்கு பின், ஒலிம்பிக் புனிதத் தீபம், பறவைட்சாடு என்ற சீன தேசிய விளையாட்டரங்கில் அணைக்கப்பட்டது. நிறைவு விழாவில், சர்வதேச ஒலிம்பிக் ஆணையத்தில் அமைப்பின் தலைவர் ஜாக்குஸ் ரோக், பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை மனப்பூர்வமாக பாராட்டினார். அவர் கூறியதாவது—

பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் மூலம், உலகம், சீனாவை மேலும் அறிந்து கொண்டது. சீனாவும், உலகத்தை மேலும் அறிந்து கொண்டது. பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, ஒரு மாபெரும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியாக அமைந்தது என்றார் அவர்.

நவ சீனா நிறுவப்பட்ட துவக்கக்காலத்தில், தொழிற்துறை மயமாக்கத்தில் மேன்மை கொண்ட சீன மக்கள், 100க்கு மேலான பெரிய அடிப்படை திட்டப்பணிகளை திட்டமிட்டு செயல்படுத்தினர். நாட்டின் ஒட்டுமொத்த ஆற்றல் வளர்ச்சிக்கு, இத்திட்டப்பணிகள் சிறந்த அடிப்படையை உருவாக்கின.

1978ம் ஆண்டு சீனாவில், சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது. இது பொருளாதார ஆக்கப்பணியை, தேசிய வளர்ச்சியின் முக்கிய அடிப்படையாக கொண்டுள்ளது. சீனா, நவீனமயமாக்கத்தை நோக்கி நடைபோடும் வேகமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

1980ம் ஆண்டு செப்டம்பர் 30ம் நாள், 48 வயதான லியு குய் சியன், பெய்ஜிங்கில் உணவகம் ஒன்றை திறந்தார். அக்கடை திறப்பை கொண்டாட பட்டாசு ஒலித்தப் போது, உணவகத்தின் வெளியே பலர் நீண்ட வரிசையில் காத்து நின்று உணவு உண்டனர். சீனாவில் தனிநபர் நிர்வகித்த முதல் உணவகம், இதுவே. மூதாட்டி லியு குய் சியேன் கூறியதாவது—

அன்று மழை பெய்தது. 100க்கு மேலானோர் குடை பிடித்து கொண்டு, நீண்ட வரிசையில் காத்து நின்றனர். எனது முயற்சி வீண்போகவில்லை. பட்டாசு ஒலித்த பின், பலர், உணவகத்துக்குள் வந்தனர் என்றார் அவர்.

இவ்வுணவகம், லியு குய் சியனுக்கு இன்பமான வாழ்க்கையை வழங்கியது. தற்போது அவர், துணைவியாருடன், பெய்ஜிங் புறநகரில் அழகிய தோற்றமுடன் கூடிய வீடுகளை வாங்கி, அமைதியாக வாழ்கின்றனர்.

சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி மேற்கொள்ளப்பட்ட பின், சீனாவில் அதிகமான மாற்றங்கள் நிகழ்ந்தன. பொருளாதார மாதிரியும், திட்ட பொருளாதாரத்திலிருந்து, சந்தைப் பொருளாதாரத்துக்கு மாறியது. இம்மாற்றம், சீனப் பொருளாதார வளர்ச்சிக்கு உயிராற்றலை வழங்கியது. வணிகப் பொருட்களின் வினியோகம் செழுமையாகியது. சீனாவுக்கான முன்னாள் பாலஸ்தீன தூதர் சாஃபாழினி, பதவியிலிருந்து விலகிய பின்னரும், சீனாவில் தொடர்ந்து தங்குகின்றார். தற்போதைய சீன சந்தை, உண்மையான சுதந்திர சந்தையாகும் என்று அவர் வர்ணிக்கின்றார். அவர் கூறியதாவது—

தற்போது, சீனாவின் வணிக மையங்களில் நுழைந்தால், பல்வகை வணிகப் பொருட்களை நாம் பார்க்கலாம். வணிகர்கள், ஆங்கிலம் ரஷிய மொழி உள்ளிட்ட பல மொழிகளில், வாடிக்கையாளர்களுக்குப் பொருட்கள் பற்றி விவரிக்கின்றனர். அவர்களுடன் நீங்கள் பேரம் பேசியும் பொருட்களைவாங்கலாம் என்று அவர் கூறினார்.

27 வயதான மா யுங் லியாங், ஒரு தொழில் நிறுவனத்தில் வேலை செய்கின்றார். ஏப்ரல் திங்களில், அவர் சீருந்து ஒன்றை வாங்கினார். அவர் கூறியதாவது—

தற்போது பலர் சீருந்துகளை வாங்குகின்றனர். ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகால வருமான சேமிப்பை பயன்படுத்தி, ஒரு சீருந்து வாங்கலாம். காரை வாங்கிய பின், புறநகரில் சுற்றுலா மேற்கொள்ளலாம். இனிமேல் அலுவலகம் செல்லும்போது பேருந்தில் செல்ல வேண்டியதில்லை என்றார் அவர்.

புள்ளிவிபரங்களின் படி, 2008ம் ஆண்டு சீனாவின் மொத்த பொருளாதார ஆற்றல், 1952ம் ஆண்டில் இருந்ததை விட, 400 மடங்கு அதிகரித்துள்ளது. இது உலகில் 4வது இடம் வகிக்கின்றது. நபர்வாரி உற்பத்தி மதிப்பு 3000 அமெரிக்க டாலரை தாண்டியுள்ளது.

வாழ்க்கை செழுமையானது. சீனர்கள், புதிய வீடுகளையும் சீருந்துகளையும் வாங்குவது மட்டுமல்ல, சுற்றுலா பயணம் மேற்கொள்கின்றனர். வெளிநாட்டுக்கான திறப்பு அளவு இடைவிடாமல் அதிகரித்ததோடு, சீன பயணிகள், பல்வேறு நாடுகளில் பயணம் மேற்கொள்கின்றனர். திரு ஹாவ் சின், வெளிநாடுகளில் பயணம் மேற்கொள்ள விரும்புகின்றார். அவர் கூறியதாவது—

ஓராண்டு அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நான் வெளிநாட்டில் பயணம் மேற்கொள்கின்றேன். பிரிட்டன், சிங்கப்பூர், மலேசியா முதலிய நாடுகளில் நான் பயணம் மேற்கொண்டேன். பத்தாண்டுகளுக்கு முன், இதை நான் கற்பனை செய்திருக்கவில்லை. அப்போது, சீன மக்கள், உள் நாட்டில் பயணம் மேற்கொண்டாலே, மிகவும் மகிழ்ச்சியடைவர் என்று அவர் குறிப்பிட்டார்.

அடுத்த ஆண்டு திரு ஹாவ், வெளிநாட்டில் பயணம் மேற்கொள்ளப் போவதில்லை. ஷாங்ஹாய் மாநகரில் சுற்றுலா மேற்கொள்ள அவர் திட்டமிட்டுள்ளார். ஏனென்ரால் அடுத்த மே திங்கள், உலகப் பொருட்காட்சி, ஷாங்ஹாய் மாநகரில் நடைபெறும்.