• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-06-04 10:22:17    
நவ சீனாவின் தூதாண்மைத் துறையிலான ஒளிவீசும் முன்னேற்றங்கள்

cri

கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களாகிய நாங்கள், கம்யூனிசம் மற்றும் சோஷியலிச அமைப்புமுறை நல்லது என்று நாங்கள் நம்புகின்றோம். ஆனால், தனிநபரின் சிந்தனை மற்றும் கருத்து, பல்வேறு நாடுகளின் அரசியல் அமைப்புமுறை ஆகியவை இக்கூட்டத்தில் பரப்புரை செய்யப்பட வேண்டியதில்லை. கருத்து வேற்றுமையை உருவாக்குவதற்கு பதிலாக, பொது கருத்துக்களை உருவாக்குவதே சீன பிரதிநிதிக் குழுவின் நோக்கமாகும்.
1955ம் ஆண்டு நடைபெற்ற பாண்டுங் மாநாட்டில், நவ சீனாவின் முதலாவது சீனத் தலைமை அமைச்சரும் வெளியுறவு அமைச்சருமான சோஎன்லாய் இவ்வாறு தெரிவித்தார்.
சர்வதேச நிலைமை இடைவிடாமல் மாறி வருகின்ற போதிலும், பஞ்ச சீல கோட்பாடுகளில் சீனா எப்போதும் ஊன்றி நிற்கிறது. இது, சீனா மென்மேலும் அதிகமான நண்பர்களை, குறிப்பாக வளரும் நாடுகள் என்ற நண்பர்களை கொள்வதற்கு முக்கிய காரணமாகும். நவ சீனா நிறுவப்பட்ட போது, மேலை நாடுகளின் தடையால், சீனாவுடன் தூதாண்மை உறவை நிறுவிய நாடுகளின் எண்ணிக்கை பத்துக்கு மேல் மட்டுமே. தற்போது, சீனாவுடன் தூதாண்மை உறவை நிறுவிய நாடுகளின் எண்ணிக்கை 171ஐ எட்டியது குறிப்பிடத்தக்கது.
1949ம் ஆண்டின் அக்டோபர் 2ம் நாள், நவ சீனா நிறுவப்பட்ட 2ம் நாள், சீனாவுடன் தூதாண்மை உறவை நிறுவுவதாக, சோவியத் யூனியன் அறிவித்தது. சீனாவுடனான தூதாண்மை உறவை ஏற்படுத்திய முதல் நாடாகும். 1991ம் ஆண்டின் டிசம்பர் திங்களில் சோவியத் யூனியன் கலைக்கப்பட்ட பின், ரஷியா சீனாவுடனான தூதாண்மை உறவை தொடர்ந்து நிலைநிறுத்தி வருகிறது.
கடந்த நூற்றாண்டின் 60ம் 70ம் ஆண்டுகளில், சீனாவுக்கும் மேலை நாடுகளுக்கும் இடையிலான உறவு இயல்பான நிலைக்கு படிப்படியாக திரும்பியது. அப்போது, சீனாவும் அமெரிக்காவும் தூதாண்மை உறவை நிறுவின.


புகழ்பெற்ற மேசை பந்து தூதாண்மை, சீனாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையில் 20க்கு மேற்பட்ட ஆண்டுகளாக துண்டிக்கப்பட்ட தொடர்பு மீட்டுள்ளது. 1971ம் ஆண்டு, அமெரிக்க அரசின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் Henry Kissinger ரகசியமாக சீனாவுக்கு வந்து இணக்கம் செய்தன் மூலம், அப்போதைய அரசுத் தலைவர் Richard Nixon சீனாவில் பயணம் மேற்கொண்டார். சீன-அமெரிக்க கூட்டறிக்கையை வெளியிட்ட பின் தான், இரு நாட்டுறவு முன்னேற்றம் பெற்றது. 1979ம் ஆண்டின் ஜனவரி திங்கள், சீனாவும் அமெரிக்காவும் தூதாண்மை உறவை அதிகாரப்பூர்வமாக நிறுவின.
2009ம் ஆண்டு ஏப்ரல் திங்களில், சீன அரசுத் தலைவர் ஹு சிந்தாவும் அமெரிக்க அரசுத் தலைவர் பராக் ஒபாமாவும் இலண்டனில் சந்திப்பு நடத்தினர். 21வது நூற்றாண்டில் ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பு மற்றும் பன்முக இருதரப்பு உறவை உருவாக்குவது பற்றி அவர்கள் பொது கருத்துக்களை எட்டினர். இரு நாடுகளின் எதிர்கால வளர்ச்சிக்கு, இது புதிய இலக்குகளை உருவாக்கியது.
1971ம் ஆண்டின் அக்டோபரில் 26வது ஐ.நா பொது பேரவை கூட்டத்தில், அறுதிப் பெரும்பான்மை வாக்குகளில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 2758ம் ஆவணம். ஐ.நாவிலுள்ள சீன மக்கள் குடியரசின் சட்டரீதியான உரிமைகள் அனைத்தும் மீட்கப்பட்டதை உறுதிபடுத்தியது.


ஐ.நாவிலுள்ள சீனாவின் தகுநிலை மீட்கும் பணியில், ஐ.நாவுக்கான சீன நிரந்தர முதன்மை பிரதிநிதி லிங் சிங் பங்கெடுத்தார். இதை நினைவு கூரும் போது, அவர் கூறியதாவது
மிகப் பெரிய அரசுகளிடை சர்வதேச அமைப்பான ஐ.நாவில் நவ சீனாவின் தகுநிலை மீட்கப்பட்டமை, தூதாண்மை ரீதியில் சீனா பெற்ற மிகப் பெரிய வெற்றியாகும். உலகின் பார்வையில் கூறினால், இதுவும் பெரிய வெற்றிகரமான செயலாகும். ஏனென்றால், சீனா மேற்கொள்ளும் தூதாண்மை கொள்கை, உலகின் அமைதியை பேணிக்காத்து, கூட்டு வளர்ச்சியை விரைவுபடுத்தி, 3வது உலகத்தை ஆதரிப்பதை முன்மொழிகிறது. இது, சீனாவின் அடிப்படை கோட்பாடு மற்றும் கொள்கையாகும். இத்தகைய தொரு அரசியல் ஆற்றல் ஐ.நாவில் பங்கெடுத்த பின், தனது தொடர்புடைய செல்வாக்கை வெளிப்படுத்தும் என்று லிங் சிங் குறிப்பிட்டார்.
ஐ.நாவிலான தனக்குரிய தகுநிலையை பெற்ற சீனாவுக்கும் ஐ.நாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பில் புதிய பக்கம் திறந்து வைக்கப்பட்டது. அத்துடன், சீனாவின் பல தரப்பு தூதாண்மை நடவடிக்கைகள் படிப்படியாக மேற்கொள்ளப்பட்டன. 1978ம் ஆண்டுக்கு முந்தைய சுமார் 30 ஆண்டுகளில், பல தரப்பு தூதாண்மை நடவடிக்கைகளில் சீன தலைவர்கள் 6முறை மட்டுமே கலந்து கொண்டனர். இது வரை, அரசுகளிடையிலான 100க்கு அதிகமான சர்வதேச அமைப்புகள், 300க்கு மேற்பட்ட சர்வதேச பொது ஒப்பந்தங்கள் மற்றும் ஐ.நாவின் 22 அமைதி காப்பு நடவடிக்கைகளில், சீனா பங்கேற்றுள்ளது. சீனா அனுப்பிய அமைதி காப்புப் பணியாளர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தை தாண்டியது என்பது குறிப்பிடத்தக்கது.


21வது நூற்றாண்டில் நுழைகையில், இணக்கமான உலகம் என்ற கருத்தை சீனா முன்வைத்தது. இது குறித்து, நடப்பு சீன வெளியுறவு அமைச்சர் யாங் சியேசு கூறியதாவது
தற்போதைய உலக நிலைமையில், தூதாண்மை, ஒரு தரப்பின் நலன் அதிகரிக்கும் வேளையில் மற்றொரு தரப்பின் நலன் குறையும் படியான போட்டி அல்ல. இதற்கு பதிலாக, இது, இரு தரப்புக்கும் நலன் தந்து, கூட்டு வெற்றி பெறும் நிலைமையாகும். இணக்கம், ஒத்துழைப்பு, இரு தரப்பு நலன் மற்றும் கூட்டு வெற்றி என்ற கண்ணோட்டம், சீனத் தூதாண்மையின் நிலையான நிலைப்பாடாகும் என்று யாங் சியேசு கூறினார்.