தொழிற்துறை மேம்பாடு திட்டம்
2010-02-04 13:52:04 cri எழுத்தின் அளவு: A A A
தொழிற்துறைகளின் கட்டமைப்புச் சீர்திருத்தத்தை முன்னேற்றும் வகையில், "அகற்றப்பட வேண்டிய பின்தங்கிய உற்பத்தி ஆற்றல், தொழில் நுட்பம் மற்றும் உற்பத்திப் பொருட்களின் பட்டியலை ", சீனத் தேசிய பொருளாதார வர்த்தக ஆணையம் 1999ம் ஆண்டு பிப்ரவரி 2ம் நாள் வெளியிட்டது. தொழில் நிறுவனங்கள் சந்தையை தலைமையாகக் கொண்டு செயல்படுவதற்கு வழிகாட்டி, பின்தங்கிய உற்பத்தி ஆற்றலைப் படிப்படியாக குறைத்து அகற்றுவது, அதன் நோக்கமாகும். நிலக்கரி, உலோகவியல், எண்ணெய் மற்றும் வேதியியல், நெசவு, இயந்திரங்கள் உள்ளிட்ட 10 தொழிற்துறைகள் இப்பட்டியலில் சேர்க்கப்பட்டன. அரசின் சட்டவிதிகளில் தடை விதிக்கப்பட்ட தொழில் நுட்பம், உற்பத்திப் பொருட்கள், பின்திங்கிய உற்பத்தி வழிமுறை, தரமற்ற உற்பத்திப் பொருட்கள், கடுமையான சுற்றுச்சூழல் மாசுபாடு, அதிக எரியாற்றல் செலவு ஆகியவை, இந்த பட்டியலை உறுதிப்படுத்தும் வரையறையாகும்.
தொடர்புடைய செய்திகள்