ஆசிய-பசிபிக் பிரதேசத்தை சேர்ந்த 13 நாடுகளின் கடற்படைகள் 5ம் நாள் இந்தியாவின் கிழக்குப் பகுதிலுள்ள அண்டமான் நிக்கோபார் தீவுகளின் பலைர் துறைமுகத்தில் கூட்டுப் பயிற்சி துவக்கின. கடற்கொள்ளையர் எதிர்ப்பு, மனித நேய உதவி உள்ளிட்ட துறைகளில் கடற்பரப்பிலான ஒன்றிணைப்பு ஆற்றலை வலுப்படுத்துவது நடப்பு கூட்டு ராணுவப் பயிற்சியின் நோக்கமாகும் என்று இந்திய கடற்படையின் தலைவர் குழுத் தலைவர் வெர்மா நேற்று செய்தி ஊடகங்களுக்கு கூறினார்.
நடப்பு கூட்டு ராணுவப் பயிற்சியின் பெயர் மிரான்-2010 என்பதாகும். இதில் கலந்து கொள்ள இந்திய கடற்படை 5 போர் கப்பல்களையும், சிங்கப்பூர், மியன்மார், இலங்கை, தாய்லாந்து முதலிய நாடுகளின் கடற்படைகள் தனித்தனியாக 9 போர் கப்பல்களையும் அனுப்பின. இந்த கூட்டு பயிற்சி 8ம் நாள் வரை நீட்டிக்கும்.




அனுப்புதல்




