நேபாளத்தில் ஐ.நாவின் பிரதிநிதிக் குழுவால் நிர்ணயிக்கப்பட்டபடி தகுதியற்றவர்களாக கருதப்பட்ட 268 ஆயுதப் படையினர், 8ம் நாள் நேபாளத்தின் மேற்குப் பகுதியில் படையிலிருந்து நீக்கப்பட்டனர். ஒரு திங்கள் காலம் நீடித்த, ஆயுதப்படையில் இளம் வயதில் சேர்ந்தவர்களை, படையிலிருந்து நீக்கி, இயல்பு வாழ்க்கைக்கு, சமூக நீரோட்டத்துக்கு அனுப்பும் பணி, இத்தோடு நிறைவடைந்தது.
காட்மாண்டுவின் மேற்கில் 270 மிலோமீட்டர் தூரத்திலுள்ள Rolpa மாவட்டத்தில் இதற்கான சிறப்பு நிகழ்வு நடைபெற்றது. நேபாள மாவிச கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் Pushpa Kamal Dahal, நேபாளத்திலுள்ள ஐ.நா பிரதிநிதிக் குழுவின் தலைவர் Karin Landgren முதலியோர், இவ்விழாவில் கலந்து கொண்டனர்.