• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன மக்களுக்குப் பாகிஸ்தான் அரசுத்தலைவரின் வாழ்த்துக்கள்
  2010-02-09 20:10:11  cri எழுத்தின் அளவு:  A A A   
பாகிஸ்தான் அரசுத்தலைவர் Asif Ali Zardari 8ம் நாள், தலைநகர் இஸ்லாமாபாத்தில், பாகிஸ்தானுக்கான சீனத் தூதர் Luo Zhaohuiயைச் சந்தித்த போது, சீன மக்களுக்கு சீன பாரம்பரிய புலி ஆண்டுக்கான வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

உலகப் பொருளாதாரம் நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்டது. சீனா மட்டும் இந்த சாதகமற்ற நிலையைச் சமாளித்து, 8.7 விழுக்காடான பொருளாதார அதிகரிப்பு விகிதத்தை எட்டியது. புலி ஆண்டில், சீன மக்கள், மேலும் பெரிய வளர்ச்சிகளைப் பெறுவார்கள் என்று அவர் நம்பியதாக Asif Ali Zardari தெரிவித்தார்.

பாகிஸ்தானின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை, சர்வதேச பயங்கரவாத எதிர்ப்புப் போரின் ஒரு பகுதியாக இருக்கின்றது. சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு இலட்சியத்துக்கு பாகிஸ்தான் முக்கியமான பங்கு ஆற்றி பலி கொடுத்தது. பாகிஸ்தான் இந்த போரின் இறுதியில் வெற்றி பெறுவது திண்ணம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040