அண்மையில் கொரிய தீபகற்பத்தின் அணு ஆயுதப் பிரச்சினை குறிப்பிட்ட அளவில் தளர்ச்சியடைந்துள்ளது. ஆறு தரப்புப் பேச்சுவார்த்தையை மீண்டும் துவக்குவது கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதப்மின்மை போக்கை தொடர்ந்து முன்னேற்றுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாசோசியூ கூறினார்.
9ம் நாள் பெய்சிங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார். வட கொரிய அணு ஆயுதப் பிரச்சினை சிக்கலானது. உணர்வலைத் தன்மை வாய்ந்தது. பல்வேறு தரப்புகளின் நலனுடன் தொடர்புடையது. பேச்சுவார்த்தை, கலந்தாய்வு, அரசியல் மற்றும் தூதாண்மை வழிமுறைகளின் மூலம் அமைதியான முறையில் அணு ஆயுதப் பிரச்சினையை தீர்ப்பது பல்வேறு தரப்புகளின் கூட்டு நலனுக்குப் பொருந்திய சரியான தேர்வு முறையாகும். பல்வேறு தரப்புகள் வளைந்து கொடுக்கும் முறையில் ஆறு தரப்புப் பேச்சுவார்த்தை மீண்டும் துவங்குவதற்கான சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
சீனா இதற்காக ஆக்கப்பூர்வமாக முயற்சி மேற்கொண்டு வருகின்றது. பல்வேறு தரப்புகள் மற்றும் சர்வதேசச் சமூகத்துடன் இணைந்து கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதப்மின்மை நிறைவேற்ற சீனா விரும்புகின்றது என்று மாசோசியூ குறிப்பிட்டார்.




அனுப்புதல்




