சீன வணிகப்பொருட்களின் ஐரோப்பிய கண்காட்சி 8ம் நாள், பிரிட்டனின் இரண்டாவது பெரிய நகரான Birminghamஇல் தொடங்கியது. இது, ஐரோப்பிய சந்தையைத் திறந்து வளர்க்க, சீனத் தொழில் நிறுவனங்கள் மேற்கொண்ட புதிய நடவடிக்கையாகும்.
சீன வணிக அமைச்சகத்தின் அதிகாரி லீயுபுஃசியே அறிமுகப்படுத்தியதாவது:
சீன வணிக அமைச்சகம், ஷாங்காய் மாநகரம், குவாங்சோ மற்றும் நிங்போ நகரங்கள், புஃசியான் மாநிலம் ஆகியவை, இக்கண்காட்சியைக் கூட்டாக நடத்துகின்றன. இந்தக் கண்காட்சியின் மொத்த பரப்பளவு, 5000 சதுர மீட்டர். 180 தொழில் நிறுவனங்கள் இதில் கலந்துகொள்கின்றன. முன்கண்டிராத அளவுக்கு இது மிக பெரியதாகும் என்று அவர் கூறினார்.
சீனாவின் சொந்த வணிக சின்னமுடைய உற்பத்திப் பொருட்கள், இக்கண்காட்சி மூலம், பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் வரவேற்கப்படுவதற்கு, சீனத் துணை வணிக அமைச்சர் சூங் சான், நம்பிக்கை தெரிவித்தார். அவர் கூறியதாவது:
தரமிக்கது, விலை மலிவு என்பன, சீன உற்பத்தி பொருட்களின் தனிச்சிறப்பியல்பாகும். சீர்த்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புக் கொள்கை நடைமுறைக்கு வந்த பின், சீனாவுக்கும் பிரிட்டனுக்குமிடை தொடர்பு மென்மேலும் அதிகரித்து வருவதுடன், இரு தரப்புக்கிடை புரிந்துணர்வு வலுப்பட்டது. சீனாவின் உற்பத்திப் பொருட்கள் பிரிட்டனில் மேலதிகமாக வரவேற்கப்படுவது உறுதி என்று அவர் தெரிவித்தார்.
இப்போது, மேலும் அதிகமான சீனத் தொழில் நிறுவனங்கள், வணிகச் சின்னங்களைப் பயன்படுத்தி, ஐரோப்பிய சந்தையைத் திறந்து வளர்ப்பதில் கவனம் செலுத்தி வருகின்றன. சில சின்னங்கள் இருக்கின்ற போதிலும், சீனத்தொழில் நிறுவனங்கள், சொந்த வணிகச் சின்னங்களை உருவாக்குவது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்பட முன்னேறிய தொழில் நுட்ப உற்பத்தி கருத்துக்களைப் பயன்படுத்துவது முதலியவற்றின் மூலம், ஐரோப்பிய நுகர்வோரின் கவனத்தை ஈர்க்க முயற்சி செய்து வருகின்றன.
இந்தக் கண்காட்சி துவங்கியவுடன், ஏராளமான வாடிக்கையாளர் ஈர்க்கப்பட்டு, பொருட்களை வாங்க, இங்கு வந்துள்ளனர். இங்கிலாந்து தம்பதி ஜெஃப்ரி, சீனாவின் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வது வழக்கம். சீனா தயாரித்த உற்பத்தி பொருட்களின் தரத்தில் அவர்கள் நம்பிக்கை கொள்கின்றனர். அவர் கூறியதாவது:
கடந்த சில ஆண்டுகளாக சீனாவிலிருந்து பொருட்களை வாங்கி வருகின்றோம். அனைத்து பொருட்களும் தரமிக்கவை. மிக்க மகிழ்ச்சி என்று அவர் கூறினார்.





அனுப்புதல்




