சீனப் பொது பாதுகாப்புத் துறை அமைச்சர் meng jian zhu நேபாள உள்துறை அமைச்சர் Bhimbhadur Rawalஐ 8ம் நாள் பெய்ஜிங்கில் சந்தித்துரையாடினார்.
பாதுகாப்பு ஒத்துழைப்புத் துறையில் நேபாள தரப்பு வழங்கிய உறுதியான ஆதரவைப் பாராட்டுவதாக meng jian zhu தெரிவித்தார். தொலைநோக்குப் பார்வையுடன் பொது நிலைமையை அடிப்படையாகக் கொண்டு, நேபாளத்துடன் பரிமாற்றத்தை மேலும் வலுப்படுத்தி, ஒத்துழைப்பை ஆழமாக்கி, இரு நாட்டுறவின் சீரான வளர்ச்சி்யைத் தொடர்ந்து முன்னேற்ற விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
சீனாவுடனான நட்பு ஒத்துழைப்புறவில் நேபாளம் மிகவும் கவனம் செலுத்துகின்றது என்று Bhimbhadur Rawal கூறினார்.




அனுப்புதல்




